உப்புச் சத்து பற்றி தகவல்…!

* உப்பு பெறாத விஷயம் இல்லே *
* உஷாராக இருக்க வேண்டிய எச்சரிக்கை *
* உப்பில்லா பண்டம் குப்பையிலே… என்று சொல்லி விட்டுப் போய்விட்டனர்.
* உப்பை குறையுங்க; இல்லே, தீராத தொல்லை தான் என்று பயமுறுத்திவிட்டனர் டாக்டர்கள்.
உப்பு பற்றி உப்பு பெறாத விஷயம் என்று யாரும் நினைக்கத் தயாரில்லை. ஆனால், உடம்புக்கு வராத வரை உப்பு பற்றி கவலைப்படுவதும் இல்லை. சிலரை பார்த்தால், தட்டில், அரை ஸ்பூன் உப்பை போட்டு வைத்திருப்பர். தேவைப்படும் போது, இவர்களே, சாம்பார் முதல் தயிர் சாதம் வரை சேர்த்துக்கொள்வர்.
கொழுப்பு தேவை; அதிகமானால் ஆபத்து; எண்ணெய் தேவை; அதிகமானால் ரத்த அழுத்தம் தான். இனிப்பு தேவை; அதிகமானால் ஷுகர். இப்படித்தான் உப்பு தேவை தான்; அதிகமானால் ரத்த அழுத்தம் எகிறிவிடும்; மாரடைப்பு வருமோ என்ற பீதி கிளம்பும்.
அப்படி என்ன தான் இருக்கு?
சோடியம் – குளோரின் ஆகிய இரண்டு ரசாயனங் களும் சேர்ந்தது தான் உப்பு; இயற்கை கனிமங்களில் ஒன்று ; சோடியம் குளோரைடு கலவைகளில் ஒன்று. வெண்மை நிறம் கொண்டது சோடியம்; குளோரினோ, பச்சை மஞ்சள் கலந்தது; தண்ணீரில் கரைந்து விடும்; காற்றில் வாயுவாகி விடும்.
பல்வேறு உப்புகள் உள்ளன:
* சோடியம் பைகார்பனேட்: பேக்கிங் சோடா என்பது இது தான். சுத்தம் செய்ய பயன்படுவது. மருத்துவ குணங்கள் கொண்டது.
* சோடியம் நைட்ரேட்: உரம், வெடிக்கு பயன்படுவது.
* சோடியம் ஹைட்ராக்சைடு: பேப்பர் , சோப்பு, சில உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் காஸ்டிக் சோடா எனப்படுவது.
வேணும்… ஆனா வேணாம்
உடலில் உப்பு தேவை; அதிக அளவில் உப்பு , வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேறி விட்டால், அதை ஈடு செய்ய வேண்டி உப்பு கரைசல் தேவை. உடலில் உப்பு குறைந்தால் தண்ணீர் வற்றிய நிலைக்கு தள்ளப்படுகிறது. அப்போது வாந்தி, மயக்கம் வருகிறது. அதை தீர்க்க அதிக அளவில் தண்ணீர், எலக்ட்ரால் கரைசல் குடிக்க செய்கின்றனர் டாக்டர்கள்.
உடலில் அதிக உப்பு சேர்ந்தாலும் தொல்லை தான். அதிக உப்பு உள்ளவர்களுக்கு அடிக்கடி தாகம் எடுக்கும்; அடிக்கடி சிறுநீர் போவர். சிறுநீர் மூலம் தான் அதிகப்படியான உப்பு வெளியேற்றப்படுகிறது.
உப்புல சூப்பர் பலன்
* வெது வெதுப்பான தண்ணீரில் உப்பை கரைத்து தொண்டையில் நிறுத்தி கொப்பளித்தால் தொண்டை கரகரப்பு போய்விடும். புண் இருந்தாலும் போய் விடும்.
* தேய்க்கும் பற்பசையில் உப்பு உள்ளது; அதுபோல சோப்பிலும் உள்ளது. உடலில் உள்ள எரிச்சல், தோல் பிரச்னை இதனால் போய் விடும். பல் பாதுகாப்புக்கு உப்பு முக்கியம்.
எவ்ளோ ஓகே
நாம் குடிக்கும் தண்ணீரில் உப்பு உள்ளது. அதனால், உணவில் சேர்ப்பது உட்பட ஒருவரின் உப்பு தேவை ஒரு டீஸ்பூன் தான் என்பது தான் நிபுணர்களின் கருத்து.
உப்பு போட்டாலே, உணவு அயிட்டங்களுக்கு தனி சுவை வந்து விடும் தான்; ஆனால், அதற்காக நாற்பதை தாண்டியும் உப்பை குறைத்துக் கொள்ளாமல் இருந்தால் தொல்லை தான்.
ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் கண்டிப்பாக உப்பை குறைத்துக்கொள்ள வேண்டும். உப்பினால் இவை ஏற்படுகிறதா என்று சர்வதேச சர்ச்சை நீடித்தாலும், உப்பை குறைத்தால் இதய நோய் கட்டுப்படுகிறது என்பது உண்மை .
பிரஷர் குறையும்
“லப் டப்’ என்று இதயத்துடிப்பு கேட்கிறதே, அப்போது இதயம் சுருங்கி, விரியும். அப்போது ஏற்படும் அழுத்தம் தான் “சிஸ்டாலிக்’ என்று அழைக்கப்படுகிறது.
மற்ற உறுப்புகளுக்கு ரத்தம் செலுத்தப்படுவது அந்த அழுத்தம் மூலம் தான்.
இதயத்துடிப்புகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் மட்டும் தான் இதயம் ஓய்வெடுக்கிறது. இந்த இடைவெளியில் ஏற்படும் அழுத்தம் தான் ரத்த அழுத்தம் “டயஸ்டாலிக்’ என்று பெயர்.
ரத்த அழுத்தம் 130/85 என்பது நார்மலானது; சுருங்கி விரியும்போது எடுக்கப்படுவது தான் முதலானது; அதை டாப் நம்பர் என்பர்; அதுபோல, இரண்டாவது குறிக்கப்படுவது தான் டயஸ்டாலிக்.
மருந்து, மாத்திரைகள் மட்டுமின்றி, உப்பு குறைக்கப்பட்டாலே, ரத்த அழுத்த அளவு தானாகவே குறைந்து விடும்.
எதை கைவிடணும்?
* பிரஷ் பழங்கள், காய்கறிகளை சாப்பிட பழகலாம்; உப்பு குறைத்து உணவு சாப்பிட பழக வேண்டும்.
* பாட்டில் பானங்களை கண்டிப்பாக கைவிட வேண்டும். அதில் உப்பு அதிகம்.
* பாக்கெட்டில் அடைக் கப்பட்ட உணவு, நீண்ட நாள் பாதுகாப்புக் காக சோடியம் பயன் படுத்தப்படுகிறது. உப்பு அதிகமாக உள்ளதால் அவற்றை தவிர்க்க வேண்டும்.
* ஊறுகாய், உப்பு போட்ட நொறுக்குகளை மறந்து விட வேண்டும்.

நன்றி தினமலர்! rolleyes.gif

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: