அன்புள்ள தங்கச்சி! – 9

அன்புள்ள தங்கச்சி!

பாகம் – 9

கார்த்திக் விளையாட்டில் சேர்ந்த நாளிலிருந்து அவன் முகத்தில் புத்துணர்ச்சி மிகுந்து இருந்தது. எப்படியும் பிரியாவுக்கு விளையாட்டில் ஜெயித்து செருப்பு வாங்கி கொடுத்துரனும் என்ற எண்ணத்துடன் வீட்டிற்கு நடந்தான்!

வீட்டிற்கு சென்றவுடன் பள்ளிக்கூடத்தில் நடந்த விஷயங்களை தங்கையிடம் பகிர்ந்தான். பிரியாவும் அண்ணன் எப்படியும் ஜெயித்து செருப்பு வாங்கி கொடுத்துருவான் என்று நிம்மதியில் தூங்கினாள்.

மறுநாள் விடிந்தது. வழக்கம் போல் இருவரும் பள்ளிக்கூடத்திற்கு ஆயுத்தம் ஆனார்கள். பிரியா பிரியா இன்னும் பள்ளிக்கூடம் கிளம்பலையா என்று அம்மா கத்திக்கொண்டு இருந்தாள். பிரியாவும் அம்மா இதோ கிளம்பிவிட்டேன்! போயிட்டு வாறேன் அம்மா! போயிட்டு வாறேன் அண்ணா! என்று சொல்லிக் கொண்டு பள்ளிக்கூடத்திற்கு விரைந்தாள்!

கார்த்திக் காலை பொழுதை வீணாக்காமல் தன் வீட்டு தெருவிலிருந்து மற்ற தெருக்களுக்கு ஓடி ஓடி பழகினான்! கார்த்திக் கார்த்திக் என்று கத்திக்கொண்டே மகனை காணாமல் தேடிக் கொண்டிருந்தாள் அம்மா! விளையாட்டு பிள்ளையா இருக்கே அம்மாவுக்கு உதவி செய்யாமல் விளையாட சென்றுவிட்டானே வீட்டிற்கு வரட்டும் காலை ஒடிக்கிறேன் என்று திண்டிக்கொண்டே உள்ளே சென்றாள்.

கார்த்திக்கும் பயிற்சி நிறைய செய்தான். மாலை நேரம் வந்தது. ப்ரியாவும் வந்தாள். கார்த்திக்கும் பள்ளிக்கூடம் சென்றான். அங்கு ஆசிரியரும் பயிற்சி கொடுத்தார். முன்பு சென்ற நேரத்தை விட இன்று குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்தான் கார்த்திக். அதனை கண்டு ஆசிரியர் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.

கார்த்தி இங்கே வாப்பா! நிச்சயம் உன்னால் இந்த பள்ளிக்கூடம் பேசப்படும்! நல்லா பயிற்சி எடு! பாடவேளை முடிந்தவுடன் இங்கே வந்துவிடு நான் பயிற்சி கொடுக்கிறேன்! உனக்கு விளையாட்டு சம்பந்தமாக என்ன வேண்டுமானாலும் தயங்காமல் என்னை கேள்! நான் உதவி செய்ய தயாராக இருக்கிறேன் என்று ஆசிரியர் கூறினார்.

உதவி எல்லாம் வேண்டாம் சார்! நிச்சயம் நான் வெல்வேன் சார்! வீட்டிலும் பயிற்சி எடுக்கிறேன் சார்! என்று சொன்னான். நல்ல பிள்ளை! இதனை கைவிட்டு விடாதே! தினமும் பயிற்சி எடு! என்று சொல்லிக்கொண்டு கார்த்திக் தோளில் அன்பாக வருடி விட்டு பள்ளிக்கூடத்திற்குள் சென்றார்.

கார்த்திக் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு செல்லாமல் வெகுநேரம் பயிற்சி எடுத்தான்! இரவு நேரம் வந்துவிட்டதை கூட தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்தான்.

அவன் வீட்டிலோ கார்த்திக்கை காணாமல் அம்மா கொதித்திருந்தாள்! வரட்டும் என்ன பண்றேன் பார் ப்ரியா! என்று கூறி சொல்லி முடிக்கும் போது கார்த்திக்கின் சத்தம் கேட்டது. அம்மா வேகமாக போய் சப்பென்று கன்னத்தில் அரைந்தாள்! ஏன்டா லேட்டு? இரவு நேரம் வரது கூட தெரியாம விளையாடிட்டு இருந்தியா! உண்மைய சொல்லுடா என்று கார்த்திக் மீது அம்மா கணிந்து கொண்டாள்.

கார்த்திக் அம்மாவை நோக்கி அம்மா நான் விளையாட செல்லவில்லை! என் பள்ளிக்கூடத்தில் விளையாட்டு போட்டி நடக்குது! அதில நான் சேர்ந்திருக்கேம்மா! அதனால தினமும் பயிற்சி எடுக்கனும்! அதனால தானம்மா லேட்டு! இல்லையென்றால் நான் சீக்கிரம் வந்துவிடுவேனே என்று அழுது கொண்டே சொன்னான்…

அம்மாவும் நீ இதனை முன்னே சொல்லி இருந்தினா இப்படி நடந்திருக்க மாட்டேன்! என்று தனது முந்தானையை எடுத்து கார்த்திக்கின் ஈரம் வடிந்த கன்னத்தை துடைத்தாள். கார்த்திக் அழுவதை பார்த்து விட்டு பிரியாவும் அழுதாள். நீ ஏன்டி அழுற என்று அவளையும் தழுவிக் கொண்டாள் அம்மா…

தொடரும்………. smile.gif

ஆக்கம்: ரதி மகேஸ்வரன். rolleyes.gif

Advertisements