பொடுகு தொல்லை நீங்க வேண்டுமா?

பொடுகு தொல்லை நீங்க வேண்டுமா?


கூந்தல் உதிருவதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று, பொடுகு. சிலருக்கு பொடுகு காரணமாக தலையில் அரிப்பு போன்றவை ஏற்படும். இது போன்ற பொடுகு பிரச்னையால் அவதிப்படுபவரா நீங்கள்? இதோ உங்களுக்காக, சில டிப்ஸ்…

*மிளகு தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறிய பின் குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும்.

*வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைவதுடன் பொடுகு தொல்லை நீங்கும்.

*தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல் லது சீயக்காய் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும்.

*வேப்பிலை கொழுந்து, துளசி ஆகியவற்றை நைசாக அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

*வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து, அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறைந்து போகும்.

* எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம் பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சை பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.

*தலைக்கு குளிக்கும் போது, கடைசியாக குளிக்கும் தண்ணீரில், வினிகர் கலந்து குளித்தால், பொடுகு நீங்கும்.

*நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர பொடுகு நீங்கும்.

*வாரம் ஒரு முறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்தால், பொடுகு தொல்லை நீங்கும்.

*தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்னை நீங்கும்.

*தேங்காய் பால் எடுத்த பின் கையை தலையில் நன்றாகத் தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு, மறைந்து விடும்.

*முதல்நாள் சாதம் வடித்த தண்ணீரை எடுத்து வைத்து, மறுநாள் அதை தலையில் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும்.

*தயிர், முட்டை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகு மறையும்.

*துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.

கூந்தல் மிருதுவாக இருக்க…
*வாரம் ஒரு முறை மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

*நெல்லிக்காயை பாலில் வேகவைத்து, கொட்டை நீக்கிவிட்டு மசித்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து குளித்தால், கூந்தல் மிருதுவாக இருக்கும்.

*டீ டிகாஷனில் சிறிதளவு எலுமிச்சம்பழச்சாறு கலந்து தலையில் தேய்த்து குளித்தால், கூந்தல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

நன்றி தினமலர்! rolleyes.gif

Advertisements

51 பின்னூட்டங்கள்

 1. sathishkumar said,

  நவம்பர் 26, 2009 இல் 3:02 பிப

  Sir u r tips is very usefull thank you so much

 2. PRABA said,

  பிப்ரவரி 26, 2010 இல் 12:41 பிப

  s, ur tips is very good thing ! !

 3. தேவி said,

  பிப்ரவரி 27, 2010 இல் 6:55 முப

  நிறைய நபருக்கு உதவியதில் நன்மை தான்!

 4. dr.c.chandra said,

  மார்ச் 13, 2010 இல் 3:34 பிப

  useful tips you given.all are simple method and easy making goods.

 5. rekha said,

  மே 29, 2010 இல் 5:18 முப

  Thanks for u r tips……..

 6. SURESH KUMAR said,

  ஜூன் 18, 2010 இல் 9:20 முப

  sir i have dandurf then eich also how can solve it pls give some idea

 7. kumar said,

  ஜூலை 13, 2010 இல் 8:29 முப

  sir i have more dandruff and fall of my hair and itching also pls give me a some tips ! THANK U

 8. தேவி said,

  ஜூலை 15, 2010 இல் 10:18 முப

  இதிலேயே நிறைய டிப்ஸ் இருக்கே குமார்! ஒ.கே மேலும் எனக்கு தெரிந்த தகவல்களை பதிவு செய்கிறேன்…

 9. jeni said,

  ஜூலை 29, 2010 இல் 3:36 பிப

  thanks a lot 4 ur useful tips

 10. M.Rama Prabha said,

  நவம்பர் 9, 2010 இல் 12:23 பிப

  maruthani pottal hair color brown maruma? i have to use maruthani but change the hair color why?

 11. தேவி said,

  நவம்பர் 12, 2010 இல் 2:45 பிப

  நான் போடுகிறேன்… வெயிலில் பார்க்கும் போது அரக்கு கலரா தெரியும் ராமா…

 12. prabu said,

  ஜனவரி 22, 2011 இல் 8:51 பிப

  its really useful to us.. thank u.

 13. prabu said,

  ஜனவரி 22, 2011 இல் 8:52 பிப

  its really useful to us.. thank u

  its really useful to us.. thank u

 14. Kuchalambal said,

  பிப்ரவரி 19, 2011 இல் 7:30 முப

  Mokka tips Devi

 15. Kuchalambal said,

  பிப்ரவரி 19, 2011 இல் 7:31 முப

  Neeng eppa marumozhi solveenga

 16. Kuchalambal said,

  பிப்ரவரி 19, 2011 இல் 7:32 முப

  Nan oru tips sollava

  “antha podugu kitta poi “podugey podugey poividu podugey” sonna aduvey poidum”

  Idu eppadi irukku

 17. தேவி said,

  மார்ச் 5, 2011 இல் 3:57 முப

  நல்ல ஐடியா தான்! நிறைய தடவை முயற்சி பண்ணியிருக்கீங்களோ….

 18. தேவி said,

  மார்ச் 5, 2011 இல் 3:58 முப

  இதோ சொல்லிட்டேனே

 19. தேவி said,

  மார்ச் 5, 2011 இல் 3:59 முப

  அந்த மொக்க டிப்ஸையும் படிச்சு தானே பதில் எழுதியுள்ளீங்க…
  உங்களுக்கு பிடிக்கலையினா என்ன…
  நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்!

 20. lakshmanan said,

  மே 26, 2011 இல் 7:30 பிப

  nantri welcome

 21. Vishnu Priya said,

  ஒக்ரோபர் 4, 2011 இல் 10:04 பிப

  Thanks for your valuable tips

 22. RAHUL said,

  நவம்பர் 8, 2011 இல் 3:21 பிப

  VERY NICE . I VE SOM IDEAS 8940455055

 23. தேவி said,

  நவம்பர் 10, 2011 இல் 10:45 முப

  இது என்ன போன் நம்பரா ராகுல்?

 24. Karthick said,

  நவம்பர் 24, 2011 இல் 11:01 முப

  hi Devi How are u

 25. jeeva said,

  திசெம்பர் 7, 2011 இல் 1:58 பிப

  devi enakku podugu rombave irkku adhanala arippum adhigama irukku neenga sonna tips ah na try panni pakuren. enaku oru nalla shappoo va sollunga.

 26. jeeva said,

  திசெம்பர் 7, 2011 இல் 2:02 பிப

  devi neenga kudutha tips la yendha tips ah senja sikirame podugu pogum. then milagu thool, pall podanum nu sollirukkinga kaasadha paal ah kasuna paal ah.

 27. kannan said,

  திசெம்பர் 11, 2011 இல் 3:45 பிப

  i have some soriyasis symptoms on my head , Have you got any useful information about that, if u have plz email me

 28. தேவி said,

  திசெம்பர் 19, 2011 இல் 11:02 முப

  இதனை பின்பற்றி பாருங்க…
  இல்லையென்றால் மருத்துவரிடம் செல்வது நல்லது கண்ணன்

 29. தேவி said,

  திசெம்பர் 19, 2011 இல் 11:04 முப

  காய்ச்சாத பால்தான் ஜீவா…

 30. தேவி said,

  திசெம்பர் 19, 2011 இல் 11:05 முப

  ஆயுர்வேத ஷாம்பு நல்லது…
  அதிக கேமிக்கல் கலந்த ஷாம்புவை தேய்த்தால் மேலும் அரிப்பு வர வாய்ப்பிருக்கிறது ஜீவா

 31. MADHI said,

  ஜனவரி 9, 2012 இல் 6:25 பிப

  Thank u Devi .,

 32. MADHI said,

  ஜனவரி 9, 2012 இல் 6:26 பிப

  NAN TRY PANREN DEVI . THANK U

 33. MADHI said,

  ஜனவரி 10, 2012 இல் 7:48 பிப

  ans me

 34. subitha said,

  ஜனவரி 13, 2012 இல் 6:13 பிப

  auyrvedha shampoo name sollungalen pls

 35. தேவி said,

  ஜனவரி 28, 2012 இல் 9:05 பிப

  ஹிமாலயா, அயூர் போன்ற ஷாம்பூகள் நன்றாயிருக்கும் தோன்றுகிறது சுபிதா

 36. MADHI said,

  ஜனவரி 30, 2012 இல் 11:12 முப

  Thank u Devi

 37. suha said,

  மார்ச் 6, 2012 இல் 11:23 முப

  hi devi seeyakkai thalikku nallatha

 38. Latha said,

  ஏப்ரல் 15, 2012 இல் 6:57 பிப

  Idhellam podugu pogathane? ok i will try

 39. தேவி said,

  மே 12, 2012 இல் 11:33 முப

  அப்படி தான் தோனுது லதா

 40. தேவி said,

  மே 12, 2012 இல் 11:38 முப

  ரொம்ப நல்லது! ஆனால் பல பேரும் அது ஒத்து வராது!
  அதனால தரமான ஷாம்புக்களை பயன்படுத்தலாம் சுகா!

 41. ashika said,

  நவம்பர் 24, 2012 இல் 12:58 பிப

  thankyou for ur tips in dandref

 42. sheela said,

  திசெம்பர் 4, 2012 இல் 3:23 பிப

  podugu thollai neenga nanum oru vazhi soallalama friends. kattalai oontai eaduthu athai neelavaakil erandaga veadi, athanul oru kaypidi venthayathai parapi kattalaiyai nool kondu kattivida veandum. mithamana kaattum vealichamum ulla arail veathu 2 nadkal kalithu athai eaduthu athanudan oru muddai veallai karu 5 soddu coconut oil 5 soddu patham oil viddu mixil areathu thalail mudigalin vearkalil padumaru thadavi 1 mani nearam kalithu lighta shampoo podu kulikanum. (ithu ennoda paatti amma eanaku soalithanthu friends) podugu illathavanga kooda ippadi pannalam. eana nan intu varai ithai use pandrean.

 43. தேவி said,

  ஜனவரி 10, 2013 இல் 1:32 பிப

  good tips sheela.
  thankyou

 44. apachekrish said,

  மார்ச் 3, 2013 இல் 6:47 பிப

  mikkavum payanulathu

 45. honey said,

  மார்ச் 5, 2013 இல் 12:37 பிப

  ithu yyelllathaum orea nearatthula use panuna enna nadakum..?podugu poiduma.?illa hair eh poiduma.?

 46. தேவி said,

  மார்ச் 27, 2013 இல் 8:20 முப

  நம்பிக்கையோடு முயற்சித்து பாருங்கள் பலன் கிடைக்கும் ஹனி!

 47. ramya rajiv said,

  ஓகஸ்ட் 28, 2013 இல் 3:44 பிப

  vry helpful tips ……………….

 48. yesodha yesosree said,

  நவம்பர் 15, 2013 இல் 4:46 பிப

  nalla pathivu nandri

 49. Karthikeyani said,

  நவம்பர் 16, 2013 இல் 2:59 பிப

  தலையில் வேம்பு அரைத்து தேய்த்தால் முடி உதிருமா?

 50. தேவி said,

  நவம்பர் 16, 2013 இல் 3:45 பிப

  வேம்பை நைசாக அரைத்து 1/4மணி நேரம் ஊறவைத்து தேய்த்து குளித்து பாருங்கள் முடி உதிராது Karthikeyani

 51. avila said,

  மார்ச் 19, 2014 இல் 3:09 பிப

  thank you devi for your valuable tips


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: