ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாப்டா விருது

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பிரிட்டனின் மிகப்பெரிய விருதான பாப்டா விருதை பெற்றுள்ளார். டேனி பாய்லின் ஸ்லம்டாக் மில்லினர் படத்திற்கு இசையமைத்தற்காக ஏற்கனவே கோல்டன் குளோப் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது இந்த பாப்டா விருதை பெற்றுள்ளார். ஆஸ்கார் விருதுக்கு 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப் பட்டுள்ள ஸ்லம்டாக் மில்லினர் படம் இந்திய கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட பிரிட்டிஷ் படம் என்பதால் நிச்சயம் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பாப்டா விருதுக்கு மொத்தம் 11 பிரிவுகளில் இந்தப் படத்தை பரிந்துரைக்கப் பட்டிருந்தது. அவற்றில் சிறந்த இசை உள்பட 7 பிரிவுகளில் பாப்டா விருது கிடைத்துள்ளது. சிறந்த இயக்குநர் விருது டேனி பாய்லேவுக்கும், சிறந்த இசையமைப்பாளர் விரு ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், சிறந்த திரைக்கதைகான விருது சைமன் பியூஃபோய்க்கும், சிறந்த ஒளிப்பதிவாளர் விருது ஆண்டனி டாட் மாண்டிலுக்கும், சிறந்த சவுண்ட் எடிட்டிங் விருது ரசூல் பூக்குட்டிக்கும், மற்றும் படக்குழுவை சேர்ந்த் க்ளன் ப்ரீமாண்டில், ரிச்சர்டு ப்ரைக், டாம் சாயர்ஸ் ஆகியோருக்கும் விருது கிடைத்துள்ளது. லண்டனில் நடந்த கண்கவர் கோலாகல விழாவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

நன்றி தினமலர்! smile.gif

Advertisements

அகராதி – தமிழ் சொற்களுக்கான விளக்கங்கள்!

அகராதி

நமக்கு தமிழ் தெரிந்தும் அதற்கான விளக்கங்கள் நம்மில் பலருக்கும் தெரியாமல் இருக்கும். இப்பகுதியில் அனைவருக்கும் தமிழில் உள்ள அனைத்து சொற்களுக்கும் விளக்கங்கள் உள்ளன! இதனை படித்து அனைவரும் பயன் பெறவும்!

« Older entries