குக்கரின் பயன்படுத்தும் முறை

நம் எல்லோர் வீட்டிலும் குக்கர் இல்லாமல் இருக்காது. பிரஷர் குக்கரை உபயோகித்தால் 30% வரை எரிபொருளை சேமிக்கலாம். அதை எப்படி பயன்படுத்துவது என்பதை நீங்களும் புரிந்துக் கொள்ளுங்கள். இதை பற்றி மற்ற நண்பர்களிடமும் கூறுங்கள்.

சமைக்கும் போழுது வெயிட் வால்வு வழியாக அதிக அளவு கஞ்சி வெளியேறுகிறேதே ஏன்?

* சமையலுக்கு தேவையான தண்ணீரின் அளவு அதிகமாகி விடுவது.

* உள்பாத்திரம் இல்லாமல் நேரடியாக சமையல் செய்வது.

* நெருப்பின் அளவை குறைக்காமல் இருப்பது.

சேஃப்டி வால்வை அடிக்கடி மாற்ற வேண்டியிருக்கிறேதே ஏன்?

* குக்கரின் உட்புறம் தேவையான அளவு தண்ணீர் ஊற்றாமல் விடுவது.

* உள்பாத்திரம் வைத்து சமையல் செய்யும் போது டிரிவெட்டை(கண் தட்டு) உபயோகிக்க மறப்பது.

அதிக எண்ணிக்கையில் விசில் வந்தபிறகும் உணவுப் பொருள் வேகாமல் இருப்பது ஏன்?

* நீராவி சீராக வெளியேறுவதற்கு முன்பே வெயிட் வால்வை பொருத்துவது.

* வெயிட் பொருத்திய பிறகு நெருப்பின் அளவை குறைக்காமல் இருப்பது.

* சரியான அளவுக்கும் அதிகமான உணவை சமைப்பது.

* மற்ற குக்கரின் வெயிட் வால்வை மாற்றி உபயோகிப்பது.

குக்கரின் உட்புறம் நிறம் மாறிப் போகிறேதே ஏன்?

* தரம் குறைந்த அலுமினிய உள்பாத்திரம், டிரிவெட்டை உபயோகிப்பது.

* உபயோகிக்கும் நீர் மற்றும் சமைக்கும் பொருளின் அமிலத்தன்மை.

* சமையல் செய்யும் போழுது குக்கரில் ஊற்றப்படும் நீரில் சிறிதளவு புளி அல்லது நறுக்கிய எலுமிச்சைத் துண்டு ஒன்றைப் போட்டு விட்டால் மீண்டும் பழைய பளபளப்பை அடையும்.

சமைக்கும் நேரம் மற்றும் தண்ணீரின் அளவு அரிசியைப் பொருத்து மாறுபடும்.

குக்கரின் பயன்படுத்தும் முறை உங்களுக்கு பயன்படும் என்று நினைக்கிறேன்.

தூங்கும் அறையை அழகுபடுத்துதல்

மூன்றாவதாக நம் தூங்கும் அறையைப் பார்க்கலாம்;

* முதலில் நாம் தூங்கும் அறையில் தெய்வப் படங்களை வைக்கக்கூடாது. ஏனென்றால் நாம் தூங்கும் போது கால்களை தெய்வத்திற்கு நேர் வைத்தால் பாவமாகும்.

* தூங்கும் அறையில் இயற்கைக்காட்சி, திருமண புகைப்படங்கள், குழந்தை படங்களை வைக்கலாம். அதை நாம் விடியற்காலையில் பார்க்கும் போது சந்தோஷமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.

* நாம் படுக்கும் அறை சுத்தமாக இருந்தால் தான் நன்கு தூக்கமும் வரும்.

* வாசனை பொருள்கள் கடைக்களில் கிடைக்கின்றன. தினமும் இரவு அதை தூங்கும் அறையில் தெளித்தால் மணமாக இருக்கும்.

* நாம் தூங்கும் அறையில் பச்சை கலர் பெயின்ட் அடிக்கலாம். இதனால் தூக்கம் நன்றாக வரும்.

* நாம் தூங்கும் அறை காற்றோட்டமாக இருக்கவேண்டும். தூங்கும் ஒரு ஜன்னல் கதவையாவது திறந்து வைக்க வேண்டும். ஏனென்றால் நாம் இரவு சுவாசிப்பதற்கு காற்று வேண்டும்மல்லவா!

* தினமும் தூங்கி எழுந்தவுடன் படுத்த தலையணைகளையும் போர்வைகளை மடித்து ஒழுங்குப்படுத்த வேண்டும். தினமும் தூங்கும் போது தலையணை மற்றும் போர்வைகளை உதறி பின்பு பயன்படுத்தவும்.

* வாரத்திற்கு ஒரு முறை தலையணை உறைகளையும் போர்வைகளையும் துவையுங்கள். ஏனென்றால் தலையணையில் தலையிலுள்ள எண்ணெய் பசை படிந்திருக்கும், போர்வையிலும் கால்களிலுள்ள அழுக்குகளும் படிந்திருக்கும்.

* கட்டிலில் படுப்பவர்கள் அதிலுள்ள பஞ்சு மெத்தையை மாதம் ஒரு முறை வெயிலில் காய வைத்து எடுத்துவிடுங்கள். ஏனென்றால் நாளாக பஞ்சு இறுகி கட்டியாகிவிடும்.

* நாம் தூங்கும் அறையில் செடிகளை வளர்க்கவும் வைக்கவும் கூடாது. ஏனென்றால் இரவு தாவரங்கள் ஆக்சைடை உட்கொண்டு கார் பன்டை ஆக்சைடை வெளியிடுகின்றன. கார்பன்டை ஆக்சைடை நம்மால் சுவாசிக்க முடியாது; ஆக்சிஜன் தான் நம்மால் சுவாசிக்க முடியும். இதனால் செடிகளை வைக்காமல் இருப்பது நல்லது.

« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers