இந்திய இணைய சமையல் தளம்

Posted Image

Posted Image

இணையத்தில் என்னதான் இல்லை! என்று பெருமையுடன் பேசு பவர்களுக்கு உரம் ஊட்ட அண்மையில் சுவையான தளம் ஒன்றினை நம் வாசகர் ஒருவரின் துணை யுடன் காண நேர்ந்தது. அனைத்து வகை உணவினைத் தயாரிக்க உதவிடும் அந்த தளத்தின் முகவரி http://www.recipesindian.com/ சைவ, அசைவ உணவு வகைகள் என அனைத்து வகைகளுக்கும் இதில் உணவினைத் தயார் செய்திடும் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இதன் வகைகளைப் படித்தாலே நாக்கில் எச்சில் ஊறுகிறது. ரொட்டி, தின்பண்டங்கள், அரிசி உணவுப் பண்டங்கள், ஊறுகாய்கள், சட்னி, ஸ்வீட், சூப், சாலட், பசி எடுக்க வைக்கும் சூப், குடிக்க பானங்கள் எனப் பல பிரிவுகள் இந்த தளத்தில் அவற்றிற்கான லிங்க்குகளுடன் காத்திருக்கின்றன.

தென்னிந்திய உணவு பண்டங்களுக்கென உள்ள தளத்தில், தமிழ்நாடு மட்டுமின்றி அனைத்து மாநிலங்களின் உணவு வகைகளைத் தயாரிப்பதற்கான பட்டியல் தரப்பட்டு செய்முறை விளக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொண்டாடப்படும் விழாக்களில் தயாரிக்க தனியான உணவுப் பண்டங்கள் கொண்ட தளம் ஒன்றும் தரப்பட்டுள்ளது. தீபாவளி, ஹோலி, கணேஷ் சதுர்த்தி என இது நீள்கிறது.

நான் டயட்டில் இருக்கிறேன். எனக்கு இது சரியாக வராதே என்று கூறுபவர்களுக்கு எனத் தனியே ஒரு பக்கம் உள்ளது. குறைந்த கலோரி உள்ள உணவுப் பண்டங்களை எப்படி, எந்த வகை தானியம், காய்கறி கொண்டு தயாரிப்பது எனவும் ஒரு பக்கம் உள்ளது. மைக்ரோ வேவ் அடுப்புதாங்க இன்றைக்கு நடைமுறை, இந்த ரெசிப்பியெல்லாம் சரியாக வருமா என்ற கேள்வி கேட்பவர்களுக்குத் தனியே மைக்ரோவேவ் அடுப்பில் உணவுப் பண்டங்களைத் தயாரிப்பது குறித்தான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இதிலும் சைவம், அசைவம் என பிரிவுகள் உள்ளன.

தங்கள் மகள்களைத் திருமணம் முடித்துக் கொடுக்கும் தென் மாவட்டங்களில் உள்ளவர்கள், முன்பு விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மகளிர் அமைப்புகள் வெளியிட்டுள்ள சமையல் நூல்களை வாங்கி, சீதனத்தோடு கொடுத்து அனுப்புவது வழக்கம். இப்போது இந்த தளக் குறிப்புகளை டவுண்லோட் செய்து “சிடி’யாகத் தரத் தொடங்கி உள்ளதாக, இந்த குறிப்பு குறித்து கோடி காட்டிய வாசகி எழுதி உள்ளார். அந்த வாசகிக்கு நன்றி. உங்கள் மகள் மணமுடித்துப் போனாலும், வேலை நிமித்தம் வெளிநாடு சென்றாலும், சமையலுக்கு அவர்களுக்கு உதவ இந்த தளம் நிச்சயம் உதவிடும் என்பது உறுதி. ஒருமுறை சென்று பார்த்தால், தினமும் உங்கள் சமையலை இதன் அடிப்படையில் தான் முடிவு செய்வீர்கள்.

நன்றி: தினமலர்

Advertisements

எடையை குறைக்க எட்டே வழிகள்!

Posted Image

காபி, டீ அருந்தும் பழக்கமுடையவர்கள், அதற்கு பதிலாக (பால் சேர்க்காமல்) காபி அல்லது டீயில் எலுமிச்சை சாறு பிழிந்து அருந்தலாம். பால் சேர்த்து அருந்த விரும்புபவர்கள் பாலை, 3- 4 முறை காய்ச்சி ஆடை நீக்கிய பின் பயன்படுத்துவது நல்லது. முடிந்த வரை சர்க்கரையைத் தவிர்ப்பது நல்லது.

நம் அன்றாட வேலைகளை செய்யவும், உடல் உறுப்புகள் இயங்கவும், நமக்கு சக்தி தேவைப்படுகிறது. இந்த சக்தி, நாம் உண்ணும் உணவின் வாயிலாக கிடைக்கிறது. நாம் உட்கொள்ளும் உணவு, உடல் செலவிடும் சக்தியை காட்டிலும் அதிகமாகும் போது, உடல் அதை கொழுப்பாக மாற்றி சேமித்து வைக்கிறது. இவ்வாறு, இந்த சேமிப்பு, ஆண்டுக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே போகும் போது, உடல் எடை மெல்ல, மெல்ல அதிகரித்துக் கொண்டே செல்லும். இதுவே, உடல் எடை கூடுவதன் முதல் காரணம். மிகச் சிலருக்கு மட்டும் ஹார்மோன் காரணங்களால் உடல் எடையும், பருமனும் திகரிக்கின்றன.

கீழே தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி நடந்தால், குறைந்தது, மாதம், நான்கு கிலோ எடை குறைவது மிக உறுதி.

1.தினசரி காலை எழுந்தவுடன், 1 – 2 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும்.
2.குறைந்தது, 35 நிமிடம் உடற்பயிற்சி, வேக நடை, ஸ்பாட் ஜாகிங், சைக்கிளிங், ஸ்கிப்பிங் போன்றவையோ அல்லது இதர பயிற்சிகளோ செய்யவும்.
3.அப்போதே தயாரித்த வெண்பூசணிச் சாறு அல்லது வாழைத்தாண்டு சாறு ஒரு டம்ளர் குடிக்கவும்.
4.காபி, டீ அருந்தும் பழக்கமுடையவர்கள், அதற்கு பதிலாக (பால் சேர்க்காமல்) காபி அல்லது டீயில் எலுமிச்சை சாறு பிழிந்து அருந்தலாம். பால் சேர்த்து அருந்த விரும்புபவர்கள் பாலை, 3- 4 முறை காய்ச்சி ஆடை நீக்கிய பின் பயன்படுத்துவது நல்லது. முடிந்த வரை சர்க்கரையைத் தவிர்ப்பது நல்லது.
5. காலை சிற்றுண்டி (8.00 – 9.00 மணிக்குள்): வெண்ணெய் எடுத்த மோர் – 1 டம்ளர், அதனுடன் கொய்யா (சிறியது), பாலாடை கட்டி அல்லது வெண்ணெய் தடவாத இரண்டு (4 துண்டு) வெஜிடபிள் ரொட்டி, சாண்ட்விச் அல்லது இட்லி இரண்டு.
6. மதிய உணவு (12.00 – 1.00 மணிக்குள்): 2 கரண்டி ஏதேனும் ஒரு வகை கீரையும், 2 கரண்டி நீர்சத்து அதிகமுள்ள காய்கறிகள் (வெண்பூசணி, புடலங்காய்) பருப்பு சேர்த்து தேங்காய் சேர்க்காமல் கூட்டு, ஒரு கரண்டி சாம்பார், ஒரு கப் சாதம் அல்லது எண்ணெய் சேர்க்காத இரண்டு கோதுமை சப்பாத்தி, ஒரு கரண்டி வெண்ணெய் எடுத்த தயிர் அல்லது ஒரு டம்ளர் மோர்.
7. இரவு உணவு (7.00 – 8.00 மணிக்குள்): வேக வைத்த காய்கறிகள் மூன்று கப் அல்லது சூப், பப்பாளி அல்லது ஆரஞ்சு அல்லது பைன் ஆப்பிள் (6 துண்டு) அல்லது கொய்யா 3 துண்டு.
8. பகலில் உறங்குவதை தவிர்த்தல் நல்லது. எண்ணெய் பதார்த்தங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகளை தவிர்க்கவும். உப்புள்ள ஆகாரங்களை (ஊறுகாய், சிப்ஸ், உப்பு பிஸ்கட்) தவிர்க்கவும். இரவில் உண்ட பின் குறுநடை செய்த பிறகு உறங்க ல்லவும். “இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு’ என்ற பழமொழிக்கு ஏற்ப காலையில் கொள்ளு கஞ்சி குடிப்பது நல்லது.

நன்றி: தினமலர்

« Older entries