பாண்டி – திரைவிமர்சனம்

பாண்டி – திரைவிமர்சனம்நடிகர் – ராகவா லாரன்ஸ்
நடிகை – சிநேகா
இசை – ஸ்ரீகாந்த்தேவா
இயக்குனர் – இராசுமதுரவன்

இது ஒரு குடும்பக் கதை. அந்த குடும்பத்தில் அப்பா(நாசர்), அம்மா(சரண்யா), 1 அண்ணன், 3 தங்கை மற்றும் லாரன்ஸ் உள்ளனர். வழக்கம்போல் உதாரியாக வேலைவெட்டியில்லாமல் சுற்றிக்கொண்டியிருக்கிறார். அந்த சமயம் சிநேகாவை காதலிக்கிறார். லாரன்ஸ்யை பார்த்தாலே அப்பாவுக்கு ஆகாது. நமக்குன்னு சொந்த வீடு வேண்டும்னு சரன்யா எப்போதும் லாரன்ஸ் சொல்லிக்கொண்டிருப்பார். மூத்த தங்கச்சிக்கு கல்யாணம் செய்து போது பணம் தேவைப்படும் போது தனது சொந்த நிலத்தை அடமானம் வைத்து பணத்தை பிரட்டி அப்பா கொண்டுவருவார். அது காணாமல் போகவும் லாரன்ஸ் (பாண்டி) தான் எடுத்துருப்பான் என்று அவனை போட்டு அப்பா அடிக்க அண்ணன் அந்த பணத்தை எடுத்துக் கொண்டு ஊறை விட்டு ஓடிவிட எல்லா பொறுப்பும் பாண்டி மேல் விழ கடன் வாங்கி கல்யாணத்தை நடத்துவார். பாண்டிக்கும் சிநேகாவுக்கும் கல்யாணம் ஆகி கடனை அடைக்க துபாய் சென்றுவிடுவார் ஹீரோ. அங்கிருந்து பணத்தை அனுப்பி 2 தங்கைக்கும் கல்யானம் பண்ணிவைத்துவிடுவார். அப்பாவின் எதிரி நாசரை கொலை செய்வதற்காக லாரியில் ஸ்கூட்டரை மோத சரண்யா இறந்துவிடுவார். இந்த விஷயம் துபாயில் இருக்கும் நம்ம ஹீரோவுக்கு தெரியாது. அவர் திரும்பி ஊருக்கு வரும்போது விஷயம் தெரிந்தவுடன் வில்லனை அடித்து நொறுக்கி வெட்டும் போது அய்யனார் விழாவில் ஆட்டை வெட்டும் போது வில்லன் தலையை கொடுத்துவிடுவான். மறுபடியும் துபாய் கிளம்பாமல் அம்மா நினைவாக சொந்தவீட்டை கட்டி அங்கே இருந்துவிடுவார்.

இதில் சரண்யாவின் நடிப்பு டக்கர். பாட்டை ஒருதடவைக்கு மேல் பார்க்க முடியாது. படக்கதை பழைய கதையாக இருந்தாலும் பார்க்கலாம். நமீதா ஒரு சில பாடலுக்கு வந்து போகிறார். லாரன்ஸ் நடனம் சூப்பர்.

Advertisements

தாம்தூம் – விமர்சனம்

மருத்துவரான ஜெயம் ரவி பொள்ளாச்சிக்கு அக்கா அனு ஹாசனை பார்க்க வருகிறார். வந்த இடத்தில் கங்கனா ரனவத்தின் காதலில் விழுகிறார். சின்ன பிரச்சனைக்குப் பின் நிச்சயதார்த்தம் வரை செல்கிறது காதல்.

திருமணத்திற்கு சொற்ப நாட்கள் இருக்கும் நிலையில், மாஸ்கோ கான்ஃபரன்சுக்கு ஜெயம் ரவியை அனுப்புகிறது இந்திய அரசு. அங்கு கொலை பழி ஒன்றில் மாட்டிக்கொள்கிறார்.

மொழி தெரியாத ஊர். தனது நிரபராதித்துவத்தை நிரூபிக்க முடியாத நிலை. ஹீரோ என்ன செய்வார்? ஆம், போலீசிடமிருந்து தப்பித்து உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து, அந்நிய மண்ணில் ஜெயம் நாட்டுகிறார்.

கங்கனா ரனவத்துடனான காதல் காட்சிகளில் ஜெயம் ரவி இளம் ரவி. கதை ரஷ்யா சென்றபின் புயல் ரவி. படத்துக்குப் படம் மெருகேறி வருகிறது ரவியின் நடிப்பும், தோற்றமும். போலீஸ், போதை கும்பல் இரண்டுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு அவர் தவிப்பதும், ஆவேசத்தில் ஏறி மிதிப்பதும் ரசிக்க முடிகிறது.

ஆடிக் காற்றில் பறக்கும் சருகு போல் இருக்கிறார் கங்கனா. கிராமத்துக்கு பொருந்தாத தோற்றம். நடிக்க தெரிந்திருப்பது ஆறுதல்.

நடிப்பிலும், அழகிலும் கங்கனாவை கார்னர் செய்கிறார் மாஸ்கோவின் தமிழ் வக்கீலாக வரும் லட்சுமிராய். இந்திய தூதரக அதிகாரியாக ஜெயராம். அமைதியான வில்லன். தூதரக பதவி என்பது நேர்மை மிகத் தேவைப்படும் ஒன்று. இவரோ போதை கும்பலுடன் பழக்கம் வைத்திருக்கிறார். இப்படியா இருக்கிறார்கள் இந்திய தூதரக அதிகாரிகள்?

படத்தின் ஒவ்வொரு பிரேமும் ஜீவாவின் இழப்பை பிரமாண்டப்படுத்துகின்றன. ரஷ்யாவின் அழகை ஜீவாவின் கேமரா அள்ளியிருக்கும் விதம் அபாரம். பாடல்களில் அரியர்ஸ் வைக்கவில்லை ஹாரிஸ். ஒவ்வொன்றும் துளி தேன்!

நன்றி: tamil.webdunia.com

« Older entries