ஏகன் – திரைவிமர்சனம்

படத்தைப்பற்றி:
இந்த படத்தில் சில சீன்கள் இந்தி படத்தில் பார்த்த ஞாபகம்!
இந்த படத்தில் அஜீத் நாயகனாகவும் நயன் தாரா நாயகியாகவும் வில்லனாக சுமன்னும் நடித்துள்ளார்!
இதுவும் போலீஸ் அதிகாரியின் கதை தான்!
அனைத்து பாடல்களும் சூப்பர்!

கதை சுருக்கம்:

வில்லன் சுமனுடைய பழைய கூட்டாளி தேவன் போலீஸ் அப்ரூவராக மாறிவிட, அவரைக் கொன்று விடத் முயற்சிக்கின்றார் சுமன். இதனால் மறைந்து வாழ்கிறார் தேவன். அவருக்கு ஒரே ஒரு மகள் பியா ஊட்டியில் ஒரு கல்லூரியில் படிக்கிறார்.

பியாவின் உயிருக்கு சுமனால் ஆபத்து வர வாய்ப்பு இருக்கிறது என்று போலீஸ், அவரைப் பாதுகாக்கும் பொறுப்பை அஜீத்திடம் ஒப்படைக்கின்றது. போலீஸ் என்று தெரியாமல் ஒரு மாணவரைப் போல மாறு வேடத்தில் போய் பாதுகாக்க வேண்டும். கூடவே, மறைந்திருக்கும் அவரது தந்தை தேவனையும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற கட்டளையும் இடுகிறது.

கல்லூரியில் சேருகிறார் அஜீத்! அங்கே பிரின்ஸிபாலாக நடிகர் ஜெய்ராம், அவருக்கு உதவியாளராக சத்யன் இருவரும் அவ்வப்போது வந்து நகைச்சுவையில் கலக்குகிறார்கள்.

அங்கே போன பிறகுதான் தனக்கு ஒரு தம்பி நவ்தீப் இருப்பதையும் ( நாசருக்கும் சுஹாசினிக்கும் குழந்தையில்லாததால் அஜீத்தை தத்தெடுத்து பாசத்தை கொட்டி வளர்க்கிறார்கள். பின்பு சுஹாசினிக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அதனால் அஜீத்தை வெறுக்கிறார். ஆனால் நாசர் பழைய படி அன்புடன் நடத்துகிறார். ஆனால் சுஹாசினியோ அவனை ஹாஸ்டலில் விட்டுவிடுங்கள் இல்லையென்றால் நானும் என் மகனும் வெளியே சென்றுவிடுவோம் என்று கூற நீங்கள் போங்கள் நான் அஜீத்துடன் தான் இருப்பேன் என்று கூறுகிறார்), அவரும் அதே கல்லூரியில் படிப்பதையும் தெரிந்து கொள்கிறார் அஜீத்.

முதலில் அனைவரும் நண்பனாக ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் பிறகு நண்பாக்கி கொள்கிறார்கள். நயன் தாரா ஆசிரியையாக வருகின்றார். அவரை கிளாமர்க்காவே இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். மற்றபடி அவரை பற்றி சொல்ல ஒன்றுமில்லை!

பின்பு மகளை பார்க்க கொலையாளி வரும் போது பிடித்துவிடுகிறார் அஜீத்! பிறகு என்ன ஆச்சு? அஜீத் குடும்பம் ஒன்றாக சேர்ந்ததா? என்பது தான் மீதி கதையே!

Advertisements

திண்டுக்கல் சாரதி – திரைவிமர்சனம்

Tamilwin.com

படத்தைப் பற்றி சில தகவல்கள்:

இந்த படம் மலையாளம் ‘வடக்கி நோக்கி யந்திரம்’ படத்தின் remix ஆகும்.

இதில் ஹீரோவாக கருணாஸ்,  ஹீரோயினியாக கார்த்திகா, அம்மாவாக சரண்யா.

புதிய இயக்குநர் சிவசண்முகன்! நன்றாக கதைக்கு ஏற்றாற்போல் நடிகன் நடிகைகளை தேர்ந்தெடுத்துள்ளார்!

இந்த படத்தின் பாடல்களில் சில பாடல்கள் பிரமாதம்!

கதை சுருக்கம்:

கருப்பான ஆணுக்கு சிவப்பான பெண்ணை கல்யாணம் பண்ணி வைத்தால் என்ன என்ன பிரச்சனை வரும் என்பதை நகைச்சுவையுடன் யதார்த்தமாக கூறியுள்ளார் இயக்குனர்! இந்த கதாபாத்திரம் கருணாஸ்க்கும் கார்த்திகாவும் ரொம்பவே பொறுந்தியுள்ளது.

மிகவும் கருப்பான இளைஞனான கருணாஸுக்கு பொன்னு பார்க்கிறார்கள். இவர் கருப்பாக இருப்பதால் யாரும் மணக்க முன் வரவில்லை.  கருப்பான பெண்கள் கூட கட்டிக்கொள்ள முன்வரவில்லை. கடைசியாக நம் ஹீரோயினியை பெண் கேட்டு போகிறார்கள் அம்மாவும் மகனும். அவள் ரொம்ப சிவப்பாக  இருக்கிறாள்! என்னை கட்டிக்கொள்ள மாட்டாள்! வாம்மா போகலாம் என்று சொல்லும் போது அவள் எனக்கு சம்மதம் என்று சொல்ல கருணாஸ் சந்தோஷத்தில் துள்ளுகிறார்.  இருவருக்கும் திருமணமும் முடிந்தது.  நன்றாக வாழ்க்கை நடந்து கொண்டிருக்கும் போது மனைவி மேல் சந்தேகம் வர அதனால் நிறைய பிரச்சனைகள் வருகிறது. இதனை எப்படி கார்த்திகா எதிர்கொள்கிறார்? கருணாஸ் மாறுவாரா! என்பது தான் கதையே!

« Older entries