இது மிகவும் உடலுக்கு நல்லது. குண்டாவர்கள் இதனை செய்து சாப்பிட்டால் உடம்பு குறையும். இதனுடன் சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் என அனைத்து வகை சாதங்களுடன் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். சப்பாத்தி, இட்லி, தோசை ஆகியவற்றுடனும் சேர்த்து சாப்பிடலாம். இதனை நீங்களும் செய்து பாருங்கள்.
தேவையான பொருள்கள்:
- சுரைக்காய் – 1/4கிலோ
- பாசிப்பருப்பு – 1கையளவு
- சின்ன வெங்காயம் – 1/4 பொடியாக நறுக்கியது
- பச்சைமிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
- காய்ந்தமிளகாய் – 2
- கறிவேப்பிலை – சிறிதளவு
- சீரகம் – சிறிதளவு
- மஞ்சள் தூள் – சிறிதளவு
- கடுகு, உளுந்தம் பருப்பு – சிறிதளவு
- தண்ணீர் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
- சுரைக்காயில் உள்ள விதையை எடுத்துவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- சுரைக்காயையும் பாசிப்பருப்பையும் நன்கு கழுவி குக்கரில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து 1 விசில் வந்தவுடன் தனியே எடுத்து வைக்கவும்.
- பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்தது கடுகை போட்டு வெடித்ததும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்நிறம் வரும் வரை வறுக்கவும்.
- பொன்நிறம் வந்தவுடன் காய்ந்தமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு பொன்நிறம் வரும் வரை வதக்கவும்.
- நன்கு வதக்கியவுடன் அதனுடன் வேகவைத்த கலவை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 1கொதி வந்தவுடன் இறக்கவும்.
- சுவையான சுரைக்காய் கூட்டு தயார்.