தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே – சின்ன தம்பி

படம்: சின்ன தம்பி
பாடல்: தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே

தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே
ஆடியிலே கண்டெடுத்த அற்புத ஆனிமுத்தே
தொட்டி மேலே முத்து மாலை
சின்னப் பூவே விளையாடா
சின்னத் தம்பி இசைப் பாட…

தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே
ஆடியிலே கண்டெடுத்த அற்புத ஆனிமுத்தே
தொட்டி மேலே முத்து மாலை
சின்னப் பூவே விளையாடா
சின்னத் தம்பி இசைப் பாட…

பாட்டேடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும்
பட்டமரம் பூமலரும் பாறையிலும் நீர் சுரக்கும்
ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் படிச்சேன்
ஏழு கட்ட எட்டு கட்ட தெரிஞ்சா நான் படிச்சேன்
நான் படிச்ச ராகமெல்லாம் யார் கொடுத்தா சாமிதான்
ஏடு எடுத்து படிக்கவில்லை சாட்சியன்ன பூமிதான்
தொட்டி மேலே முத்து மாலை
சின்னப் பூவே விளையாடா
சின்னத் தம்பி இசைப் பாட…

தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே
ஆடியிலே கண்டெடுத்த அற்புத ஆனிமுத்தே
தொட்டி மேலே முத்து மாலை
சின்னப் பூவே விளையாடா
சின்னத் தம்பி இசைப் பாட…

சோறு போடத் தாயிருக்க பட்டினியை பார்த்ததில்லை
தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்கும் போனதில்லை
தாயடிச்சு வழிச்சதில்லை இருந்தும் நான் அழுவேன்
நான் அழுதா தாங்கிடுமா உடனே தாய் அழுவா
ஆக மொத்தம் தாய் மனசு போல் நடக்கும் பிள்ள நான்
வாழுகிற வாழ்க்கையிலே தோல்விகளே இல்லதான்
தொட்டி மேலே முத்து மாலை
சின்னப் பூவே விளையாடா
சின்னத் தம்பி இசைப் பாட…

Advertisements

4 பின்னூட்டங்கள்

 1. Jessi said,

  பிப்ரவரி 9, 2009 இல் 9:34 முப

  Enakku mikavum piditha padal.

 2. தேவி said,

  பிப்ரவரி 11, 2009 இல் 8:35 முப

  நன்றி jessi 🙂

 3. Vijayakumar said,

  பிப்ரவரி 27, 2009 இல் 12:28 பிப

  Raaja is very very great. nan raajavin visiri athavathu paithianu sollalam.intha padathukku raaja araimani nerathula tunes pottu kodutharam

 4. தேவி said,

  பிப்ரவரி 28, 2009 இல் 2:13 பிப

  நானும் என் கணவரும் அவரை ரொம்ப ரொம்ப பிடிக்கும்! அவருடைய இசையில் தான் என் கணவருக்கும் பொழுதே விடியும்! அவர் இசையமைத்த ரமணமாலை என்று ஆடியோ கேசட்டை தினமும் காலையில் சுப்ரபாதம் போல் கேட்டு கொண்டிருப்போம்!
  நன்றி விஜயகுமார்! 🙂


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: