இயற்கை அழகு சாதனங்கள்

Posted Image

ப்ளிச்சிங்
தேவையானவை

 • பால் – 4 தே.க
 • லெமன் ஜூஸ் – 2

செய்முறை:

 1. ஒரு சின்ன பௌலில் இரண்டையும் விட்டு நன்றாக கலக்கவும்.
 2. பாலும் லெமனும் சேரும் போது பால் திரிந்து விடும். அது தான் இதற்கு வேண்டியது.
 3. அந்த கலவையை எடுத்து உடல்+முகம் எல்லா இடத்திற்கும் பூசி ஐந்து நிமிடம் கழிந்தபின்  கழுவினால் நேச்சுரல் ப்ளிச்சிங்

மாய்சரைஸர்

 • தேவையானவை
 • வெண்ணெய்   – 25 கிராம்
 • மிளகு   –   5 கிராம்
 • சாமி கற்பூரம்   –   5 கிராம்
 • சந்தனம்   –   5 கிராம்

செய்முறை:

 1.   மிளகுத்தூள், பொடித்த கற்பூரம், சந்தனத்தூள்  மூன்றையும் நன்றாகக் கலந்து, அதனுடன்  வெண்ணெய் கலந்து நன்றாகக் குழைக்கவும்.
 2.   நுரைத்து வந்ததும் முகம்,கழுத்து,உதடுகள், கை,  கல்களில் தடவி வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
 3.   இது சருமத்திற்கு இயற்கையான ஈரப்பசையைக்  கொடுப்பதோடு, சுருக்கம் விழாமலும் தடுக்கும்.  சருமம் மிருதுவாகும்.

ஸ்க்ரப்

தேவையான பொருட்கள்

 •   குங்குமப்பூ –   25  கிராம்
 •   வால் மிளகு – 25  கிராம்
 •   லவங்கம் –   25  கிராம்
 •   ஓமம்  –   25  கிராம்
 •   சாம்பிராணி பூ -25  கிராம்

செய்முறை:

 1.     மேற்கூறிய பொருட்களை எல்லாம் மிக்ஸியில்  பொடியாக அரைத்து, கலந்து வைத்துக் கொள்ளவும்.
 2.     அரை டீஸ்பூன் சிவப்பழகுப் பொடியில், சில சொட்டுக்கள்  பாலோ,நீரோ விட்டு கலந்து குழைக்கவும். தினமும் முகத்தில் பூசி வர, முகம் பூரண சிவப்பழகு பெறும்.
 3.     கண்களைச் சுற்றி தோன்றும் கருவளையங்கள் மறையும்.
 4.     முகப்பரு,தேமல் போன்றயவை மறையும்.
 5.     முகச்சுருககம் மறைந்து, சருமம் இறுகி  இளமைப் பூச்சு கிடைக்கும்.
 6.     அழகு மட்டுமல்ல குங்குமப்பூவிற்கு என    ஸ்பெஷல் மருத்துவக் குணங்களும் உண்டு.
 7.     கர்ப்பிணிப் பெண்களுக்குத் தாம்பூலத்தில் வைத்துத் தர,   சுகப்பிரசவம் ஆகும். பிரசவம் ஆன இளம்    தாய்மார்களுக்கு பசும்பாலில், ஒரு டேபிள் ஸ்பூன்     தேன், ஒரு சிட்டிகை குங்குமப்பூ போட்டுக் கலந்து   தர, தேக ஆரோக்கியம் வலுப்படும். தாய்பாலும்    நன்கு சுரக்கும்.
 8.     குங்குமப்பூவை தாய்ப்பால் விட்டு, உரசி,பற்றுப்    போட்டால், தலைவலி குணமாகும். சிறு   குழ்ந்தைகளுக்கு குங்குமப்பூவை தாய்பால் விட்டு
 9.     உரசி உள்ளுக்குள் கொடுத்தால் சளி, கபம்,மந்தம்    நீங்கும்.
 10.     சீதளம் காது வலி குணமாகும். கண்ணில் பூ    விழுந்திருந்தாலும், தாய்ப்பாலில் குங்குமப்பூ உரசி,    சில சொட்டுக்கள் விட, கண் பூ குணமாகும்.

பே‌சிய‌ல் ‌க்‌‌ரீ‌ம்

 1. மைதமாவு இரண்டு தே‌க்கர‌ண்டி எடுத்துக் கொண்டு, அதில் சிறிது தயிர், ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் (கஸ்தூரி மஞ்ஜளாக இருந்தால் நல்லது) கலந்து முகத்தில் பேக் போல போடவும்.கழு‌த்து, கை, பாத‌ங்க‌ளிலு‌ம் இதனை‌ப் பய‌ன்படு‌த்தலா‌ம்.
 2. பேக் சிறிது உலர்ந்த பின் லேசாகத் தேய்‌த்து‌ ‌விடவும். பின்பு நல்ல தண்ணீரால் நன்கு அலம்பவும். முகம் பள பளப்பாகவும் பொலிவுடனும், இருக்கும்.

வறண்டவர்களுக்கான பேஸ் மாஸ்க்

 1. முட்டையின் வெள்ளைக் கரு, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் சோளமாவு, இரண்டு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் ஐந்து துளி ஜெரேனியம் எசன்ஷியல் ஆயில் ஆகியவற்றை கலந்து மிக்சியில் அடித்துக் கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.

மென்மையான(சென்சிடிவ்) சருமத்திற்கான பேஸ் மாஸ்க்:

 1. நன்கு பழுத்த வாழைப்பழத்துடன், முட்டையின் மஞ்சள் கருவை கலந்து, இரண்டு டீஸ்பூன் சன்பிளவர் ஆயில், ஐந்து துளி ரோஸ் எசன்ஷியல் ஆயில் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும்.
 2. 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த வகை பேஸ் மாஸ்க் வறண்ட மற்றும் மென்மையான சருமத்திற்கு ஏற்றது.

நன்றி:தினகரன்

Advertisements

கூந்தலை எப்படி வார வேண்டும்?

Posted Image

கூந்தலை எப்படி வார வேண்டும்-? கூந்தலை கலைய விடக்கூடாது, கூந்தலை வாரிவிடும் போது உயரத்துக்கேற்றபடி வாரிவிட்டுக் கொள்ள வேண்டும். சில பெண்களுக்கு இயற்கையாகவே மிக நீளமாக இருக்கும். ஆனாலும் இவர்கள் கூந்தலின் நுனிகளை நன்றாகப் பின்னிவிட வேண்டும். இல்லாவிட்டால் கூந்தல் பிளந்துவிடும்.கூந்தலின் நிறம் பழுப்பு நிறமாக மாறிவிடும்! கூந்தல் கருமை நிறத்தை இழந்து பழுப்பு நிறமாக மாறிவிட்டால் அழகை இழந்து விடும். பழுப்பு நிறமாகி விட்ட கூந்தலின் அடியில் உள்ள உயிர் அணுக்கள் பாதிக்கப்பட்டன என்று பொருள்! குள்ளமாக இருக்கும் பெண்கள் சற்று எடுப்பாக இருக்க தலையை வாராமல் கலைத்து விட்டுக்கொண்டு உயரமாக காட்சி அளிக்கிறார்கள்.  தலை படியாமல் இருக்க இவர்கள் எண்ணெய் தடுவுவதே இல்லை.அடிக்கடி ஷாம்பூவைப் போட்டு தலையைச் சுத்தம் செய்து கூந்தலை படியவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். இது தவறு. குள்ளமாக பெண்கள் இலேசாக தலை வாரி உச்சியில் சற்று தூக்கினாற்போல் கொண்டை போட்டுக்கொண்டால் எடுப்பாக இருப்பார்கள்.

கூந்தல் பராமரிப்பு

1. வாரம் ஒரு முறை ஹாட் ஆயில் மசாஜ் செய்து கூந்தலை ஷாம்பூ போட்டு அலசவும்.

2. ஹேர் டிரையரை கூந்தலின் வேர்கால்களில் படும்படி உபயோகிக்க கூடாது. வரண்ட கூந்தலுக்கு ஹேர் டிரையரை பயன்படுத்தவே கூடாது.

3. தலைக்கு பயன்படுத்தும் சீப்பு, ப்ரஷ், டவல், ஹேர்பேண்ட் ஆகியவற்றை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும்.

4. முடி குறைவாக இருந்தால் 1 டீஸ்பூன் விட்டமின் இ எண்ணெயை முதல் நாள் இரவில் தலைமுடியில் தடவி அடுத்த நாள் அலசுங்கள்.

5. எலுமிச்சம் சாற்றை ,முட்டையை,அகத்திக்கீரையை அல்லது பொன்னாங்கண்ணி கீரையை (அரைத்து) தலைக்கு தேய்த்து குளிக்கலாம்.

6. வெந்தயப்பொடியை எண்ணெயில் சிறிதளவு விட்டு குழைத்து தலையில் தடவி ஊறவைத்துக் குளிக்கலாம்.

7. தேன், வெள்ளரிக்காய், ஆப்பிள், அன்னாச்சிப்பழம் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளவும். முடி வளர புரோட்டீன்சத்து அதிகம் உள்ள பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுவது அவசியம்.

குளிக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

1. காலை, மாலை இருவேலைகளும் குளிக்க ஏற்ற நேரங்கள். இடைப்பட்ட நேரங்கள் குளிப்பது நல்லதல்ல.

2. உணவு உண்ட பின்னரும், நன்றாக வியர்த்திருக்கும் போதும் குளிக்கக்கூடாது.

3. அஜீரணக்கோளாறு, கண் நோய், காய்ச்சல் ஆகிவற்றால் அவதிப்படும் நேரங்களில் குளிக்கக்கூடாது.

4. எண்ணெய் தேய்த்து விட்டு சிறிதுநேரம் கழித்து பின்னர் குளிப்பது உடலுக்கு நல்லது. இவ்வாறு குளிப்பதுதான் உடல்நலத்தைத் தரும்.

5. வாசனைப்பொடி, கடலைமாவு போன்றவற்றைத் தேய்த்து கழுவினால் அழுக்கும், எண்ணெய் பசையும் அகன்று போகும்.

6. சோப்பு உபயோகிக்கும்போது கழுத்து, கழுத்தின் பின்புறம், காது, கால்களின் இடுக்குப்பகுதிகள் போன்ற அழுக்கு படியக்கூடிய பகுதிகள் சோப்பை ஒருமுறைக்கு இருமுறை அழுத்தி தேய்த்து குளிக்க வேண்டும்.

7. சோப்பை அதிகமாக பயன்படுத்துவது உடலின் மேற்புறதோலுக்கு நல்லதல்ல. தோலில் இருக்கும் எண்ணெய்த்தன்மை மாறி வறண்டுவிடும்.

8. குளிக்கும் நீரில் சிறிதளவு எலுமிச்சம்பழச்சாற்றை பிழிந்து குளிக்கலாம். இது நல்ல புத்துணர்ச்சியைத் தரும்

நன்றி: தினகரன்

« Older entries