சீரகச் சாதம்

Posted Image

தேவையான பொருட்கள்:

வேகவைத்த பாசுமதி சாதம் – 1கப்
சீரகம் – 1ஸ்பூன்
இஞ்சி துருவியது – 1ஸ்பூன்
பச்சைமிளகாய் பொடியாக நறுக்கியது – 1ஸ்பூன்
கொத்தமல்லி தழை – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
பட்டை, இலவங்கம், ஏலக்காய் – 2
நெய் – 1குழிக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் நெய் விட்டு காய்ந்தது பட்டை, இலவங்கம், ஏலக்காய் போட்டு வாசனை வரும் வரை வதக்கவும். பின்பு அதனுடன் சீரகத்தை போடவும்… நன்கு சீரகம் பொரிந்து வந்தவுடன் இஞ்சி, பச்சைமிளாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

அதனுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து வதக்கவும். பின்பு வேகவைத்த சாதத்தை அதில் சேர்த்து நன்கு கிளறி 5நிமிடம் தம்மில் வைக்கவும். அடுப்பை அனைத்துவிட்டு நன்கு கிளறி பரிமாறவும்.

இதனுடன் அனைத்துவகை தயிர் பச்சடி, குருமாவும் பொருத்தமாக இருக்கும்.

ஆக்கம்:  ரதிமகேஸ்வரன்Posted Image

Advertisements

காரட் சாதம்

Posted Image

தேவையான பொருட்கள்:

காரட் துருவியது – 1/2கப்
வேகவைத்த சாதம் – 1கப்
இஞ்சி துருவியது – சிறிதளவு
பச்சைமிளகாய் – 2
கறிமசாலாத்தூள் – சிறிதளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் நெய் ஊற்றி கறிமசாலாத்தூள், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

அதனுடன் துருவிய காரட், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும்.

பின்பு அதில் வேகவைத்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறி ஒரு 5நிமிடம் வைக்கவும்…

சுவையான காரட் சாதம் தயார். இதற்கு தயிர் பச்சடி பிரமாதமாயிருக்கும்.

ஆக்கம்:  ரதிமகேஸ்வரன்Posted Image

« Older entries