தக்காளி ஊறுகாய்

இந்த ஊறுகாய் மிகவும் சுவையாக இருக்கும். மிக எளிதில் செய்து விடலாம். இதனை இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுக்கு தொட்டுக் கொள்ளலாம். இதை சாதத்தில் பிசைந்தால் தக்காளி சாதம் உடனே ரெடி. நீங்களும் செய்து பாருங்கள்.

தேவையான பொருள்:-

நாட்டு தக்காளி – 1/2கிலோ

பெருங்காயத் தூள் – 2ஸ்பூன்

பூண்டு, வெங்காயம், இஞ்சி – 1கப்

வெந்தயப் பொடி – 1ஸ்பூன்

கடுகு – 1ஸ்பூன்

கருவேப்பிலை – 1கொத்து

கொத்தமல்லி தழை – 1கப்

புளித்தண்ணீர் – 3ஸ்பூன்

சர்க்கரை – 1ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

நல்லெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:-

முதலில் தக்காளி கொதிக்கும் நீரில் 5நிமிடம் வைத்து தனியே எடுத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள். அதை மிக்ஸியில் மைப்போல் அரைத்துக் கொள்ளுங்கள்.

வெங்காயம், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி தழை ஆகிய பொருள்களை நன்றாக வெயிலில் காயவைத்து பொடித்துக் கொள்ளுங்கள்.

பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் கறிவேப்பிலை சேர்க்கவும்.

அதனுடன் பொடித்த பொருளையும் வெந்தயத்தூளையும் பெருங்காயத் தூளையும் சேர்த்து வதக்கவும். பின்பு அதனுடன் அரைத்த விழுதையும் புளித்தண்ணீரையும் உப்பும் சேர்த்து நன்கு சுண்டும் அளவிற்கு வதக்கிக் கொள்ளவும்.

நன்கு வதக்கியவுடன் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலங்கி அடுப்பை அணைத்தி கீழே இறக்கி விடவும்.

இதனை நன்றாக ஆறவைத்து பாட்டில் அடைக்கவும். இது 1மாதத்திற்கு மேலும் கெட்டுபோகாமல் இருக்கும்.

சுவையான தக்காளி ஊறுகாய் தயார்!

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers