சாம்பார் என்றால் துவரம் பருப்பில் தான் வைப்பார்கள். துவரம்பருப்பை உணவில் அதிகம் சேர்க்கக்கூடாது. பாசிப்பருப்பை சேர்த்து சாம்பார் வைக்கலாம். இதனால் உடலிற்கு குளிர்ச்சியை தரும். நன்கு ஜீரணமும் ஆகும். இதனை செய்வது எளிது தான். நீங்களும் செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
- பாசிப்பருப்பு – 2கப்
- சின்னவெங்காய் – 1/2கப்
- நாட்டுத்தக்காளி – 2
- பச்சைமிளகாய் – 2 (இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்)
- சோம்பு – சிறிதளவு
- சீரகம் – சிறிதளவு
- கடுகு, உளூந்தம் பருப்பு – சிறிதளவு
- காய்ந்த மிளகாய் – சிறிதளவு
- பெருங்காயத் தூள் – சிறிதளவு
- புளித்தண்ணீர் – 1/4கப்
- தண்ணீர் – தேவையான அளவு
- கொத்தமல்லி இலை – சிறிதளவு
- கறிவேப்பிலை – சிறிதளவு
- சாம்பார் பொடி – 1ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
- குக்கரில் பாசிப்பருப்பை போட்டு 1 கொதிவந்தவுடன் சின்னவெங்காயம், தக்காளி( கையில் பிசைந்து போடவும்), பச்சைமிளகாய், கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்து 3விசில் வந்தவுடன் இறக்கிக் கொள்ளவும்.
- பின்பு குக்கரில் இருந்து இறக்கி அதனுடன் புளித்தண்ணீர், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து நன்கு கொத்திக்கவிடவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகை போடவும்.
- கடுகு வெடித்தவுடன் சோம்பு, சீரகம், உளுந்தம்பருப்பு, காய்ந்தமிளகாய் ஆகியவற்றை சேர்த்து பொன்நிறமாக வந்தவுடன் பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொதித்த சாம்பாரில் கொட்டவும்.
- கொட்டியவுடன் மூடி வைத்துக் கொள்ளவும். சிறிது நேரம் கழித்து மூடியை திறந்து மேலாக கொத்தமல்லி தழையை தூவி பரிமாறவும்.
- சுவையான பாசிப்பருப்பு சாம்பார் தயார்.
குறிப்பு:
இதில் காய்கறிகளும் சேர்க்கலாம். உதாரணமாக காரட், முருங்கைக்காய், பூசணிக்காய், வதக்கிய முள்ளங்கி, வதக்கிய வெண்டைக்காய், அவரைக்காய் ஆகியவற்றையும் சேர்க்கலாம். இதனை பருப்பு வேகவைக்கும் போதே சேர்த்து போட்டு வேகவைத்து பின்பு புளித்தண்ணீர் விட்டு சாம்பார் பொடி, தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவைத்து தாளித்து கொட்டவும்.