தேவையான பொருள்கள்:-
பீர்க்கங்காய் – 1/4கிலோ( தோலை மேலோட்டமாக சீவி சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்)
காயந்த மிளகாய் – 3 நம்பர்
உளுந்தம் பருப்பு – 1/2 கை அளவு
சின்ன வெங்காயம் – 1கப்
தக்காளி – 3நம்பர்
கொத்தமல்லி தழை – 1/4கப்
கருவேப்பிலை – 1/4கப்
நல்லெண்ணெய் – தாளிப்பதற்கு ஏற்ப
உப்பு – தேவையான அளவு
செய்முறை:-
வாணலியில் 1தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, ஆகியவற்றை சேர்த்து சிவக்க வறுத்தெடுத்து தனியே வைத்துக் கொள்ளவும்.
மறுபடியும் வாணலியில் எண்ணெய் ஊற்றி பீர்க்கங்காய் துண்டுகளை சேர்த்து சிறு நேரம் வதக்கவும்.
பின்பு அதனுடன் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து சுருங்கி வரும் வரை வதக்கவும்.
வதக்கியவுடன் அடுப்பை அணைத்து விட்டு ஆற விடவும்.
மிக்ஸியில் சிவக்க வறுத்தெடுத்த உளுந்தம் பருப்பு கலவையும், ஆற வைத்த பீர்க்கங்காய் கலவையும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
இக்கலவை ஆட்டுகல்லிலும் அரைக்கலாம். மிக்ஸியை விட இது மிகவும் சுவையாக இருக்கும்.
சுவையான பீர்க்கங்காய் சட்னி தயார்.
இச்சட்னி மிகவும் சுவையாக இருக்கும். பீர்க்கங்காய் பிடிக்காதவர்கள் கூட இதை செய்து வைத்தால் சாப்பிடுவார்கள். பீர்க்கங்காய்க்கு பதிலாக காரட், பீட்ரூட், புடலங்காய், வெண்டைக்காய், கத்திரிக்காய் ஆகியவற்றையும் சேர்க்கலாம். இதை என் அன்பு அம்மா எனக்கு சொல்லிக்கொடுத்தது. அதை நான் உங்களுக்கும் சொல்லித் தருகிறேன். செய்து பாருங்கள்.