உளுந்து சாப்பாத்தி

தேவையானவை:

  • கோதுமை மாவு – ஒரு கப்
  • சோயா மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்
  • கடுகு – அரை டீஸ்பூன்
  • எண்ணெய் – 2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு.


பூரணத்திற்கு தேவையானவை:

  • உளுந்து – கால் கப்
  • காய்ந்த மிளகாய் – 2
  • சோம்பு – கால் டீஸ்பூன்
  • தேவையான அளவு உப்பு.


செய்முறை:

  • கோதுமை மாவு மற்றும் சோயா மாவு ஆகியவற்றை, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
  • ஒரு மிளகாயுடன் உளுந்தை சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  • நன்றாக ஊறியதும் சோம்பு, உப்பு, ஒரு மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
  • இந்த விழுதை ஒரு கிண்ணத்தில் வைத்து, ஆவியில் வேக வைத்து கொள்ளவும்.
  • ஒரு குச்சியை விட்டு பார்க்கும்போது மாவு ஒட்டாமல் வர வேண்டும்.
  • பிறகு இந்த உளுந்து பூரணத்தை ஆற வைத்து உதிர்த்து கொள்ளவும். கடாய் காய்ந்ததும் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, உளுந்து பூரணத்தை சேர்த்து கிளறி இறக்கவும்.
  • பிசைந்து வைத்திருக்கும் மாவிலிருந்து சிறிது எடுத்து உருண்டையாக்கி கிண்ணம் போல செய்ய வேண்டும்.
  • உளுந்து பூரணத்தை அதில் நிரப்பி, உருட்டி மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து கொள்ளவும்.
  • தோசைக்கல்லில் சுட்டெடுக்கவும்.

நன்றி: தினமலர்

மு‌ட்டை பரோ‌ட்டா

தேவையானவை

  • மைதா – 2 க‌ப்
  • மு‌ட்டை – 1
  • பே‌க்‌கி‌ங் பவுட‌ர் – அரை தே‌க்கர‌ண்டி
  • ச‌ர்‌க்கரை – 1 தே‌க்கர‌ண்டி
  • உ‌ப்பு – தேவையான அளவு
  • எ‌ண்ணெ‌ய் – 2 தே‌க்கர‌ண்டி


செ‌ய்யு‌ம் முறை

  • ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் மைதா மாவுட‌ன் உ‌ப்பு, பே‌க்‌கி‌ங் பவுட‌ர், ச‌ர்‌க்கரை‌ப் போ‌ட்டு ந‌ன்கு கல‌க்கவு‌ம்.
  • ‌பிறகு மா‌வி‌ற்கு நடு‌வி‌ல் ஒரு கு‌ழியை ஏ‌ற்படு‌த்‌தி, அ‌தி‌ல் மு‌ட்டையை உடை‌த்து ஊ‌ற்றவு‌ம். ‌
  • மாவை‌க் கைகளா‌ல் ந‌ன்கு ‌பிசை‌ந்து ‌கிளறவு‌ம். தேவையான அளவு த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி ‌மாவை ‌மிருதுவாக ‌பிசை‌ந்து வை‌க்கவு‌ம்.
  • ‌பிசை‌ந்த மா‌வி‌ன் ‌மீது எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி 2 ம‌ணி நேர‌ம் ஊற ‌விடவு‌ம்.
  • ஊ‌றிய மா‌வினை ‌சி‌றிய உரு‌ண்டைகளாக உரு‌ட்டி‌க் கொ‌ள்ளவு‌ம். உரு‌ண்டைகளை ம‌ெ‌ல்‌லிய ச‌ப்பா‌த்‌திகளாக இ‌ட்டு அத‌‌ன் ‌மீது நெ‌ய்யை தடவை ச‌ப்பா‌த்‌தியை உரு‌ட்டி ‌மீ‌ண்டு‌ம் உருளையா‌க்‌கி அதனை பரோ‌ட்டாவாக ‌திர‌ட்டவு‌ம்.
  • தோசை‌க் க‌ல்‌லி‌‌ல் பரோ‌ட்டாவை‌ப் போ‌ட்டு இர‌ண்டு ப‌க்கமு‌ம் ‌சிவ‌க்குமாறு எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி எடு‌க்கவு‌ம்.
  • இ‌த‌ன் சுவை புதுமையாக இரு‌க்கு‌ம். செ‌ய்து சுவை‌த்து‌ப் பாரு‌ங்க‌ள்.



நன்றி வெப்துனியா! smile.gif

« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers