திண்டுக்கல் ஜிலேபி

Posted Image

தேவையானவை:

  • உளுந்து – 200 கிராம்
  • பச்சரிசி – 50 கிராம்
  • வனஸ்பதி – 250 கிராம்
  • ரீபைண்ட் ஆயில் – கால் லிட்டர்
  • நெய் – 150 கிராம்
  • சர்க்கரை – அரைகிலோ
  • தண்ணீர் – ஒரு லிட்டர்
  • எலுமிச்சம் பழத்தில் பாதி மட்டும்.

செய்முறை:

  • முதலில் சர்க்கரையை தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவிட்டு ஜீராவாக காய்ச்சி வைத்து கொள்ள வேண்டும்.
  • அடுத்து கால் மணி நேரம் ஊற வைத்த உளுத்தம் பருப்பையும், பச்சரிசியையும் கிரைண்டரில் போட்டு நன்கு நைஸ் பதத்துக்கு மாவை ஆட்டி எடுத்து வைக்க வேண்டும்.
  • இப்போ ஜீராவும், ஜிலேபி மாவும் ரெடி.
  • சூடான எண்ணெய் சட்டியில் ரீபைண்ட் ஆயிலுடன் நெய்யை சேர்த்துவிட்டு, அதில் பாதி எலுமிச்சம் பழத்தையும் பிழிந்துவிட வேண்டும்.
  • எண்ணெய் சட்டி நன்கு காய்ந்தவுடன் ரெடியாக இருக்கும் ஜிலேபி மாவை பிழிய வேண்டும்.
  • சிறிய ஓட்டையுடன் இருக்கும் துணியில் கையளவு மாவை எடுத்து கொண்டு, கொலுசு மாதிரி சிறிய சிறிய வளையங்களாக ஒரே சீராக பிழிய வேண்டும்.
  • சுவையான ஜிலேபி தயார்!

:ty: தினமலர்

சம்பா கோதுமை அல்வா

Posted Image

தேவையானவை:

  • சம்பா கோதுமை – ஒரு கப்
  • சர்க்கரை – ஒன்றரை கப்
  • நெய் – ஒரு கப்
  • முந்திரி – 10
  • ஏலக்காய் – 5
  • புட் கலர் ஆரஞ்சு – ஒரு சிட்டிகை.


செய்முறை:

  • கோதுமையை முதல் நாள் இரவே ஊற வைத்துவிட்டு, மறுநாள் கிரைண்டரில் போட்டு, தேவையான தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தின் மேல் மெல்லிய துணியை கட்டி வைத்துவிட்டு, அரைத்த கலவையை ஊற்றி, பாலை வடிகட்டவும்.
  • மேலே தங்கும் சக்கையை பிழிந்து எடுத்து, அதை மீண்டும் கிரைண்டரில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
  • இப்படியே நான்கு முறை கோதுமை ஜவ்வு போல வரும்வரை அரைத்து அரைத்து துணியில் ஊற்றி, வடிகட்டி பால் எடுக்கவும்.
  • இந்த பாலை அப்படியே மூடி வைத்தால், 6 அல்லது 7 மணி நேரம் கழித்து நன்கு தெளிந்து மேலே தண்ணீர் நிற்கும்.
  • அந்த தண்ணீரை வடித்துவிட்டு, கீழே தங்கியிருக்கும் மாவு பகுதியை எடுத்து அதில் ஆரஞ்சு கலரை கலந்து வைக்கவும்.
  • அடி கனமான பாத்திரம் ஒன்றில் சர்க்கரையை போட்டு கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி, கம்பி பதம் வந்ததும் கோதுமை பாலை, சர்க்கரை பாகில் சேர்த்து கைவிடாமல் கிளற வேண்டும்.
  • நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கொண்டே கிளறவும்.
  • அல்வா பதம் வந்ததும் முந்திரியை முழுதாக நெய்யில் வறுத்துபோட்டு, ஏலக்காயை பொடித்து போட்டு கிளறவும்.
  • சுற்றிலும் நெய் கக்கி, அப்படியே கசிந்து, அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்.
  • அந்த சமயத்தில் இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டவும்.

:ty: தினமலர்

« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers