பானை அலங்காரம் – 5

தேவையான பொருட்கள்:

* பானை – சிறியது
* உப்புத் தாள்
* oil கலர்கள் – கருப்பு மற்றும் வெள்ளை
* பிரஷ்
* வார்னிஸ்

செய்முறை:-

* பானையை உப்புத்தாள் கொண்டு நன்கு தேய்க்கவும்.
* பின்பு நன்றாக தண்ணீரில் 1மணி நேரம் ஊறவைத்து காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.
* பானை முழுவதும் வெள்ளை கலர் அடிக்கவும்.
* 1மணி நேரம் காயவிடவும்.
* அதன் மேல் கருப்பு கலரை அடிக்கவும்… (ஆயில் கலர் வழுவழுப்பாக இருப்பதால் ஒட்டாது… அதுவே டிசைன் போல வரும்…
* கழுத்து பகுதி முழுவதும் கருப்பு கலர் அடிக்கவும்.
* நன்கு காய்ந்த பிறகு வார்னிஸ் அடித்து நிழலில் 1நாள் முழுவதும் காயவிடவும்.

* அழகான பூந்தொட்டி தயார்.

ஆக்கம்:
ரதிமகேஸ்வரன். 🙂
Advertisements

பானை அலங்காரம் – 4

தேவையான பொருட்கள்:

 • சிறிய பானை – 1
 • சணல் கயிறு – தேவையான அளவு
 • பெவிக்கால்
 • fabric கலர்
 • கிளாஸ் கலர்கள்
 • கிளிட்டர்ஸ்
 • வார்னிஸ்


செய்முறை:

 • பானையை உப்புத்தாள் கொண்டு நன்கு தேய்க்கவும்.
 • பின்பு நன்றாக தண்ணீரில் 1மணி நேரம் ஊறவைத்து காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.
 • முதலில் கருப்பு கலரை பானை முழுவதும் அடிக்கவும். ஒரு மணிநேரம் காயவிடவும்.

 • சணல் கயிற்றை சடை பின்னல் போல் தேவையான அளவு பின்னி வைத்துக் கொள்ளவும்.
 • பானை முழுவதும் பெவிக்கால் தடவி சடைபின்னல் பின்னிய கயிற்றை சுற்றவும்.
 • நன்கு 3மணி நேரம் காயவிடவும்.
 • பின்பு அதன் மேல் கிளாஸ் கலர்களை அடிக்கவும்.
 • அது காயவதற்குள் கிளிட்டர்ஸை தூவி விடவும்.

 • நன்கு காய்ந்த பின்பு வார்னிஸ் அடித்து நிழலில் 24மணிநேரம் காயவிடவும்.
 • அழகான பூந்தொட்டி தயார்.

ஆக்கம்:
ரதிமகேஸ்வரன். smile.gif

« Older entries Newer entries »