தேவையான பொருள்கள்:
- வாழைக்காய் – 1
- மிளகாய்வற்றல் – 2
- துவரம்பருப்பு – 1/2 ஸ்பூன்
- பெருங்காயம் – சிறிதளவு
- உளுந்தம்பருப்பு – 1/2ஸ்பூன்
- கடுகு – 1/4 ஸ்பூன்
- உப்பு
செய்முறை:
- வாழைக்காயை அடுப்பில் சுட்டு, தோல் உரித்து, துருவிக் கொள்ளவும்.
- மிளகாய்வற்றல், துவரம்பருப்பு, பெருங்காயம், உளுந்தம் பருப்பு, கடுகு, இவற்றை வறுத்துப் பொடி செய்து கொள்ளவும்.
- பிறகு உப்பு கலந்து, உதிர்த்த காயுடன் கலந்துவிட சூப்பர் வாழைக்காய்ப் பொடி தயார்.
- இவற்றைச் சாதத்தில் கலந்து சாப்பிடலாம்.
நன்றி மங்கையர் மலர்! ![]()
