அன்புள்ள தங்கச்சி!
பாகம் – 13
கார்த்திக் மிகவும் ஆவலோடு அப்பாவின் மூலமாவது பிரியாவின் ஆசையை நிறைவு செய்ய வேண்டும் என்று வாசலில் இரவு வரை காத்திருந்தான்! அதிக நேரம் காத்திருந்தும் தந்தை வரமால் இருந்ததும் சோர்வு தாளாமல் அப்படியே வாசலின் கதவு ஓரத்தில் தலை வைத்து உறங்கி விட்டான்.
கார்த்தி………கார்த்தி…… என்று அம்மா கத்தியவுடன் கார்த்திக் தூக்கத்தில் இருந்து மீண்டான். அம்மா…..அம்மா……..அப்பா வந்துட்டாங்களா என்று கூறிக்கொண்டே வீட்டீற்குள் ஓடினான். அம்மா அப்பா வந்துட்டாங்களா நான் அசந்து தூங்கிவிட்டேன் நான் பார்க்கவில்லை….எங்கே அப்பா என்று ஆவலுடன் அம்மாவின் முகத்தை பார்த்து கேட்டான்.
இல்லடா கார்த்தி. அப்பா இன்னும் வரவில்லை… வேலை முடிந்தும் இன்னும் ஏன் வரவில்லையோ, இன்னும் வேலை இருக்குமோ என்று தன் மனதில் ஆறுதல் கூறி
கார்த்திக்கை ஆசுவாசப் படுத்தினாள்….
இதனையெல்லாம் பிரியா பார்த்துக்கொண்டே இருந்தாள். அண்ணா….அண்ணா….. இங்கே வாயேன்.. என்று தான் படுத்திருந்த இடத்திற்கு கூப்பிட்டாள்… கார்த்திக்கும் சென்றான்…. ஏன் அண்ணா கவலை படுற…….. நான் ஒன்னும் ஏமாற்றம் அடையவில்லை…. எனக்கு செருப்பே வேண்டாம் அண்ணா நீ கவலைப் படாத என்று தன் கையால் கார்த்திக்கின் அழுகை வந்து காய்ந்து இருந்த கண்ணத்தை துடைத்தாள்.
இருவரும் பேசிக்கொண்டே அசந்து தூங்கி விட்டனர். அம்மாவும் எல்லா வேலையையும் பார்த்துவிட்டு கடைசி குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு அவளும் தூங்கச் சென்றாள்.
கார்த்திக்கின் அப்பாவிற்கு வேலை பார்த்த இடத்தில் அவர் நினைத்த தொகைக்கு மேலாகவே சம்பளம் கிடைத்தது. அது மட்டும் மல்லாமல் தொடர்ந்து இங்கே வேலை பார்த்தால் இதை மட பன்மடங்கு சம்பளம் தருகிறோம். நீ போய் உன் வீட்டில் சொல்லிவிட்டு வா என்று அவர்கள் கூறினார்கள். அவனும் சந்தோஷத்துடன் அவர் ஊருக்கு செல்ல பஸ் ஸ்டான்டிற்கு சென்றார்.
அப்போ கார்த்திக் சொன்னது நினைவுக்கு வந்தது. தங்கைக்கு செருப்பு வாங்கணும்ப்பா என்று கூறியது நினைவுக்கு வந்ததும் கடைத்தெருவுக்கு சென்றார். அங்கே பிரியாவுக்கு ஒரு செருப்பும் கார்த்திக்கு ஒரு செருப்பும் வாங்கி பையில் வைத்துக்கொண்டும் மனைவிக்கு ஒரு சேலையும் அனைவருக்கும் துணிமணிகளையும் இனிப்பு வகைகளையும் வாங்கிக் கொண்டு பஸ்ஸில் ஏறி உக்கார்ந்தார்.
வேலை பார்த்த அசதியில் அசந்து தூங்கினார். விடிந்ததும் அவர் ஊர் வந்தது. ஊர் வந்ததும் இறங்கி அவர் வீட்டிற்கு சென்றார். அங்கு பிரியாவும் கார்த்திக்கும் பல் துலக்கி கொண்டு இருந்தனர். அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுக்க வேண்டும் என்று நினைத்து அவர்களுக்கு தெரியாமல் பின்னே சென்று கையில் செருப்புடன் முன்னே வந்தார் அப்பா!
இருவரும் மகிழ்ச்சியில் எதுவும் பேசமுடியாமல் அப்பாவை கட்டிக்கொண்டார்கள். பிரியாவின் சந்தோஷத்தை கார்த்திக்கும் கார்த்திக்கின் சந்தோஷத்தை பிரியாவும் பார்த்து பார்த்து மகிழ்ச்சியுற்றனர். பின் வீட்டிற்குள் சென்று மனைவியுடன் அங்கு நடந்த எல்லா விஷயத்தையும் சொன்னார். தான் வாங்கி வந்ததை மனைவியுடன் கொடுத்து எல்லொருக்கும் கொடு. நான் குளித்துவிட்டு வருகிறேன் என்று நகர்ந்தார்.
அங்கு பிரியாவும் கார்த்திக்கும் சந்தோஷத்தில் சிரிக்காமல் அழுது கொண்டே விட்டனர். அண்ணே உன் செருப்பு சூப்பர்…… உடனே கார்த்திக்கும் பிரியா உன் செருப்பு சூப்பர்…. பிரியா………..கார்த்தி………..என்று அம்மா அழைத்தது காதில் விழ இருவரும் உள்ளே ஓடினர்………
அப்பா வாங்கிக்கொடுத்த துணிமணிகளை அவர்களுக்கு கொடுத்தாள் அம்மா… இருவரும் உடுத்திக்கொண்டு அப்பா வாங்கி வந்த பலகாரங்களையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் உண்டனர்……..
இனிமேல் இவர்களின் வாழ்க்கையில் துன்பம் மாறி இன்பம் மட்டுமே குடிபுகுந்தது. வழக்கம் போல் கார்த்திக்கும் பிரியாவும் தன் புது செருப்புடன் பள்ளிக்குச் சென்றனர். புதிய வீட்டிற்கும் குடி புகுந்தனர்….அப்பாவுக்கும் வேலை நிரந்தரமாகி சம்பளமும் அதிகம் கிடைத்தது. அனைவரும் மிகுந்த சந்தோஷத்துடன் இருந்தனர்…
முற்றும்………
ஆக்கம்: ரதி மகேஸ்வரன். ![]()
