புரோட்டீன் சுண்டல்

தேவையானவை:
பாசிப்பயிறு, கொண்டைக்கடலை, கொள்ளு, வேர்க்கடலை (இவை நான்கும் முளைகட்டியது) தலா ஒரு கப், கேரட், தேங்காய் துருவல் – தலா ஒரு கப், நறுக்கிய வெள்ளரி – ஒரு கப், தனியா, கடலைப்பருப்பு, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று, நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

முளைகட்டிய நான்கு பயிற்களையும் உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு துருவிய தேங்காய், கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், தனியாவை போட்டு வறுத்து, ஆறியதும் மிக்சியில் பொடிக்கவும். வேக வைத்தவற்றை தண்ணீர் வடித்து, மிக்சியில் பொடித்ததை போட்டு, கேரட் துருவல், வெள்ளரித் துண்டுகள், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலக்கி கொடுக்கவும். இது புரோட்டின் சத்து நிறைத்தது. கேரட், வெள்ளரி சேர்த்து சாப்பிடுவதால் உடல் சூடு தணியும்.

நன்றி: தினமலர்! smile.gif

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers