முட்டைகோஸ் இறைச்சி உருளை

தேவையானவை:

  • முட்டைகோஸ் மேல் தோல் – மூன்று இலை
  • ஆட்டிறைச்சி கைமா – 250 கிராம்
  • பெரிய வெங்காயம் – ஒன்று
  • வேகவைத்த சாதம் – 50 கிராம்
  • புதினா – சிறிதளவு
  • வெள்ளை மிளகு – சிறிதளவு
  • உப்பு, எண்ணெய் தேவையான அளவு

செய்முறை:

  • வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை வதக்கவேண்டும்.
  • அதனுடன் இறைச்சி, உப்பு, புதினா, வெள்ளை மிளகு, சாதத்துடன் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
  • முட்டைகோஸ் இலையை வெந்நீரில் ஒரு நிமிடம் மூழ்கவைத்து எடுத்தால், உருட்டுவதற்கு ஏற்ப மிருதுவாக இருக்கும்.
  • இலையின் மீது கலவையை கொஞ்சமாக வைத்து, நன்றாக சுருட்ட வேண்டும்.
  • இட்லி அவிப்பது போல அவித்து எடுக்க வேண்டும்.
  • சாதமும், இறைச்சியும் கலந்திருப்பதால் வேறு எதையும் சேர்க்க வேண்டியதில்லை.
  • வெந்தபின் தக்காளி சாஸ் மேலே ஊற்றி பரிமாறலாம்.

சமையல் நேரம் : 20 நிமிடங்கள்.

- மதுரை பார்ச்சூன் பாண்டியன் ஓட்டல் தலைமை சமையல் நிபுணர் கேசவகுமார்.

:ty: தினமலர்

ஓட்ஸ் பிசிபேளாபாத்

தேவையானவை:

  • ஓட்ஸ் – ஒரு கப்
  • நீளவாக்கில் நறுக்கிய கத்தரிக்காய், முருங்கைக்காய், கேரட், பீன்ஸ், பச்சைப்பட்டாணி சேர்ந்த கலவை – ஒரு கப்
  • துவரம்பருப்பு – அரை கப்
  • புளி கரைசல் – கால் கப்
  • மோர் மிளகாய் – 2
  • நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
  • கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, உப்பு – சிறிதளவு.


பொடிக்க:

  • காய்ந்த மிளகாய் – 5
  • மிளகு – 5
  • தேங்காய் துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன்
  • கசகசா – அரை டேபிள் ஸ்பூன்
  • வெந்தயம் – அரை டீஸ்பூன்
  • பெருங்காயம் – ஒரு துண்டு
  • சோம்பு – அரை டீஸ்பூன்
  • கிராம்பு – 2
  • பட்டை – ஒரு பெரிய துண்டு
  • ஏலக்காய் – 2
  • கறிவேப்பிலை – சிறிது
  • மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை.

செய்முறை:

  • துவரம் பருப்பை குழைய வேகவிடவும்.
  • ஓட்சை வெந்நீரில் ஊற வைக்கவும்.
  • காய்களில் உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
  • பொடிக்க வைத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் தனித்தனியே வறுத்து பொடித்து கொள்ளவும்.
  • துவரம் பருப்பு, ஓட்ஸ், வெந்த காய்கறிகள், புளித்தண்ணீர், வறுத்து அரைத்த பொடி, உப்பு கலந்து அடுப்பில் சிறிது நேரம் வைத்து கிளறவும்.
  • எல்லாம் சேர்ந்து வந்ததும், கடாயில் நெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, மோர் மிளகாய் தாளித்து கொட்டி கிளறவும்.
  • கமகமக்கும் ஓட்ஸ் பிசிபேளாபாத் ரெடி!

« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers