சில சந்தேகங்கள்… சில பதில்கள்… – 5

1.சதைபிடிப்பு என்றால் என்ன?
இது எதனால் ஏற்படுகிறது?
இது சாதாரண வியாதியா?
இதை குணப்படுத்த எந்த டாக்டரிடம் செல்ல வேண்டும்?
இது அடிக்கடி ஏற்படுமா?
இது எல்லோருக்கும் ஏற்படுமா?

தசை சுருங்கி விரிவடையாமல் இருந்தால், வலி ஏற்படும். இதையே தசை பிடிப்பு என்கிறோம். சாதாரணமாக, கெண்டைக்கால், தொடை, சமயத்தில் முதுகில் தசை பிடிப்பு ஏற்படும். மூச்சு பிடிப்பும் ஒருவகை தசைபிடிப்பே.
பலவீனமான உடல்நிலை, தாது உப்பு சத்து குறைவாக இருப்பவர்களுக்கு, தசைப்பிடிப்பு ஏற்படும். இயல்புக்கு மாறாக தசைக்கு செயல்பாடு கொடுத்தால், ஒரு சில நேரங்களில் பிடிப்பு ஏற்படும். அடிப்படையில் நரம்பு பாதிப்புகளாலும் ஏற்படும். இந்த நோய் சாதாரணமானது தான், குணப்படுத்த முடியும்.
குறிப்பிட்ட டாக்டரிடம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எம்.பி.பி.எஸ்., படித்த டாக்டர்களே சிகிச்சை அளிக்கலாம். தசைபிடிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். சிறுநீரக கோளாறால் நரம்பு பாதிப்பு, நீரிழிவு நோயால் நரம்பு பாதிப்பு, கீழ்முதுகு எலும்பு தேய்மானம் இருந்தால், அதன் விளைவாக அடிக்கடி தசை பிடிப்பு ஏற்படும்.

*மாசடைந்த நீரை வாய் கொப்பளிக்க பயன்படுத்தினால், அதன் மூலம் ரேபிஸ் நோய் பரவுமா?

மாசடைந்த நீர் மூலம் ரேபிஸ் நோய் பரவாது. ஆனால், காலரா போன்றவை நீரால் பரவும் நோய்கள். மாசடைந்த நீரை பயன்படுத்துவதால், பரவும்.

*என் மகனுக்கு மூன்று வயதாகிறது. அவன் சருமம் வறண்டு காணப்படுகிறது; குறிப்பாக, குளிர் காலத்தில் மிகவும் வறண்டு காணப்படுகிறது. இதற்கு கிரீம்கள் ஏதேனும் பயன்படுத்தலாமா? என்ன உணவுகள் கொடுக்கலாம்?

முதலில், உங்கள் மகனை சரும நோய் சிகிச்சை நிபுணரிடம் அழைத்து சென்று பரிசோதனை செய்ய வேண்டும். அவர், அவனின் சருமம் இயற்கையிலேயே வறண்ட தன்மை உடையதா அல்லது ஏதேனும் நோயினால், வறண்டு காணப்படுகிறதா என்பதை கண்டறிவார். நோய் காரணமாக அவ்வாறு இருந்தால், மருந்துகள் மற்றும் லோஷன்கள் பரிந்துரைக்கப்படும். வறண்ட சருமத்திற்கு, தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்யலாம். கடினமான சோப்புகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மிதமான கிளிசரினை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட சோப்புகளை பயன்படுத்தலாம். முடிந்த வரை வெயில் நேரடியாக மேலே படுவதை தவிர்க்கலாம்.

*டாக்டர்கள் கூட மருத்துவ குணம் கொண்ட சத்துணவாக, சைவ உணவுகளை தான் சிபாரிசு செய்கின்றனர். அசைவ உணவு வகைகளில் என்னென்ன சத்துக்கள் உள்ளன?

மீன், கோழி, ஆட்டுக்கறி, முட்டை, பால் போன்ற எல்லா அசைவ உணவுகளிலும், முதல் தர புரதம் (first class protein) வைட்டமின் பி, குறிப்பாக சைவ உணவுகளில் இல்லாத வைட்டமின் பி-12, வைட்டமின் ஏ ஆகியவை உள்ளன. மண்ணீரலில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. மீன்களில்(சிறிய மீன்கள்-கொழுப்பு நிறைந்தவை), ஒமேகா -3 வகை கொழுப்பு உள்ளது. இது இதய நோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. இவ்வாறு சத்துக்கள் நிறைந்திருப்பினும், அவற்றில் அதிகமாக காணப்படுவது பூரித கொழுப்புச் சத்து (saturated fat)இது ரத்தத்தில் கொழுப்பை அதிகரிப்பதோடு, ரத்த நாளங்களில் அடைப்பையும் இதய நோயையும் உண்டாக்கக் கூடியதால், மருத்துவர்களும், உணவு முறையாளர்களும் (டயட்டீசியன்), இவற்றை தவிர்த்து, சைவ உணவையே சிறந்ததாக கருதி, பரிந்துரைக்கின்றனர்.

நன்றி தினமலர்! smile.gif

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: