அன்புள்ள தங்கச்சி!
ஒரு அழகிய கிராமம் இருந்தது. அங்கே தான் கார்த்திக்கின் குடும்பமும் இருந்தது. கார்த்திக்கின் குடும்பத்தில் அப்பா, அம்மா, 2 தங்கைகள். மிகவும் ஏழையான குடும்பம்.
அப்போது ஒருநாள்,
கார்த்திக்கு….கார்த்திக்கு….. எங்கேயாடா போனே?
என்னம்மா! வந்துட்டேன்!
கார்த்தி போய் காய்கறி வாங்கிவாப்பா!
காசு! காசு இல்லப்பா! கடைக்காரரை கணக்குல வைச்சுக்க சொல்லு!
கார்த்திக் காய்கறி வாங்க செல்லும் போது, அண்ணா அண்ணா என்று முதல் தங்கை அழைத்தாள். அவள் பெயர் பிரியா!
என்ன பிரியா? இங்கே வாயேன்! என்னுடைய செருப்பு பிய்ந்து விட்டது! வரும்போது தைத்துக்கொண்டு வரியா!
சரி தா! காய்கறிக்கு போகும் வழியில் தான் செருப்புக் கடையும் இருக்கு!
பிரியா செருப்பை செருப்பு கடையில் தைத்துவிட்டு காய்கறிக்கடைக்கு சென்றான் கார்த்திக். தைத்த செருப்பை காய்கறி கடைக்கு வெளியே வைத்து விட்டு காய்கறி வாங்க உள்ள சென்றான். அதற்குள் குப்பை கொட்டும் நபர் அந்த செருப்பையும் எடுத்து குப்பையில் கொட்டிவிட்டு சென்று விட்டார். கார்த்திக் காய்கறி வாங்கிவிட்டு வெளியே வைத்திருந்த பிரியா செருப்பை எடுக்க போகும் போது செருப்பை காணாமல் திகைத்து நின்றான்.
செருப்பை தேடும் போது கடைகளில் உள்ள அனைத்து காய்கறி கூடைகளையும் கொட்டிவிட்டான். கடைகாரர் ஏன்டா கொட்டின? ம்…ம்… தங்கச்சி செருப்பை காணாம் என்று அழுதுகிட்டே சொன்னான். கடைக்காரனோ அப்படியெல்லாம் இங்க செருப்பு இல்லாடா! மரியாதை இங்கிருந்து போயிரு! என்று கார்த்திக்கை விரட்டி விட்டான். கார்த்திக்கோ போகாமல் திரும்பி திரும்பி தேடிப்பார்க்க அந்த கடைக்குச் சென்றான். மறுபடியும் காய்கறி கொட்டி விட்டது! உடனே கடைக்காரன் அவனை கம்பால் அடித்து துரத்தி விட்டான்.
அழுதுகொண்டே வீட்டுக்கு கார்த்திக் திரும்பினான். காய்கறி கூடையை அம்மாவிடம் கொடுத்து விட்டு வெளியே வந்து ஓரத்தில் நின்று அழுதுகொண்டே இருந்தான். பிரியா வந்து எப்படிண்ணா செருப்பை தைச்சிருங்காங்க! காமிண்ணா! நாளைக்கு நான் பள்ளிக்கூடத்துக்கு போட்டுட்டு போகனும்… வேற செருப்பு இல்லாதால உன்னிடன் இதை தைக்க சொன்னேன். என்னண்ணா பதிலை சொல்லமாட்டேங்கிற?
பிரியா உன்னோட செருப்பு தொலைஞ்சிருச்சு….. நான் அந்த கடையில் வெளியே வச்சிட்டு காய்கறி வாங்கிட்டு வந்து பார்த்தேன்… அதை காணாம்…தயவு செய்சு அம்மா அப்பாட்ட சொல்லாதே! என்னை அடிப்பாங்க!
ஏன்னே அதை தொலைச்ச! எங்கிட்ட இருந்ததே அந்த ஒரு செருப்பு தான்! நான் இனிமேல் எப்படி பள்ளிக்கூடத்திற்கு செல்வேன்? அம்மா அப்பா கேட்டா என்ன சொல்வேன்?
ஆக்கம் – ரதி மகேஸ்வரன்
தொடரும்….. ![]()
இந்த கதை ஒரு வடமொழி நாட்டு படம்
! இந்த படத்தை சில வருடங்களுக்கு முன்பு பார்த்தேன்
! என் மனதை மிகவும் தொட்டுவிட்டது
! அதனை நம் மொழியில் மாற்றி வாழ்க்கையில் முதன் முறையாக கதை எழுதியுள்ளேன்
! என்னுடைய கதை உங்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது
! என்ன பிடிச்சிருக்கா நண்பர்களே!
