அன்புள்ள தங்கச்சி! – 13

அன்புள்ள தங்கச்சி!

பாகம் – 13

கார்த்திக் மிகவும் ஆவலோடு அப்பாவின் மூலமாவது பிரியாவின் ஆசையை நிறைவு செய்ய வேண்டும் என்று வாசலில் இரவு வரை காத்திருந்தான்! அதிக நேரம் காத்திருந்தும் தந்தை வரமால் இருந்ததும் சோர்வு தாளாமல் அப்படியே வாசலின் கதவு ஓரத்தில் தலை வைத்து உறங்கி விட்டான்.

கார்த்தி………கார்த்தி…… என்று அம்மா கத்தியவுடன் கார்த்திக் தூக்கத்தில் இருந்து மீண்டான். அம்மா…..அம்மா……..அப்பா வந்துட்டாங்களா என்று கூறிக்கொண்டே வீட்டீற்குள் ஓடினான். அம்மா அப்பா வந்துட்டாங்களா நான் அசந்து தூங்கிவிட்டேன் நான் பார்க்கவில்லை….எங்கே அப்பா என்று ஆவலுடன் அம்மாவின் முகத்தை பார்த்து கேட்டான்.

இல்லடா கார்த்தி. அப்பா இன்னும் வரவில்லை… வேலை முடிந்தும் இன்னும் ஏன் வரவில்லையோ, இன்னும் வேலை இருக்குமோ என்று தன் மனதில் ஆறுதல் கூறி
கார்த்திக்கை ஆசுவாசப் படுத்தினாள்….

இதனையெல்லாம் பிரியா பார்த்துக்கொண்டே இருந்தாள். அண்ணா….அண்ணா….. இங்கே வாயேன்.. என்று தான் படுத்திருந்த இடத்திற்கு கூப்பிட்டாள்… கார்த்திக்கும் சென்றான்…. ஏன் அண்ணா கவலை படுற…….. நான் ஒன்னும் ஏமாற்றம் அடையவில்லை…. எனக்கு செருப்பே வேண்டாம் அண்ணா நீ கவலைப் படாத என்று தன் கையால் கார்த்திக்கின் அழுகை வந்து காய்ந்து இருந்த கண்ணத்தை துடைத்தாள்.

இருவரும் பேசிக்கொண்டே அசந்து தூங்கி விட்டனர். அம்மாவும் எல்லா வேலையையும் பார்த்துவிட்டு கடைசி குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு அவளும் தூங்கச் சென்றாள்.

கார்த்திக்கின் அப்பாவிற்கு வேலை பார்த்த இடத்தில் அவர் நினைத்த தொகைக்கு மேலாகவே சம்பளம் கிடைத்தது. அது மட்டும் மல்லாமல் தொடர்ந்து இங்கே வேலை பார்த்தால் இதை மட பன்மடங்கு சம்பளம் தருகிறோம். நீ போய் உன் வீட்டில் சொல்லிவிட்டு வா என்று அவர்கள் கூறினார்கள். அவனும் சந்தோஷத்துடன் அவர் ஊருக்கு செல்ல பஸ் ஸ்டான்டிற்கு சென்றார்.

அப்போ கார்த்திக் சொன்னது நினைவுக்கு வந்தது. தங்கைக்கு செருப்பு வாங்கணும்ப்பா என்று கூறியது நினைவுக்கு வந்ததும் கடைத்தெருவுக்கு சென்றார். அங்கே பிரியாவுக்கு ஒரு செருப்பும் கார்த்திக்கு ஒரு செருப்பும் வாங்கி பையில் வைத்துக்கொண்டும் மனைவிக்கு ஒரு சேலையும் அனைவருக்கும் துணிமணிகளையும் இனிப்பு வகைகளையும் வாங்கிக் கொண்டு பஸ்ஸில் ஏறி உக்கார்ந்தார்.

வேலை பார்த்த அசதியில் அசந்து தூங்கினார். விடிந்ததும் அவர் ஊர் வந்தது. ஊர் வந்ததும் இறங்கி அவர் வீட்டிற்கு சென்றார். அங்கு பிரியாவும் கார்த்திக்கும் பல் துலக்கி கொண்டு இருந்தனர். அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுக்க வேண்டும் என்று நினைத்து அவர்களுக்கு தெரியாமல் பின்னே சென்று கையில் செருப்புடன் முன்னே வந்தார் அப்பா!

இருவரும் மகிழ்ச்சியில் எதுவும் பேசமுடியாமல் அப்பாவை கட்டிக்கொண்டார்கள். பிரியாவின் சந்தோஷத்தை கார்த்திக்கும் கார்த்திக்கின் சந்தோஷத்தை பிரியாவும் பார்த்து பார்த்து மகிழ்ச்சியுற்றனர். பின் வீட்டிற்குள் சென்று மனைவியுடன் அங்கு நடந்த எல்லா விஷயத்தையும் சொன்னார். தான் வாங்கி வந்ததை மனைவியுடன் கொடுத்து எல்லொருக்கும் கொடு. நான் குளித்துவிட்டு வருகிறேன் என்று நகர்ந்தார்.

அங்கு பிரியாவும் கார்த்திக்கும் சந்தோஷத்தில் சிரிக்காமல் அழுது கொண்டே விட்டனர். அண்ணே உன் செருப்பு சூப்பர்…… உடனே கார்த்திக்கும் பிரியா உன் செருப்பு சூப்பர்…. பிரியா………..கார்த்தி………..என்று அம்மா அழைத்தது காதில் விழ இருவரும் உள்ளே ஓடினர்………

அப்பா வாங்கிக்கொடுத்த துணிமணிகளை அவர்களுக்கு கொடுத்தாள் அம்மா… இருவரும் உடுத்திக்கொண்டு அப்பா வாங்கி வந்த பலகாரங்களையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் உண்டனர்……..

இனிமேல் இவர்களின் வாழ்க்கையில் துன்பம் மாறி இன்பம் மட்டுமே குடிபுகுந்தது. வழக்கம் போல் கார்த்திக்கும் பிரியாவும் தன் புது செருப்புடன் பள்ளிக்குச் சென்றனர். புதிய வீட்டிற்கும் குடி புகுந்தனர்….அப்பாவுக்கும் வேலை நிரந்தரமாகி சம்பளமும் அதிகம் கிடைத்தது. அனைவரும் மிகுந்த சந்தோஷத்துடன் இருந்தனர்…


முற்றும்……… rolleyes.gif


ஆக்கம்: ரதி மகேஸ்வரன். smile.gif

Advertisements

அன்புள்ள தங்கச்சி! – 12

அன்புள்ள தங்கச்சி!

பாகம் – 12

கார்த்திக்கின் மனது மிகவும் கனமாகவும் வேதனை மிகுந்தாகவும் இருந்தது. அதே வேதனையுடன் பிரியாவிடம் என்ன கூறப்போகிறோமோ என்று புலம்பிக் கொண்டே வீடை நோக்கி நடந்தான்.

தங்கை வேகமாக ஓடி வந்து ஜெயித்துவிட்டாயா அண்ணா! எங்கே புது காலணி என்று சந்தோசமாக அவன் கைகளில் தேடினாள். அவனோ பிரியா மன்னித்துக்கொள்! இந்த தடவையையும் நான் நினைத்தது நடக்கவில்லை! இரண்டாவது பரிசு வரும் என்று நினைத்த எனக்கு முதல் பரிசு கிடைத்ததை விளக்கமாக பிரியாவிடம் கூறினான் கார்த்திக்.

உடனே பிரியா வழக்கம்போல் பரவாயில்லையண்ணா! இதுக்கா இவ்வளவு வருத்தப்படுற…. கவலைப்படாதே அண்ணா! என்று ஆறுதல் சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்று அழுது கொண்டாள். பிரியாவின் உள்வேதனை தெரிந்த கார்த்திக் நம் அப்பாவிடம் பிரியாவுக்கு எப்படியாவது செருப்பு வாங்கி தர சொல்லனும் என்று மனதில் திட்டமிட்டுக் கொண்டான்.

அம்மா….அம்மா…….. என்று வீட்டுக்குள்ளே வந்து அம்மாவை கட்டிப்பிடித்து கொண்டு விளையாட்டுப்போட்டியில் முதலிடம் வந்த பெருமையை கூறினான். அம்மா மிகவும் சந்தோஷத்தில் அடுப்பறையில் நுழைந்து பல டப்பாக்களை திறந்து சர்க்கரை இருக்கும் டப்பாவை தேடி சிறிது சர்க்கரை எடுத்து கார்த்திக்கின் வாயில் கொட்டினாள். அம்மா சந்தோஷமாக இருந்தாலும் கார்த்திக் கடுகு அளவு கூட சந்தோஷம் இல்லை.

கார்த்திக் நீ எங்கும் விளையாட போகாதே! இன்று மதியானம் உனக்கு வெற்றி பரிசாக சூப்பர் விருந்து செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டே காய்கறி கூடையை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினாள் அம்மா.

அம்மா……என்று சேலை முந்தானை பிடித்துக்கொண்டு அம்மா எனக்கு விருந்து எல்லாம் வேண்டாம்மா….அப்பா எங்கேம்மா என்று கேட்டான் கார்த்திக். அம்மா கார்த்திக் தலையை தடவிக்கொண்டே அப்பா வெளியூர் சென்று உள்ளார் என்றும் திரும்பி வர 1வாரமோ அல்லது 1 மாசமோ ஆகும் என்று கூறிக்கொண்டே வெளியே கிளம்பினாள் அம்மா.

கார்த்திக் மனதில் அப்பா வந்தவுடன் எப்படியாவது தங்கைக்கு செருப்பு வாங்கிக்கொடுக்கத்தரனும் என்று எண்ணிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் கார்த்திக்.

தொடரும்…..

ஆக்கம்: ரதி மகேஸ்வரன்.

« Older entries