பூக்கள் செய்தல்

தேவையான பொருட்கள்:

  • தேவையில்லாத துணிகள் – 10 கலர்கள்
  • தென்னங்குச்சி – 10
  • பசை
  • பச்சை கலர் பசை டேப்

செய்முறை:

  • தென்னங்குச்சி நன்றாக கழுவி காயவைத்துக் கொள்ளவும்…
  • துணியில் 2″ அகலமும் 40″ நீளமும் அனைத்து கலரிலும் எடுத்துக்கொள்ளவும்
  • பின்பு ஒவ்வொரு துணியில் பாதியளவு நீளத்தில் மட்டும் ஒவ்வொரு நூலாக பிரித்துக்கொள்ளவும்.
  • அகலம் 1/4″ இருக்கும் வரைக்கும் பிரிக்கவும்…
  • இதே போல் அனைத்து கலரிலும் செய்து வைத்துக்கொள்ளவும்.

  • பின்பு குச்சியில் பசையை தடவி பிரிக்காத பகுதியை இறுக்கமாக சுற்றிக்கொண்டே வரவும்..

  • கடைசி யில் முடிக்கும் போது பசையை நன்கு தடவி ஒட்டிவிடவும்.. மீதம் உள்ள பகுதியை பச்சை பசை டேப் சுற்றி விடவும்…

  • அழகான பூ தயார்…


ஆக்கம்:
ரதிமகேஸ்வரன் smile.gif

பானை அலங்காரம் – 6

தேவையான பொருட்கள்:-
பானை – 1
உப்பு தாள் – 1
செராமிக் பவுடர் – 1கப்
பெவிக்கால் – தேவைக்கேற்ப
மணல் – 1/4கப்
fabric கலர்கள்
வார்னிஷ்
பிரஷ்

செய்முறை:-

* பானையை உப்புத்தாள் கொண்டு நன்கு தேய்க்கவும்.
* பின்பு நன்றாக தண்ணீரில் 1மணி நேரம் ஊறவைத்து காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.
* செராமிக் பவுடர், மணல், பெவிக்கால் ஆகிய மூன்றையும் இட்லி மாவு பதத்திற்கு உருவாக்கி கொள்ளவும்
* அந்த கலவையை பானை வெளிப்புறமும் உள்புறமும் பூசி 1நாள் முழுவதும் காய வைக்கவும்.

* பின்பு அதன் மேல் தேவையான கலரை அடிக்கவும்.
* 1/2 மணி நேரம் காயவைத்து வார்னிஷ் அடிக்கவும்.

* அழகான பூந்தொட்டி தயார்.

ஆக்கம்:

ரதிமகேஸ்வரன். smile.gif

« Older entries