கிச்சன் டிப்ஸ் – 14

  • சாப்​ பாட்டு பொட்​ட​லம் கட்​டப் போகி​றீர்​களா?​ சாப்​பாட்​டைப் பொட்​ட​ல​மாக கட்​டும்​போது வாழை இலையை பின்​பு​ற​மா​கத் திருப்பி தண​லில் லேசா​கக் காட்​டி​ய​பின்​னர் கட்​டி​னால் இலை கிழி​யா​மல் இருக்​கும்.
  • முருங் ​கைக் கீரை சுண்​டல் செய்​வ​தற்கு முதல் நாளே முருங்​கைக் கீரை இலை​களை ஆய்ந்து வைக்​க​வேண்​டாம்,​​ கீரையை ஒரு துணி​யில் சுற்​றி​வைத்​தால் மறு​நாள் இலை​கள் தனி​யாக உதிர்ந்​து​வி​டும்.​ காம்​பு​களை மட்​டும் எடுத்​து​விட்டு சுண்​டல் செய்​து​ வி​ட​லாம்.
  • வெங்​கா​யத்​ தின் மீது லேசாக எண்​ணெய் தடவி சற்று நேரம் வெயி​லில் காய​வைத்​துப் பின் முறத்​தில் போட்​டுப் புடைத்​தால் எளி​தாக மேல் தோல் அகன்​று​வி​டும்.

:ty: தினமணி

Advertisements

கிச்சன் டிப்ஸ் – 13

* பீன்ஸ், பட்டாணி, முட்டை கோஸ் போன்ற காய்கறிகள் நன்றாக குழைய வேகவைக்க வேண்டுமா? முதலில் உப்புப் போடாமல் வேகவைத்து, வெந்தபிறகு உப்பு சேர்க்கவேண்டும்.

* பன்னீர் மசாலா செய்யும்போது பன்னீரை வறுத்த உடன் உப்புத் தண்ணீரில் சிறிது நேரம் போட வேண்டும். பன்னீர் பஞ்சு போல மிருதுவாக இருக்கும்.

* சப்பாத்திக்காக கோதுமை பிசையும்போது வெண்ணெய் சேர்த்துப் பிசைந்து கொஞ்ச நேரம் ஊறவைத்து பிறகு சப்பாத்தி செய்தால் மென்மையாக பூப்போல இருக்கும்.

* சுவர்களில் ஆணி அடித்திருப்போம். அது தேவையில்லை எனில் அதை எடுத்து விட்டு சுவரின் வண்ணத்திற்கு ஏற்ப, வண்ணக் கலவையை பற்பசையில் கலந்து ஓட்டை போட்ட இடத்தில் அடைத்துவிட்டால் ஓட்டை தெரியாமல் மறைந்துவிடும்.

நன்றி: தினமணி

« Older entries