கத்​தி​ரிக்​காய் பாத் – 2


தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் – 1கப்
சாதம் – 2கப்
வெங்காயம் – 1/2கப்
தக்காளி – 1/2கப்
கடுகு – சிறிதளவு
மஞ்சள் பொடி – சிறிதளவு
சோம்பு பொடி – 1/2 ஸ்பூன்
மிளகாய் பொடி – 1ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

இரும்பு சட்​டி​யில் ரிபைண்ட் எண்​ணெய் 2 தேக்​க​ரண்டி ஊற்றி கடு​கைப் போட்டு தாளிக்​க​வும்.​
இத​னு​டன் பொடி​யாக நறுக்​கிய வெங்​கா​யம்,​​ தக்​காளி ஆகி​ய​வற்றை சேர்க்​க​வும்.​
பின்​னர்,​​ மெலி​தாக நீள​வாக்​கில் நறுக்​கிய கத்​தி​ரிக்​காயை போட்டு வதக்​க​வும்.​
கடை​ சி​யாக,​​ மஞ்​சள் பொடி,​​ சோம்பு பொடி,​​ மிள​காய் பொடி,​​ சிறி​த​ளவு உப்பு சேர்த்து சிவக்க வறுக்​க​வும்.​
இதை சாதத்​து​டன் சேர்த்து சாப்​பி​ட​லாம்.​
இந்த கலவையை தயிர் சாதத்​திற்​குத் தொட்​டுக் கொண்​டும் சாப்​பி​ட​லாம்.​

நன்றி தினமணி! smile.gif

ஜிஞ்சர் ரைஸ்

தேவையானவை:
சாதம் ஒரு கப்
வெங்காயம் – 1
இஞ்சி – 4 அங்குலத் துண்டு ஒன்று
தக்காளி சாஸ், சோயா சாஸ் – தலா 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

*சாதம் வடித்து கொள்ளவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், துருவிய இஞ்சி, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
*அதில் உப்பு, தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து கிளறவும்.
*வடித்த சாதத்தை போட்டு நன்கு கலக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

நன்றி தினமலர்! smile.gif

« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers