பொடுகு தொல்லை நீங்க வேண்டுமா? – 2

பொடுகு என்றால் என்ன?
தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக  செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம்.

பொடுகு ஏன் வருகிறது?
1. வரட்சியான சருமத்தினால் வரும்

2. அவசரமாக தலைக்கு குளிப்பது.  நல்லா தலையை துவட்டுவது கிடையாது. இதனால் தண்ணீர்,சோ்பபு தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடும். இதனால் பொடுகு உற்பத்தியாகும்.

3. எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது

4. ஒழுங்காக தினசரி குளிப்பதில்லை, இத்தகைய தலையில் வியர்வை உற்பத்தியாகி அந்த வியர்வை தண்ணி தலையில் தங்க நேரிடும். இதனாலும் பொடுகு வரும்

5. “பிடி ரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்ணியிர் கிருமியினாலும் பொடுகு வரலாம்.

6. எக்ஸீமா(Eczema), சொறாஸிஸ்(Psoriasis) போன்ற தோல் நொய்களாளும் பொடுகு வரலாம்

7. அதிகமாக சாம்பு பயன்படுத்தினாலும் வரலாம். க்ண்ட கண்ட செல்களை தலையில் தேய்ப்பதனாலும் இது வரலாம்.

8. மனஅழுத்தம் கவலையாலும் இது வரலாம்

பொடுகு வருவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

1. ஒருவர் பயன்படுத்திய சீப்பு தலையாணை துண்டு போண்றவற்றை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது

2. தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்ததிருக்க வேண்டும்

3. கொழுப்பு சத்துள்ள நெய், பால், வெண்ணெய் முதலிய உணவுகளை சேர்க்க வேண்டும்.  இதனால் தோலுக்கு தேவையான எண்ணெய் பசை கிடைக்கும். இதன் மூலம் பொடுகுக்கு காரணமான கிருமிகளிடமிருந்து நமது தலையை பாதுகாக்க முடியும்

பொடுகு தொல்லை நீங்க என்ன செய்யலாம்?

  • 1. தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள சாம்பை பய்னபடுத்தி தலையை சுத்தம்  செய்யலாம். இது பொடுகு பெருகுவதை தடுக்கும். புண் இருந்தால் இதை பயன்படுத்தக்கூடாது.
  • 2. சாலிசிலிக் அமிலம் சல்பர் கலந்த சாம்புகளை பயன்படுத்தலாம்.
    “பிடிரோஸ்போரம் ஓவல்”  என்ற நுண்னுயிர் கிருமியால் ஏற்படும் பொடுகு தொல்லைக்கு டாக்டரை பார்கவும்.
  • 3. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நிமிஷம் கழித்து குளிக்கனும்
  • 4. பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.
  • 5. தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்
  • 6. வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து குளிக்கனும்.
  • 7. பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால் பொடுகுக்கு ரெம்ப நல்லது
  • 8. வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.
  • 9. அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்
  • 10. வேப்பிலைசாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்கலாம்
  • 11. வசம்பு பவுடரை தேங்காய் எண்யெயில் ஊறவைத்து தேய்கலாம்
  • 12. தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல்  கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம்.
  • 13. மருதாணி இலையை அரைக்கனும். அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்கனும். இந்த கலவையை தலையில் தேய்கனும்.
  • 14. வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நல்லா அரைத்து தலையில் தேய்த்து 1மணி நேரம் ஊரவைத்து பின்பு குளிக்கனும்.
  • 15. தேங்காய் எண்ணையுடன் வேப்பை என்ணையும் சேர்த்து காய்ச்சி தேய்த்து வந்தால் பொடுகு நீங்கும்.
  • 16. நெல்லிமுள்ளி, வெந்தயம், சிறிது மிளகு இவற்றை ஊறவைத்து மைபோல அரைத்து தலையில் தடவி ஒரு மணிநேரம் ஊறிய பிறகு, நன்கு அலசினால் பொடுகு தொல்லை மறையும்.
  • 17.  நீலகிரி தைலத்தை சூடாக்கி தலையில் தடவி, வெந்நீரில் ஒரு பெரிய துவாலையை நனைத்து தலையில் கட்டி விடுங்கள். பிறகு நன்கு அலசி விடவும்.
  • 18.  தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்து, அந்த எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துவிடும்.
  • 19. பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.
  • 20. அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்

16 பின்னூட்டங்கள்

  1. sathish said,

    ஒக்ரோபர் 5, 2010 இல் 7:48 முப

    thank 4 all tips

  2. umadevi said,

    திசெம்பர் 30, 2010 இல் 11:08 முப

    vanakkam Iyya,amma ,
    en thalaiyil athiga poduku iruppathal thalaiyil kai vaikka mudiyala plz enna vazhi madam

  3. தேவி said,

    ஜனவரி 7, 2011 இல் 11:46 முப

    டாக்டரிம் ஆலோசனை கேட்டு நடங்கள்…

  4. udayakumar said,

    ஜனவரி 8, 2011 இல் 12:06 பிப

    hai its really useful tips for us.
    thanks.

  5. suresh said,

    மே 9, 2011 இல் 10:40 முப

    en thalayil poduku & mudi uthirthal proplem ulladhu idharku skin doctor-i anugalama or paatti vaithiyame podhuma…

  6. தேவி said,

    ஜூன் 2, 2011 இல் 8:48 பிப

    என்னை கேட்டால் வைத்தியரிடம் செல்வது நல்லது சுரேஷ்

  7. priya said,

    ஜூன் 7, 2011 இல் 8:43 பிப

    podugu thollai yanna seivathu?

  8. தேவி said,

    ஜூலை 9, 2011 இல் 8:29 முப

    டிப்ஸை பார்த்து முயற்சி பண்ணியும் குறையவில்லையென்றால்
    மருத்துவரிடம் சென்று ஆலோசிப்பது நல்லது

  9. priya said,

    செப்ரெம்பர் 28, 2011 இல் 4:00 பிப

    thanks for your tips 1st use that tips then i tell that result

  10. MADHI said,

    ஜனவரி 9, 2012 இல் 6:37 பிப

    coconut oil + vendhayam kaichi theika soninga , athu regular usa , ? illa kulikarathuku munadiya . pls ans me

  11. தேவி said,

    ஜனவரி 28, 2012 இல் 9:05 பிப

    தினமும் தடவுங்கள் நல்லது மதி!

  12. thendral said,

    மே 20, 2012 இல் 12:25 பிப

    en thalayil podugu punnagi blood varukirathu,, ena seiya vendum

  13. nithya devi said,

    ஓகஸ்ட் 10, 2012 இல் 3:44 பிப

    enaku thalaiyil podugu ulladhu.sorindhal white aga niraiya varugirathu enna seeiyalam tips pls

  14. தேவி said,

    செப்ரெம்பர் 28, 2012 இல் 12:22 பிப

    இயற்கையாக நான் கொடுத்த டிப்ஸை செய்து பாருங்க…
    அப்படியும் சரியாகவில்லையென்றால் டாக்டரிடம் செல்லுங்க…தேவி!

  15. தேவி said,

    செப்ரெம்பர் 28, 2012 இல் 12:29 பிப

    அய்யோ… டாக்டரிம் செல்லுங்க தென்றல்..

  16. care olives said,

    ஒக்ரோபர் 20, 2012 இல் 11:45 பிப

    9750832255 ——- coimbatore
    ஆலிவ் எண்ணெய், ஆலிவ் மரத்தின் கொழுப்பில் இருந்து பிழிந்தெடுக்கப்படும் சாறாகும். வேதிசெயல்களின் மூலமாகவோ, அரவை இயந்திரங்களின் மூலமோ தயாரிக்கப்படுகின்றன. சமைப்பதற்கும், அழகு சாதனப் பொருட்களிலும், மருந்துப் பொருட்களிலும், எரிபொருளாகவும் பயன்படுகின்றது.. கொலஸ்ட்ராலின் விளைவைக் கட்டுப்படுத்தி, இதயத்திற்கு ஏற்ற எண்ணெயாக இருப்பதால் உணவுப் பதார்த்தங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. புற்றுநோயைக் கட்டுப்படுத்தக்கூடியது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் இவ்வெண்ணெய், மெடிட்டெரானியப் பகுதிகளில் அதிக அளவில் பயன்படுத்தப் படுகிறது. குறிப்பாக, கிரேக்கம், போர்த்துகல், துனீசியா, மொரோக்கோ ஆகிய நாடுகள் அதிகளவில் தயாரிக்கின்றன. மேலும், கிறித்தவ, யூத, இசுலாமிய பண்பாட்டிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது


பின்னூட்டமொன்றை இடுக