நூடுல்ஸ் சூப்

தேவையானவை:

  • பொடியாக நறுக்கிய கேரட், முட்டைகோஸ், பீன்ஸ், காலிபிளவர் எல்லாம் சேர்த்து – 2 கப்
  • வேக வைத்த சைனீஸ் நூடுல்ஸ் – 1/2 கப்
  • இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
  • நறுக்கிய வெங்காயம் – 1
  • சோயா சாஸ் – 2 டீஸ்பூன்
  • மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
  • கொத்தமல்லி, வெங்காயத்தாள் – சிறிதளவு
  • சர்க்கரை – 1/2 டீஸ்பூன்
  • கார்ன்ப்ளார் – 2 டீஸ்பூன்
  • உப்பு தேவைக்கு ஏற்ப.


செய்முறை:

  • பாத்திரத்தில் 4 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் காய்கறிகள், இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், சர்க்கரை, உப்பு ஆகியவற்றை போட்டு, அரைப்பதம் வரை கொதிக்க விடவும்.
  • அரை கப் தண்ணீரில் கார்ன்ப்ளாரை கரைத்து அதில் சேர்த்து ஒரு நிமிடம் கொதித்ததும் இறக்கிவிடவும்.
  • பிறகு சோயா சாஸ், நூடுல்ஸ், மிளகுத்தூள், கொத்தமல்லி, வெங்காயத்தாள் சேர்த்து பரிமாறவும்.
  • இது பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும். சூப் என்றாலே ஆரோக்கியம்தான்.

:ty: தினமலர்

காலிப்ளவர்’ சூப்

தேவையானவை:

காலிப்ளவர் – 1 (சிறியது)
வெங்காயம் – 1
தக்காளி – 3
துவரம் பருப்பு வேக வைத்த தண்ணீர் – 3 கப்
காய்ச்சி ஆற வைத்த பால் – அரை கப்
பூண்டு (நறுக்கியது) – 8 பல்
சோம்பு – கால் டீஸ்பூன்
மிளகு – ஒரு டீஸ்பூன்
பட்டை – ஒரு துண்டு
லவங்கம் – 2
எண்ணெய் – 3 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

காலிப்ளவரை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக்கவும்.
பாதியளவு காலிப்ளவரை உப்பு போட்டு முக்கால் பதம் வேக வைத்து தனியே வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை நறுக்கவும், கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு, மிளகு, பட்டை, லவங்கம் தாளிக்கவும்.
அதில் வெங்காயம், தக்காளி, மீதமிருக்கும் காலிப்ளவர், பூண்டு போட்டு நன்கு வதக்கி, பருப்பு தண்ணீர், உப்பு சேர்க்கவும்.
மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்கவிட்டு வடிகட்டவும்.
வடிகட்டிய நீரில், வேகவைத்த காலிப்ளவர் துண்டுகள், பால், மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும்.

நன்றி தினமலர்!

« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers