வா வா என் தேவதையே – அபியும் நானும்

படம்: அபியும் நானும்
பாடல்: வா வா என் தேவதையே

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….
வான் மிதக்கும்… கண்களுக்கு….
மயில் இறகால் மையிடவா…
மார் உதைக்கும்… கால்களுக்கு…
மணி கொலுசு நான் இடவா…

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….

செல்வ மகள் அழுகை போல்
ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை
பொன் மகளின் புன்னகைப்போல்
யுக பூக்களுக்கு புன்னைக்க தெரியவில்லை
என் பிள்ளை எட்டு வைத்த நடைப்போல எந்த
இலக்கண கவிதையும் நடந்ததில்லை
முத்துக்கள் தெரிக்கின்ற மழலை போல ஒரு
உள்ளூர மொழிகளில் வார்த்தை இல்லை
தந்தைக்கும் தாய் அமுதம் சுறந்ததுமா
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே…

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….

பிள்ளை நிலா பள்ளி செல்ல
அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்
தெய்வ மகள் தூங்கயிலே
சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்
சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை
பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன்
மேல்நாட்டு ஆடை கண்டு நடந்த போது இவள்
மிசையில்லாத மகள் என்று சொன்னேன்
பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே
ஒரு பிரிவுக்கு ஒத்திகை பார்த்துக் கொண்டேன்

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….
வான் மிதக்கும்… கண்களுக்கு….
மயில் இறகால் மையிடவா…
மார் உதைக்கும்… கால்களுக்கு…
மணி கொலுசு…. நான் இடவா…

Advertisements

ஒரே ஒரு ஊரிலே… ஒரே ஒரு அய்யா…. – அபியும் நானும்

படம்: அபியும் நானும்
பாடல்: ஒரே ஒரு ஊரிலே… ஒரே ஒரு அய்யா….

எஹா ஹா ஹா ஹா…
எஹா ஹா ஹா ஓஹோ ஹோ ஹோ
ஏ.. ஒஹோ ஓஹோ… ஏ.. ஒஹோ ஓஹோ… ஏ… ஏ…

ஒரே ஒரு ஊரிலே…
ஒரே ஒரு அய்யா….
ஒரே ஒரு அய்யாவுக்கு
ஒரே ஒரு அம்மா
ஒரே ஒரு அம்மா பெத்தா
ஒரே ஒரு பொன்னு
அவ பொன்னு இல்ல பொன்னு இல்ல
கடவுளோட கண்ணு …..

அய்யா இருக்காகளே அய்யா
பாசம் இல்லாம பலரு பைத்தியமா ஆனதுண்டு
பாசத்தினாலே இவரு பைத்தியமா ஆவதுண்டு
காத்தடிச்சா மகளுக்கு
காவலுக்கு நிப்பாரு
காய்ச்சலடிச்சா சூரியனை
கைது செய்ய பார்ப்பாரு
மக மட்டும் மக மட்டும் உசிரா
மத்ததெல்லாம் மத்ததெல்லாம்
இவருக்கு கொசுரு…

ஒரே ஒரு ஊரிலே…
ஒரே ஒரு அய்யா….
ஒரே ஒரு அய்யாவுக்கு
ஒரே ஒரு அம்மா

அக்கா இருக்காங்களே எங்க அங்க
பூச்சியை பார்த்தாலே சிலரு புத்தி மாறி போவாங்க
பூகம்பமே வந்தாலும் அக்கா பூத்தொடுத்து நிப்பாங்க
பிறந்ததும் ஒரு குழந்தை
கொடுத்தவனும் ஒரு குழந்தை
தொலையட்டும் குழந்தை தனம்
தொல்லையல்லாம் பொறுப்பாங்க
எங்க அக்கா எங்களுக்கு பரிசா
எங்க அக்கா மனசோட
இமயமலை சிறிசு…

தன தன தன ம் தும் தும் தன தும்
தன தன தன ம் தும் தும் தன தும்
தன தன தன ம் தும் தும் தன தும்
தன தன தன ம் தும் தும் தன தும்

அம்மா இருக்காளே எங்க அம்மா
பிறந்து வரும் போதே சிலரு வரம் வாங்கி வருவாங்க
பிறந்து வரும் போதே சிலரு வரம் தருவே வருவாங்க….
வரமா வந்த அம்மா
வாங்கையுள்ள தங்கம்மா
சித்தெரும்ப நசுக்காத
சிங்கம் தான் எங்கம்மா
மறுபிறவி உண்டுன்னா
எனக்கென்ன வேண்டும்
இந்த மகளுக்கு தாய் போனா
மகனாக வேண்டும்….

ஒரே ஒரு ஊரிலே…
ஒரே ஒரு அய்யா….
ஒரே ஒரு அய்யாவுக்கு
ஒரே ஒரு அம்மா
ஒரே ஒரு அம்மா பெத்தா
ஒரே ஒரு பொன்னு….
அவ பொன்னு இல்ல பொன்னு இல்ல
கடவுளோட கண்ணு …..

« Older entries