சேப்பங்கிழங்கு ஃப்ரை

தேவையான பொருட்கள்:

  • சேப்பங்கிழங்கு – அரை கிலோ
  • மிளகாய்ப்பொடி – 2 தேக்கரண்டி
  • கரைத்த புளி – 2 தேக்கரண்டி
  • கடலை மாவு – 2 தேக்கரண்டி
  • அரிசி மாவு – 2 தேக்கரண்டி
  • ரிபைஃண்ட் எண்ணெய் – அரை லிட்டர்

செய்முறை:-

  • தண்ணீரைக் கொதிக்கவைத்து சேப்பங்கிழங்குகளை நன்கு கழுவி சிறிது உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
  • அரைவேக்காடாக இருக்க வேண்டும்.
  • ஆறியவுடன் தோல் உரித்து வட்டவட்டமாக நறுக்க வேண்டும்.
  • மிளகாய்பொடி, உப்பு, புளித்தண்ணீர், கடலை மாவு, அரிசி மாவு இவை அனைத்தையும் கிழங்குத் துண்டுகளுடன் கலந்து 15 நிமிடங்கள் ஊறவிட்டு, எண்ணெயை சூடாக்கி சிவக்கப் பொரிக்கவும்.
  • மொறுமொறுவென்று சூப்பர் சுவையாக இருக்கும்.


ராஜேஸ்வரிரவிகுமார் , திருவையாறு

:ty: தினமணி

கோ‌‌‌ழி‌க்க‌றி கார வறு‌வ‌ல்

தேவையானவை

  • கோழிக்கறி – அரை ‌கிலோ
  • பூண்டு – 5
  • பச்சைமிளகாய் – சிறிதளவு
  • எண்ணெய் – 1 தே‌க்கர‌ண்டி
  • வினிகர் – 1 தே‌க்கர‌ண்டி
  • உப்பு – சிறிதளவு

செ‌ய்யு‌ம் முறை

  • கோழிக்கறியை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பூ‌ண்டையு‌ம், ப‌ச்சை ‌மிளகாயையு‌ம் ‌விழுதாக அரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.
  • ஒரு பாத்திரத்தில் கோழிக்கறி, வினிகர், உப்பு, பூண்டு, பச்சை மிளகாய் ‌விழுது சே‌ர்‌த்து ‌‌கிள‌றி அரை ம‌ணி நேர‌ம் ஊற ‌விடவு‌ம்.
  • ஒரு வாண‌லி‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு அ‌தி‌ல் ஊ‌றிய கோ‌ழி‌க்க‌றியை‌க் கொ‌ட்டி வத‌க்கவு‌ம். சிறிது நேரம் வாணலியை மூடி வைக்கவும்.
  • கோழிக்கறி வெந்ததும் திறந்து மீண்டும் கிளறவும்.
  • எல்லாம் ஒன்றாக கலந்து நன்றாக வெந்து சுண்டி வரும்போது இறக்கி வைக்க வேண்டும். சுவையான கோ‌ழி‌க்க‌றி கார வறுவ‌ல் தயார்.

« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers