செடிகளை வளர்ப்பது எப்படி?

செடிகளை வளர்க்கும் முறை:

* எல்லோரும் எல்லோர் வீட்டிலும் செடிகளை வளர்க்க வேண்டும். ஏனென்றால் அப்பொழுது தான் நாம் தூய்மையான காற்றை சுவாசிக்கமுடியும். தாவரங்கள் கார்பன்டை ஆக்சைடை சுவாசித்து கொண்டு நமக்கு சுவாசிக்க ஆக்சைடை தருகின்றன. இதனால் நம் மனதும் வீடும் தூய்மையாக இருக்கும்.

* செடிகளை தொட்டியுடன் வாங்கி அப்படியே வளர்க்காமல் செடியை தனியாக எடுத்து பெரிய தொட்டியில் மாற்ற வேண்டும். அதற்கு முன் தொட்டியில் முதலில் செம்மண், நடுவில் கரிசல் மண், கடைசியில் ஆற்று மண் அல்லது செம்மண் சேர்க்க வேண்டும்.

* செடிகளுக்கு தினமும் காலையிலும் சாயங்காலத்திலும் தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீரை வெயில் வருவதற்கு முன்பு ஊற்ற வேண்டும். ஏனென்றால் சூரிய ஒளி வந்தவுடன் செடிகள் வளர்வதற்கு தேவையான ஸ்டார்ச் பொருள்களை உற்பத்தி பண்ணும். அதனால் வெயிலில் நீர் ஊற்றினால் செடி வளர்வது தடுக்கப்படும். இதை 10வது படிக்கும் போது தெரிந்து கொண்டேன்.

* வாரம் ஒரு முறை செடிகளில் சில இலைகள் மஞ்சள் கலரில் மாறி இருக்கும். அதை மட்டும் பறித்து கீழே போடாமல் காலியாக உள்ள தொட்டியில் சேகரியுங்கள். அது நாளடைவில் இயற்கை உரமாக மாறிவிடும். அதை நாம் செடிகளுக்கு போடலாம். அது மட்டுமல்லாது காய்கறி கழிவுகள், வெங்காயத்தோள், முட்டை கூடு, வடிக்கட்டிய டீத்தூள் ஆகியவற்றை கூட நாம் உரமாக பயன்படுத்தலாம். தேதி முடிந்த டானிக்குள் மாத்திரைகளை கூட நாம் உரமாக பயன்படுத்தலாம்.

*நாம் செடிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்தை அடிப்பதற்கு பதிலாக காய்ந்த வேப்பிலை இலைகளை போடலாம். இதனால் நமக்கும் பாதிப்பு வராது. இதை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம்.

* வாரம் ஒரு முறை செடிகளின் மேல் தண்ணீயைத் தெளிக்க வேண்டும். இப்படி தெளித்தால் செடிகளில் படிந்திருக்கும் அழுக்கு போய்விடும். அழுக்கு போய்விட்டால் சுத்தமான காற்று நமக்கு கிடைக்கும்.

*வாரம் ஒரு முறை மண்புழு உரம் போட்டு மண்ணைக் சின்ன சிமெண்ட் கரண்டியில் கிளறி விட வேண்டும். அப்போழுது தான் செடி நன்கு வளரும்.

* மாதம் ஒரு முறை தேவையில்லாமல் வளரும் கிளைகளை வெட்டி விடுங்கள். அப்பொழுது தான் செடிகள் மறுபடியும் வளர்ந்து பூக்கள் நிறைய பூக்கும்.

* ஜுன் மாதம் பதியம் போட்டால் செடிகள் நன்கு வளரும்.
பதியம் செய்யும் முறை:

ரோஜாத் தொட்டியில் உள்ள ஒரு கிளையை மற்றொரு மண் நிரப்பிய தொட்டியில் ஊண்றி வைக்கவும். அது ஒரு சில வாரங்களில் வளர தொடங்கி விடும். அந்த தொட்டி நன்கு வளர்ந்தவுடன் முதல் தொட்டியில் உள்ள கிளையை வெட்டி விடலாம்.
சில செடிகளில் கிளையை ஒடித்து வைத்தால் நன்கு வளரும்.
சில செடிகளில் பூக்கள் காய்ந்து விதை வரும். அதை தொட்டியில் மண் நிரப்பி போட்டாலும் நன்கு வளரும்.

* செடி தொட்டி அடியில் வைக்க இப்பொழுது பிளாஸ்டிகில் தட்டு கிடைக்கிறது. அதில் தொட்டியை வைத்து தண்ணீர் ஊற்றினால் செடி தேவையான தண்ணீரை உறிஞ்சிக்கொண்டு மீதி தண்ணீ ர் தட்டில் வந்து விழும். இதனால் செடி எப்பொழுதும் வாடாது.

* நீங்கள் அடிக்கடி ஊருக்கு செல்பவர்களா? கவலை வேண்டாம். நம்மிடம் வேஸ்ட்டான சிறிய வாட்டர் பாட்டில் அல்லது பெரிய வாட்டர் பாட்டில்கள் நிறைய இருக்கும். அதை தூக்கி கீழே போடாமல் அதில் நிறைய தண்ணீர் ஊற்றி ஒரு ஓரத்தில் சிறிய தூவாரம் போட்டு செடி தொட்டிகளில் வைக்கவும். இது ஒவ்வொரு சொட்டாக வடியும். இதனால் செடியும் வாடி போகாது. நீங்களும் வருத்தம் இல்லாமல் ஊருக்கு போகலாம்.

Advertisements

5 பின்னூட்டங்கள்

 1. paramaswari said,

  செப்ரெம்பர் 21, 2009 இல் 12:34 முப

  nalla pathivu thozi

 2. தேவி said,

  செப்ரெம்பர் 22, 2009 இல் 5:41 பிப

  எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு செடி வளர்ப்பது தான்!
  அதனால் தான் இவ்வளவு எழுத முடிந்தது!
  நன்றி பரமேஸ்வரி! 🙂

 3. KARTHIK RAJA said,

  ஜூன் 3, 2011 இல் 4:29 பிப

  Thanks for your Tips

 4. jayasankar said,

  ஜூன் 25, 2012 இல் 7:52 பிப

  thanks a lot

 5. GANGA said,

  செப்ரெம்பர் 4, 2012 இல் 1:00 பிப

  Continue your service. Thank you.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: