இனிப்பு கம்பங்களி

 

தேவையானப் பொருட்கள்:

 • கம்பு மாவு – 2கப்
 • கருப்பட்டி தண்ணீர் – 1கப்
 • ஏலக்காய் தூள் – சிறிதளவு
 • உப்பு – சிறிதளவு
 • நல்லெண்ணெய் – 2ஸ்பூன்
 • உடைத்த முந்திரி – 10

 

செய்முறை:

கருப்பட்டி தண்ணீர் செய்ய கருப்பட்டியை உடைத்து தண்ணீரில் கரைத்து அல்லது வாணலியில் வைத்து உருக்கி மண் இல்லாமல் வடிக்கட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியில் கருப்பட்டித் தண்ணீர், உப்பு, ஏலக்காய் தூள், நல்லெண்ணெய் சேர்த்து கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்தவுடன் கம்பு மாவை சேர்த்து நன்கு கிளறி சுருண்டு வந்தவுடன் முந்திரிப் பருப்பை சேர்த்து இறக்கவும்.

சுவையான கம்பங்களி தயார்…

இதனை சாயங்கால வேலையில் சாப்பிடலாம்.

ஆக்கம்:  ரதிமகேஸ்வரன்Posted Image

Advertisements

கத்திரிக்காய் தொக்கு

Posted Image
தேவையான பொருட்கள்:

 • நாட்டு கத்திரிக்காய் – 1/4கிலோ
 • சின்னவெங்காயம் – 1கப்
 • நாட்டு தக்காளி – 1கப்
 • இஞ்சி பூண்டு விழுது – 1ஸ்பூன்
 • சோம்பு – சிறிதளவு
 • கறிமசாலத்தூள் – 1ஸ்பூன்
 • மிளகாய் தூள் – 1ஸ்பூன்
 • சோம்பு, சீரகத் தூள் – 1/2ஸ்பூன்
 • தனியா தூள் – 2ஸ்பூன்
 • மஞ்சள் தூள் – சிறிதளவு
 • உப்பு – தேவையான அளவு
 • கொத்தமல்லி இலை , கறிவேப்பிலை – தேவையான அளவு
 • நல்லெண்ணெய் – தேவையான அளவு
 • தேங்காய் பால் – 1/2 கப்
 • தண்ணீர் – 1கப்

செய்முறை:

கத்தரிக்காயை தண்ணீரில் நன்கு கழுவி சிறிது சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்… அதே போல வெங்காயத்தையும் தக்காளியையும் நறுக்கிக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு சேர்த்து சிவந்ததும் வெங்காயத்தை போட்டு பொன்நிறமாக வதக்கியபின்பு இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும்…

பச்சை வாசனை போன பின்பு தக்காளியை சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும். பின்பு அதனுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகள், தூள் வகைகளை சேர்த்து நன்கு வதக்கிய பின்பு கத்திரிக்காயை சேர்த்து கிளறவும்.

தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து 5விசில் வைக்கவும். விசில் சத்தம் அடங்கிய பின்பு திறந்து தேங்காய் பாலைச் சேர்த்து 1கொதி வந்தவுடன் இறக்கவும்….

சுவையான கத்திரிக்காய் தொக்கு தயார். இதனை அனைத்து வகை காலைஉணவுடனும் சாதத்துடனும் உண்ணலாம்.

ஆக்கம்:  ரதிமகேஸ்வரன்Posted Image

« Older entries