இயற்கை அழகு சாதனங்கள்

Posted Image

ப்ளிச்சிங்
தேவையானவை

  • பால் – 4 தே.க
  • லெமன் ஜூஸ் – 2

செய்முறை:

  1. ஒரு சின்ன பௌலில் இரண்டையும் விட்டு நன்றாக கலக்கவும்.
  2. பாலும் லெமனும் சேரும் போது பால் திரிந்து விடும். அது தான் இதற்கு வேண்டியது.
  3. அந்த கலவையை எடுத்து உடல்+முகம் எல்லா இடத்திற்கும் பூசி ஐந்து நிமிடம் கழிந்தபின்  கழுவினால் நேச்சுரல் ப்ளிச்சிங்

மாய்சரைஸர்

  • தேவையானவை
  • வெண்ணெய்   – 25 கிராம்
  • மிளகு   –   5 கிராம்
  • சாமி கற்பூரம்   –   5 கிராம்
  • சந்தனம்   –   5 கிராம்

செய்முறை:

  1.   மிளகுத்தூள், பொடித்த கற்பூரம், சந்தனத்தூள்  மூன்றையும் நன்றாகக் கலந்து, அதனுடன்  வெண்ணெய் கலந்து நன்றாகக் குழைக்கவும்.
  2.   நுரைத்து வந்ததும் முகம்,கழுத்து,உதடுகள், கை,  கல்களில் தடவி வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
  3.   இது சருமத்திற்கு இயற்கையான ஈரப்பசையைக்  கொடுப்பதோடு, சுருக்கம் விழாமலும் தடுக்கும்.  சருமம் மிருதுவாகும்.

ஸ்க்ரப்

தேவையான பொருட்கள்

  •   குங்குமப்பூ –   25  கிராம்
  •   வால் மிளகு – 25  கிராம்
  •   லவங்கம் –   25  கிராம்
  •   ஓமம்  –   25  கிராம்
  •   சாம்பிராணி பூ -25  கிராம்

செய்முறை:

  1.     மேற்கூறிய பொருட்களை எல்லாம் மிக்ஸியில்  பொடியாக அரைத்து, கலந்து வைத்துக் கொள்ளவும்.
  2.     அரை டீஸ்பூன் சிவப்பழகுப் பொடியில், சில சொட்டுக்கள்  பாலோ,நீரோ விட்டு கலந்து குழைக்கவும். தினமும் முகத்தில் பூசி வர, முகம் பூரண சிவப்பழகு பெறும்.
  3.     கண்களைச் சுற்றி தோன்றும் கருவளையங்கள் மறையும்.
  4.     முகப்பரு,தேமல் போன்றயவை மறையும்.
  5.     முகச்சுருககம் மறைந்து, சருமம் இறுகி  இளமைப் பூச்சு கிடைக்கும்.
  6.     அழகு மட்டுமல்ல குங்குமப்பூவிற்கு என    ஸ்பெஷல் மருத்துவக் குணங்களும் உண்டு.
  7.     கர்ப்பிணிப் பெண்களுக்குத் தாம்பூலத்தில் வைத்துத் தர,   சுகப்பிரசவம் ஆகும். பிரசவம் ஆன இளம்    தாய்மார்களுக்கு பசும்பாலில், ஒரு டேபிள் ஸ்பூன்     தேன், ஒரு சிட்டிகை குங்குமப்பூ போட்டுக் கலந்து   தர, தேக ஆரோக்கியம் வலுப்படும். தாய்பாலும்    நன்கு சுரக்கும்.
  8.     குங்குமப்பூவை தாய்ப்பால் விட்டு, உரசி,பற்றுப்    போட்டால், தலைவலி குணமாகும். சிறு   குழ்ந்தைகளுக்கு குங்குமப்பூவை தாய்பால் விட்டு
  9.     உரசி உள்ளுக்குள் கொடுத்தால் சளி, கபம்,மந்தம்    நீங்கும்.
  10.     சீதளம் காது வலி குணமாகும். கண்ணில் பூ    விழுந்திருந்தாலும், தாய்ப்பாலில் குங்குமப்பூ உரசி,    சில சொட்டுக்கள் விட, கண் பூ குணமாகும்.

பே‌சிய‌ல் ‌க்‌‌ரீ‌ம்

  1. மைதமாவு இரண்டு தே‌க்கர‌ண்டி எடுத்துக் கொண்டு, அதில் சிறிது தயிர், ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் (கஸ்தூரி மஞ்ஜளாக இருந்தால் நல்லது) கலந்து முகத்தில் பேக் போல போடவும்.கழு‌த்து, கை, பாத‌ங்க‌ளிலு‌ம் இதனை‌ப் பய‌ன்படு‌த்தலா‌ம்.
  2. பேக் சிறிது உலர்ந்த பின் லேசாகத் தேய்‌த்து‌ ‌விடவும். பின்பு நல்ல தண்ணீரால் நன்கு அலம்பவும். முகம் பள பளப்பாகவும் பொலிவுடனும், இருக்கும்.

வறண்டவர்களுக்கான பேஸ் மாஸ்க்

  1. முட்டையின் வெள்ளைக் கரு, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் சோளமாவு, இரண்டு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் ஐந்து துளி ஜெரேனியம் எசன்ஷியல் ஆயில் ஆகியவற்றை கலந்து மிக்சியில் அடித்துக் கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.

மென்மையான(சென்சிடிவ்) சருமத்திற்கான பேஸ் மாஸ்க்:

  1. நன்கு பழுத்த வாழைப்பழத்துடன், முட்டையின் மஞ்சள் கருவை கலந்து, இரண்டு டீஸ்பூன் சன்பிளவர் ஆயில், ஐந்து துளி ரோஸ் எசன்ஷியல் ஆயில் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும்.
  2. 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த வகை பேஸ் மாஸ்க் வறண்ட மற்றும் மென்மையான சருமத்திற்கு ஏற்றது.

நன்றி:தினகரன்

உணவு ஃபேஷியல்

‘நல்ல வாசனையும், சுவையும் உள்ள உணவுப் பொருள்கள், வாய்க்கு மட்டும் ருசியா இருக்கிறதில்லை. சருமத்துக்கும், கூந்தலுக்கும் கூட ஆரோக்யத்தையும், அழகையும் கொடுக்கிற குணம் கொண்டவையா இருக்கு. பாலாடையை முகத்துல தடவறது, கடலை மாவு பூசறதுனு அந்தக் காலத்துலேர்ந்தே சமையலறை பொருட்கள் பலதும் அழகு சிகிச்சைகள்ல பயன்படுத்தப் பட்டிருக்கு. அதுவே கொஞ்சம் டெவலப் ஆகி, இப்ப பெரிய, பெரிய நிறுவனங்களோட அழகுத் தயாரிப்புகள்ல பாலும், தேனும், சாக்லெட்டும், காபியும் பிரதான சேர்க்கைப் பொருளா பயன்படுத்தப் படற அளவுக்கு மாறியிருக்கு’’ என்கிறவர் உதாரணங்களுடன் தொடர்கிறார்.

பாலும், பால் பொருட்களும் சருமத்துக்கும், கூந்தலுக்கும் ரொம்பவே நல்லது. வறண்ட, முதிர்ந்த சருமத்துக்கு வெண்ணெய் சிகிச்சை பெஸ்ட்.

அதே மாதிரி வறண்ட உதடுகளுக்கு வெண்ணெயும், தேனும் கலந்து மசாஜ் செய்தா, பட்டு போல மாறும்.

பால் திரிஞ்சா, அதை வடிகட்டி, அந்தத் தண்ணீரை வீணாக்காம எடுத்து, அதுல தலைமுடியை அலசினா, முடி பளபளப்பாகும். அந்தத் தண்ணீர்ல உள்ள புரோட்டீன், கூந்தலுக்கு ரொம்ப நல்லது.

பழங்கள் சாப்பிடறது உள்ளுக்கு எவ்வளவு நல்லதோ, அதே மாதிரி அதை வெளிப்பூச்சுக்கு உபயோகிக்கிறதும் அற்புதமானது. அந்த வகைல பார்த்தா எண்ணெய் பசையான சருமத்துக்கு ஸ்ட்ராபெர்ரி அல்லது ஆப்பிள், வறண்ட சருமத்துக்கு அவகேடோ அல்லது வாழைப்பழம், எண்ணெய் பசை டூ நார்மல் சருமத்துக்கு ஆரஞ்ச மாதிரியான சிட்ரஸ் வகை பழங்கள், பொலிவே இல்லாத சருமத்துக்கு பப்பாளினு அவங்கவங்க சருமத்துக்கேத்தபடி உபயோகிக்கலாம். பழத்தோட சதைப் பற்றை வச்சு, லேசா மசாஜ் கொடுத்து, அந்தப் பழக் கூழ்லயே முகத்துக்கு பேக் மாதிரி போட்டு, கொஞ்ச நேரம் ஊறிக் கழுவிடலாம். இதுக்கெல்லாம் நேரமில்லாதவங்க பார்லர்கள்ல செய்யப்படற ஃப்ரூட் ஃபேஷியல் செய்துக்கலாம்.

பழங்களை மாதிரியேதான் காய்கறிகளும். வெள்ளரி, கேரட், புதினா, தக்காளினு காய்கறிகளைத் துருவி, முகத்துக்கு மசாஜ் கொடுத்து, பேக் போட்டுக் கழுவினா, முகம் பளிச்னு மாறும்.

ஹீ சாக்லெட்… இது பிடிக்காதவங்களே இருக்க மாட்டாங்க. சாக்லெட் வச்சு செய்யற ஃபேஷியலும் நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும். குறிப்பா வறண்ட சருமம் உள்ளவங்களுக்கு, கோகோ பட்டர் சேர்த்த சாக்லெட் ஃபேஷியல் இன்ஸ்டன்ட் அழகைத் தரும். மனசையும் உற்சாகமாக்கும்.

அடுத்தது காபி… குடிச்ச உடனே உற்சாகத்தைக் கொடுக்கக் கூடியது காபி. காபியை பயன்படுத்தி செய்யப் படற ஒருவித ஸ்பெஷல் சிகிச்சை, உடல் பருமனைக் குறைக்க உதவுது. கிரீம், ஸ்க்ரப்னு எல்லாத்துலயும் காபி கலந்திருக்கும். அதோட வாசனையும், அனுபவமும் ரொம்ப சுகமா இருக்கும்.

தேங்காய் மிகச் சிறந்த அழகுப் பொருள்னு எல்லாருக்கும் தெரியும். 2 டீஸ்பூன் கசகசாவை ஊற வச்சு, அரைக்கவும். அதுல 8 டேபிள் ஸ்பூன் தேங்காய் பாலும், 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயும் கலந்து, தலைல தடவி, ஷவர் கேப் போட்டு, அரை மணி நேரம் ஊறி, மிதமான ஷாம்பு போட்டுக் குளிச்சா, மண்டைப் பகுதி சுத்தமாகும். உடம்போட சூடு குறையும். கூந்தலுக்கும் ஆரோக்கியம்.

20 லிட்டர் வெதுவெதுப்பான தண்ணீர்ல ஒரு சின்ன கப் பால், 2 டீஸ்பூன் தேன், கொஞ்சம் ஆரஞ்சு பழத் தோல், ரோஜா இதழ் சேர்த்துக் குளிச்சா, உடம்பு பளபளப்பாகும். பொறுக்கும் சூடுள்ள வெந்நீர்ல கைப்பிடி அளவு புதினா இலை, கொஞ்சம் உப்பு சேர்த்து, கால்களை ஊற வச்சா, கால்களோட களைப்பு நீங்கி, புத்துணர்வு கிடைக்கும்.
கொஞ்சம் பாலாடையோட, பேரீச்சம் பழ சிரப், வெனிலா எசென்ஸ் சேர்த்து, கைகள்ல தடவி, ஒரு ஃபாயிலால மூடி, கொஞ்ச நேரம் கழிச்சு எடுத்தா, கைகள்ல உள்ள சுருக்கங்கள் நீங்கி, அழகாகும்.

கொஞ்சம் அதிமதுரத்தையும், காயாத பச்சை தேயிலையையும் தண்ணீர்ல போட்டுக் கொதிக்க வச்சு, டிகாக்ஷன் எடுத்து, முகத்துல தடவி, 10 நிமிஷம் கழிச்சுக் குளிர்ந்த தண்ணீர்ல கழுவினா, கருமை நீங்கி, முகம் பிரகாசமாகும்.

பட்டாணி மாவுல கொஞ்சம் தயிரும், சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து, முகம், கழுத்து உள்பட உடம்பு முழுக்க தடவி, 15 நிமிடங்கள் கழிச்சுத் தேய்ச்சு எடுத்துக் குளிச்சா, குளிர்காலத்துல உண்டாகிற சருமப் பிரச்னைகள் நீங்கி, சருமம் அழகாகும்.
நன்றி: தினகரன்

« Older entries