மாவிலைத் துவையல்

Posted Image

தேவையான பொருட்கள்:

  • மாவிலை(தளிராக) – 10
  • மிளகாய் வற்றல் – 5
  • புளி – 1 உருண்டை
  • உப்பு – தேவையான அளவு
  • கடுகு, உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன்
  • எண்ணெய் – சிறிதளவு


செய்முறை:

  • மாந்தளிரை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய் வற்றலை வறுத்து மாவிலை போட்டு வதக்கி எடுத்து புளி, உப்பு சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.
  • கடுகு, உளுத்தம் பருப்பை எண்ணெய் ஊற்றி வறுத்து எடுத்து இதனுடன் கடைசியில் சேர்த்து அரைத்து எடுத்தால் மாவிலைத் துவையல் நன்றாக இருக்கும்.

- ஆர்.மீனாட்சி

:ty: தினமணி

முட்டைக்கோஸ் துவையல்

இந்த துவையல் வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும். முட்டைக்கோஸ் விரும்பாதாவர்கள் இதை செய்து வைத்தால் ருசித்து சாப்பிடுவார்கள். அவ்வளவு சுவையாக இருக்கும். இதுவும் என் அன்பு அம்மா தான் கற்றுக் கொடுத்தார்கள். அதை உங்களுக்கும் சொல்லுகிறேன். நீங்களும் செய்து பாருங்கள். இதனுடன் தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம், காலை உணவு வகைகளுடனும் சேர்த்து சாப்பிடலாம்.

தேவையான பொருள்கள்:-

முட்டைக்கோஸ் – 2கப் பொடியாக நறுக்கியது

தேங்காய் துருவல் – 3ஸ்பூன்

கொத்தமல்லி தழை – 5ஸ்பூன்

கறிவேப்பிலை – 1கொத்து

பொட்டுக்கடலை(அ) வறுத்த கடலை – 1/2கப்

கடுகு – 1ஸ்பூன்

உளுந்தப்பருப்பு – 2ஸ்பூன்

மிளகாய் வற்றல் – 10நம்பர்

புளி – 1சிறு உருண்டை

பெருங்காயம் – சிறிதளவு

நல்லெண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

  • வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகை போடவும். நன்கு வெடித்தவுடன் மிளகாய் வற்றல், உளுந்தப்பருப்பு, பொட்டுக்கடலையை போட்டு நன்கு வதக்கவும்.
  • பின்பு மறுபடியும் தனியே வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முட்டைகோஸ் சேர்த்து வதக்கவும்.
  • அதனுடன் மேலே தாளித்த பொருள்கள், உப்பு, புளி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் கரகரப்ப்பாக அரைத்துக்கொள்ளவும்.
  • சுவையான முட்டைக்கோஸ் துவையல் தயார்.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers