ஓலை பக்கோடா

எனக்கு பிடித்த காரவகைகளுள் இதுவும் ஒன்று. எளிதிலும் செய்துவிடலாம். நீங்களும் செய்துப் பாருங்கள்…

தேவையான பொருட்கள்:

  • கடலை மாவு – 3 கப்
  • அரிசி மாவு – 1கப்
  • வெள்ளை எள் – 1/4 கப்
  • பூண்டு – 10 பல் (அரைத்துக் கொள்ளவும்)
  • வறுத்த நிலக்கடலை – 1 கை ( பொடித்து கொள்ளவும்)
  • பெருங்காயத் தூள் – சிறிதளவு
  • சோடா உப்பு – சிறிதளவு
  • மிளகாய் தூள் – 3ஸ்பூன்
  • தண்ணீர் – தேவையான அளவு
  • வெண்ணெய் – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் இரண்டு மாவு வகைகளையும் சல்லடையில் சலித்துக் கொள்ளவும்…ஏனென்றால் அதில் ஏதும் இருந்தால் எண்ணெய்யில் பொரிக்கும் போது வெடிக்கும் வாய்ப்புள்ளது.
  • மாவுடன் எள், பூண்டு, நிலக்கடலை, பெருங்காயத் தூள், சோடா உப்பு, மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை தண்ணீர் இல்லாமல் நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின்பு வெண்ணெய், சிறிது எண்ணெய் சூடாக்கி மாவுக் கலவையுடன் கொட்டி தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  • வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்..
  • நன்கு காய்ந்தவுடன் அச்சில் மாவை வைத்து எண்ணெய்யில் பிளியவும்…
  • நன்கு சிவந்தவுடன் எடுக்கவும்.
  • சுவையான ஓலை பக்கோடா தயார்!


ஆக்கம்:
ரதிமகேஸ்வரன். :)

மோர் அப்பம்

தேவையானவை:

  • பச்சரிசி – 3 டம்ளர்
  • உளுந்து – 1 டம்ளர்
  • பச்சை மிளகாய் – 9
  • இஞ்சி நறுக்கியது – 1 டேபிள் ஸ்பூன் அளவு
  • தேங்காய் – அரைமூடி துண்டுதுண்டாய் நறுக்கியது
  • பச்சை கொத்தமல்லி – 50 கிராம்
  • கறிவேப்பிலை பொடி – 50 கிராம்
  • உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
  • பெருங்காயத்தூள் – 1 டேபிள் ஸ்பூன் அளவு
  • தயிர் – 1/2 லிட்டர் (கெட்டியானது)


செய்முறை:

  • பச்சரிசி, உளுந்து இரண்டையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து தயிர் சேர்த்து இட்லி மாவு பக்குவத்தில் அரைக்கவும்.
  • கடுகு, வரமிளகாய் தாளித்து அந்த மாவில் கலக்கவும்.
  • பிறகு இஞ்சி, துண்டு துண்டாக நறுக்கிய மிளகாய், கறிவேப்பிலை பொடி, தேங்காய், கொத்தமல்லி, பெருங்காயம் ஆகியவற்றை மாவில் கலந்து கொள்ளவும்.
  • பணியார சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கரண்டியில் மாவு எடுத்து ஊற்ற வேண்டும்.
  • ஒரு பக்கம் வெந்த பிறகு திருப்பி போட்டு பொன்னிரமாக வரும்வரை சுட்டு எடுக்கவும்.
  • சூடான சுமையான மோர் அப்பம் அல்லது வெள்ளையப்பம் தயார்.



நன்றி தினமலர்! smile.gif

« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers