இனிப்பு கம்பங்களி

 

தேவையானப் பொருட்கள்:

  • கம்பு மாவு – 2கப்
  • கருப்பட்டி தண்ணீர் – 1கப்
  • ஏலக்காய் தூள் – சிறிதளவு
  • உப்பு – சிறிதளவு
  • நல்லெண்ணெய் – 2ஸ்பூன்
  • உடைத்த முந்திரி – 10

 

செய்முறை:

கருப்பட்டி தண்ணீர் செய்ய கருப்பட்டியை உடைத்து தண்ணீரில் கரைத்து அல்லது வாணலியில் வைத்து உருக்கி மண் இல்லாமல் வடிக்கட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியில் கருப்பட்டித் தண்ணீர், உப்பு, ஏலக்காய் தூள், நல்லெண்ணெய் சேர்த்து கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்தவுடன் கம்பு மாவை சேர்த்து நன்கு கிளறி சுருண்டு வந்தவுடன் முந்திரிப் பருப்பை சேர்த்து இறக்கவும்.

சுவையான கம்பங்களி தயார்…

இதனை சாயங்கால வேலையில் சாப்பிடலாம்.

ஆக்கம்:  ரதிமகேஸ்வரன்Posted Image

Advertisements

நெல்லிக்காய் ஜாம்

Posted Image
தேவையான பொருட்கள்:

பெரிய நெல்லிக்காய் – 20
வெல்லம் – 1/4கிலோ
தண்ணீர் – 1கப்
இஞ்சி – சிறு துண்டு
உப்பு – சிறிதளவு
ஏலக்காய்த் தூள் – சிறிதளவு

செய்முறை:

நெல்லிக்காயை நன்கு கழுவி குக்கரில் 6விசில் வைத்து  ஆறியதும் தசை பகுதியை மட்டும் தனியாக எடுத்து மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். இதனுடன் இஞ்சியையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்…

வாணலியில் வெல்லம், நெல்லிக்காய் வேகவைத்த தண்ணீர் சேர்த்து வெல்லம் கரையும் வரை காய்ச்சவும்… கரைந்த பிறகு வடிகட்டில் வடித்து வைத்துக்கொள்ளவும்..

வாணலியில் வடிக்கட்டிய வெல்லத் தண்ணீர், அரைத்த நெல்லிக்காய் விழுது, உப்பு சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். கடைசியாக ஏலக்காய் தூள் தூவி கிளறி இறக்கவும்..

இதனை இட்லி, தோசை, பிரட், சப்பாத்தி ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணலாம்…

ஆக்கம்:  ரதிமகேஸ்வரன்Posted Image

« Older entries