தூங்கும் அறையை அழகுபடுத்துதல்

மூன்றாவதாக நம் தூங்கும் அறையைப் பார்க்கலாம்;

* முதலில் நாம் தூங்கும் அறையில் தெய்வப் படங்களை வைக்கக்கூடாது. ஏனென்றால் நாம் தூங்கும் போது கால்களை தெய்வத்திற்கு நேர் வைத்தால் பாவமாகும்.

* தூங்கும் அறையில் இயற்கைக்காட்சி, திருமண புகைப்படங்கள், குழந்தை படங்களை வைக்கலாம். அதை நாம் விடியற்காலையில் பார்க்கும் போது சந்தோஷமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.

* நாம் படுக்கும் அறை சுத்தமாக இருந்தால் தான் நன்கு தூக்கமும் வரும்.

* வாசனை பொருள்கள் கடைக்களில் கிடைக்கின்றன. தினமும் இரவு அதை தூங்கும் அறையில் தெளித்தால் மணமாக இருக்கும்.

* நாம் தூங்கும் அறையில் பச்சை கலர் பெயின்ட் அடிக்கலாம். இதனால் தூக்கம் நன்றாக வரும்.

* நாம் தூங்கும் அறை காற்றோட்டமாக இருக்கவேண்டும். தூங்கும் ஒரு ஜன்னல் கதவையாவது திறந்து வைக்க வேண்டும். ஏனென்றால் நாம் இரவு சுவாசிப்பதற்கு காற்று வேண்டும்மல்லவா!

* தினமும் தூங்கி எழுந்தவுடன் படுத்த தலையணைகளையும் போர்வைகளை மடித்து ஒழுங்குப்படுத்த வேண்டும். தினமும் தூங்கும் போது தலையணை மற்றும் போர்வைகளை உதறி பின்பு பயன்படுத்தவும்.

* வாரத்திற்கு ஒரு முறை தலையணை உறைகளையும் போர்வைகளையும் துவையுங்கள். ஏனென்றால் தலையணையில் தலையிலுள்ள எண்ணெய் பசை படிந்திருக்கும், போர்வையிலும் கால்களிலுள்ள அழுக்குகளும் படிந்திருக்கும்.

* கட்டிலில் படுப்பவர்கள் அதிலுள்ள பஞ்சு மெத்தையை மாதம் ஒரு முறை வெயிலில் காய வைத்து எடுத்துவிடுங்கள். ஏனென்றால் நாளாக பஞ்சு இறுகி கட்டியாகிவிடும்.

* நாம் தூங்கும் அறையில் செடிகளை வளர்க்கவும் வைக்கவும் கூடாது. ஏனென்றால் இரவு தாவரங்கள் ஆக்சைடை உட்கொண்டு கார் பன்டை ஆக்சைடை வெளியிடுகின்றன. கார்பன்டை ஆக்சைடை நம்மால் சுவாசிக்க முடியாது; ஆக்சிஜன் தான் நம்மால் சுவாசிக்க முடியும். இதனால் செடிகளை வைக்காமல் இருப்பது நல்லது.

சமையலறையை அழகுபடுத்துதல்

இரண்டாவதாகச் சமையலறையைப் பார்க்கலாம்;

*சமையலறை காற்றோட்டமாக இருக்கவேண்டும். காலையில் அடுப்பை பற்ற வைக்கும் முன்பு ஜன்னலை திறந்த பின்பே பற்ற வைக்கவேண்டும்.

* இரண்டு நாளைக்கு ஒரு தடவை புது தண்ணீர் பிடித்து வைத்துக்கொள்ளுங்கள். பழைய தண்ணீரை கீழே ஊற்றாமல் செடிகளுக்கு ஊற்றுங்கள். எப்பொழுதும் தண்ணீரை சுட வைத்துக் குடியுங்கள். இதனால் பல நோய் வராமல் தடுக்கலாம்.

* தினமும் காலையிலும் இரவிலும் சமையலறையை துடையுங்கள். ஏனென்றால் இரவு நேரங்களில் பூச்சிகளின் ஆட்சி நடக்கும். தினமும் துடைப்பதால் பூச்சிகள் வராது.

* கேஸ் ஸ்டவ்வின் இருபக்கமும் உள்ள தட்டுகளை தினமும் விளக்குகள். கேஸ் ஸ்டவ்வின் அருகில் எண்ணெய் கேன்களை வைக்கக்கூடாது. கேஸ் சிலிண்டர்க்கு அருகில் மற்றொரு கேஸ் சிலிண்டரை வைக்கக்கூடாது.

* மிக்ஸியையும் கிரைண்டர்யையும் பயன்படுத்தி முடித்தவுடன் துடைத்து விடுங்கள். ஏனென்றால் நாம் அறைக்கும் போது தண்ணீர் அடியில் உள்ள குழியில் விழுந்திருக்கும். இதனால் மின் சாதனங்கள் பழுதாகிவிடக் கூடும். மிக்ஸியின் ஜார்களை பயன்படுத்தி முடித்துவுடனே கழுவி காய வைத்துவிடுங்கள். இதனால் ஜார்களின் அடியில் பூசனம் புடிக்காது.

*வாரத்திற்கு ஒரு முறை மளிகை சாமான்கள் வைத்திருக்கும் அலமாரியை ஈரத் துணிக் கொண்டு துடையுங்கள். அரிசிகள்,பருப்பு மற்றும் மாவு வைத்திருக்கும் டின்களை ஈரக் கையோடு தொடாதீர்கள். ஈரக்கையோடு தொட்டால் சீக்கிரம் அதில் வண்டு வந்து விடும். பொருள்களும் பாழாகிவிடும். ஒவ்வொரு டின்களுக்கும் ஒவ்வொரு கரண்டியை அதில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும் போது எளிதில் எடுக்க உதவும்.

* மசாலாப் பவுடர்களிலும் பருப்புகளிலும் எளிதில் வண்டு வந்துவிடும். அதை தடுக்க காய்ந்த வேப்பங்குச்சியை அதில் போட்டு வையுங்கள். எவ்வளவு வருஷமானாலும் வண்டு வராது.

*எண்ணெய்யை பிளாஸ்டிக் கேன்களில் ஊற்றி வைக்கக்கூடாது. சில்வர்களில் எண்ணெய் தூக்குகள் கிடைக்கும் அதில் ஊற்றிக்கொள்ளலாம்.

* தாளிக்கும் பொருள்களை எளிதில் வசதியாக எடுப்பதற்கு 6குழிகள் உள்ள டப்பாக்கள் கிடைக்கின்றன. அதில் கொட்டி வைத்துக் கொண்டால் ஒரே நேரத்தில் தேவையான பொருளை எடுத்து தாளிக்கலாம்.

* முடிந்தவரை தினமும் காய்கறிகளை வாங்கி சமையுங்கள். இதனால் நமக்கு பச்சை சத்துக்கள் கிடைக்கும். முடியாமல் இருப்பவர்கள் வாரத்திற்கு இரு முறை வாங்கி குளிர்சாதனப் பெட்டியில் சேகரித்து வைத்துக்கொண்டு சமையுங்கள்.

*வெங்காயம், பூண்டு ஆகிய பொருள்களை வெயிலில் உலர்த்தி பிளாஸ்டிக்கில் 3பகுதியாக உள்ள ஸ்டான்டில் கொட்டி வையுங்கள். இதனால் சீக்கிரம் அழுகி போகாது. தக்காளி மற்றும் கிழங்கு வகைகளைக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கத் தேவையில்லை. இதே பிளாஸ்டிக் ஸ்டான்டில் கொட்டி வையுங்கள்.

* பாத்திரங்களை நன்றாக கழுவி துணியால் துடைத்து அடுக்கி வையுங்கள். இரவு சேரும் பாத்திரங்களை இரவே விளக்கி வைத்து விடுங்கள்.

* பாத்திரம் விளக்கும் தொட்டியை தினமும் இரவு நேரங்களில் நன்றாக கழுவி பினாயில் போடுங்கள். இதனால் பூச்சிகள் மேலே வராது.

« பழைய வரவுகள்