சாம்பார் பொடி!

தேவையான பொருட்கள்:

  • தனியா -​ ஒரு கப்
  • கடலை பருப்பு -​ ஒரு டேபிள் ஸ்பூன்
  • துவ​ரம் பருப்பு -​ ஒரு டேபிள்ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு -​ ஒரு டீ ஸ்பூன்
  • மிளகாய் வற்றல் -​ எட்டு
  • மிளகு -​ ஒரு டீ ஸ்பூன்
  • சீரகம் -​ ஒரு டீ ஸ்பூன்
  • பெருங்காயம் தூள் ​ -​ ஒரு டீ ஸ்பூன்
  • கறிவேப்பிலை -​ ஒரு கொத்து ​(தேவைப்பட்டால்)
  • வெந்தயம் -​ ஒரு டீ ஸ்பூன்
  • எண்ணெய் -​ ஒரு டேபிள் ஸ்பூன்


செய்முறை:

  • கடா​யில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்​ணெய் ஊற்றி காய​வைத்து பருப்பு வகை​களை முத​லில் சேர்த்து சிவக்க வறுக்கவும்.
  • பருப்புகள் நன்றாக வறுபட்டதும் மீதம் உள்ள பொருட்களைச் சேர்த்து வறுத்து ஆறவிடவும்.​
  • நன்றாக ஆறியதும் மிக்சியில் பொடி செய்து மேலும் ஒரு இரண்டு நிமிடம் வெளியில் வைத்தால் மணக்கும் சாம்பார் பொடி தயார்.​
  • பின்பு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் இரண்டு ​ மாதம் வரை வாசனையுடன் இருக்கும்.

- விசாலாட்சி

நன்றி தினமணி! rolleyes.gif

பருப்பு பொடி

இந்த பொடி மிகவும் சுவையாக இருக்கும். இதை எளிதில் செய்து விடலாம். இதையும் என் அம்மா தான் கற்றுக்கொடுத்தது. என் கணவருக்கு மிகவும் பிடிக்கும். இந்த பொடியை சாத வகைகளுடனும் இட்லி, தோசை, பொங்கல் போன்றவையுடன் சேர்த்து சாப்பிடலாம். நீங்களும் செய்து பாருங்கள்.

தேவையான பொருள்கள்:-

மிளகு – 5ஸ்பூன்

சிரகம் – 2ஸ்பூன்

பொரிக்கடலை (அ) வறுத்த கடலை – 1கப்

காய்ந்த மிளகாய் – 6நம்பர்

பூண்டு – 10நம்பர்

கொத்தமல்லி தழை – 1கப்

உப்பு – தேவையான அளவு

நல்லெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :-

  • முதலில் மிளகையும் சிரகத்தையும் நன்றாக பொடித்து தயார் செய்து கொள்ளவும்.
  • பின்பு பூண்டை உரித்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி நன்கு வெயில் காயவைத்து உதிரிஉதிரியாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதே போல் கொத்தமல்லி தழையையும் நன்றாக காயவைத்து அரைத்துக் கொள்ளவும்.
  • மிக்ஸி சாரில் மிளகாய், அரைத்த பூண்டு, பொடித்த மிளகு சிரகம், பொரிக் கடலை, உப்பு, பொடித்த கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த பவுடரை தனியே தட்டில் கொட்டி ஆறியதும் கண்ணாடி பாட்டில்களில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். தேவையான பொழுது தேவையான அளவு பொடியை எடுத்து அதனுடன் நல்லெண்ணெய் விட்டு சாதவகைகளுடனும் பலகார வகைகளுடனும் தொட்டு சாப்பிடலாம்.
  • சுவையான பருப்பு பொடி தயார்.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers