கோங்குரா பிரியாணி

தேவையான பொருட்கள்:

  • பாஸ்மதி அரிசி – ஒரு கப்
  • கெட்டி தயிர் – ஒரு கப்
  • தண்ணீர் – ஒரு கப்
  • காய்கறி துண்டுகள் – 2 கப்(உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணி, பீன்ஸ்)
  • இஞ்சி பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்
  • வெங்காயம் – 2
  • வதக்கிய கோங்குரா – ஒரு கப்
  • பூண்டு – 6 பல்
  • உப்பு தேவையான அளவு
  • புதினா இலை, கொத்துமல்லி தழை தலா ஒரு டேபிள் ஸ்பூன்.

அரைத்துக்கொள்ள:

  • முந்திரிப் பருப்பு 25 கிராம்
  • சிறிய வெங்காயம் – 7
  • இஞ்சி – சிறிது
  • பச்சைமிளகாய் – 8
  • பட்டை, லவங்கம் – 2
  • ஏலக்காய் – 2.

செய்முறை:

  • குக்கரை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • அதில் இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய காய்கறிகள், வதக்கிய கோங்குரா, அரைத்த மசாலா சேர்த்து மிதமான தணலில் கிளறவும்.
  • தயிரை குக்கரில் ஊற்றவும்.
  • கொதிக்க ஆரம்பித்தவுடன் பாஸ்மதி அரிசி உப்பு சேர்த்து, குக்கரை மூடிவிட்டு, வெயிட் போடவும்.
  • குறைந்த தணலில் பத்து நிமிடம் வேக வைத்து அடுப்பிலிருந்து கீழே இறக்கவும்.

:ty: தினமலர்

இறால் பிரியாணி

இது சுவையாகவும் மணமாகவும் இருக்கும். இந்த பிரியாணியை விரும்பாதோர் யாரும் இருக்க முடியாது. இதையும் என் அன்பு அம்மா தான் சொல்லிக் கொடுத்தார்கள்.

தேவையான பொருள்கள்:-

இறால் – 1/2கிலோ உரித்தது

பாசுமதி அரிசி – 2கப்

பட்டை, ஏலக்காய், கிராம்பு – 3நம்பர்

எலுமிச்சைச் சாறு – 2ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 1கப் நீளவாக்கில் நறுக்கியது

இஞ்சி பூண்டு விழுது – 2ஸ்பூன்

பச்சை மிளகாய் – 3நம்பர் இரண்டு பாகமாக கீறியது

தக்காளி – 1கப் பொடியாக நறுக்கியது

புதினா – 1/2கப் பொடியாக நறுக்கியது

கொத்தமல்லி தழை – 1/2கப் பொடியாக நறுக்கியது

தேங்காய் பால் – 1கப்

தண்ணீர் – 1/2 கப்

நல்லெண்ணெய் – தேவையான அளவு

நெய் – 3ஸ்பூன்

மிளகாய் தூள் – 1ஸ்பூன்

தனியா தூள் – 2ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

பாசுமதி அரிசியை நன்றாக கழுவி 1மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்தவுடன் பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் புதினா ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

பின்பு அதனுடன் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றையும் நன்றாக வதக்கவும்.

நன்றாக வதக்கியவுடன் இறால், மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும்வரை கிளறவும்.

இதனுடன் பாசுமதி அரிசி போட்டு நீர் வற்றும் வரை வதக்கவும். பின்பு உப்பு, தேங்காய் பால் , தண்ணீர் விட்டு குக்கர் மூடியை மூடி 1விசில் வந்தவுடன் அணைத்து விடவும்.

பின்பு மூடியை திறந்து மேலாக புதினா, கொத்தமல்லி மற்றும் எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி மூடி வைத்துக் கொள்ளவும். பின்பு பரிமாறலாம்.

சுவையான இறால் பிரியாணி தயார்.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers