சுரைக்காய் கூட்டு

இது மிகவும் உடலுக்கு நல்லது. குண்டாவர்கள் இதனை செய்து சாப்பிட்டால் உடம்பு குறையும். இதனுடன் சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் என அனைத்து வகை சாதங்களுடன் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். சப்பாத்தி, இட்லி, தோசை ஆகியவற்றுடனும் சேர்த்து சாப்பிடலாம். இதனை நீங்களும் செய்து பாருங்கள்.

தேவையான பொருள்கள்:

  • சுரைக்காய் – 1/4கிலோ
  • பாசிப்பருப்பு – 1கையளவு
  • சின்ன வெங்காயம் – 1/4 பொடியாக நறுக்கியது
  • பச்சைமிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
  • காய்ந்தமிளகாய் – 2
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • சீரகம் – சிறிதளவு
  • மஞ்சள் தூள் – சிறிதளவு
  • கடுகு, உளுந்தம் பருப்பு – சிறிதளவு
  • தண்ணீர் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • நல்லெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

  • சுரைக்காயில் உள்ள விதையை எடுத்துவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • சுரைக்காயையும் பாசிப்பருப்பையும் நன்கு கழுவி குக்கரில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து 1 விசில் வந்தவுடன் தனியே எடுத்து வைக்கவும்.
  • பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்தது கடுகை போட்டு வெடித்ததும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்நிறம் வரும் வரை வறுக்கவும்.
  • பொன்நிறம் வந்தவுடன் காய்ந்தமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு பொன்நிறம் வரும் வரை வதக்கவும்.
  • நன்கு வதக்கியவுடன் அதனுடன் வேகவைத்த கலவை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 1கொதி வந்தவுடன் இறக்கவும்.
  • சுவையான சுரைக்காய் கூட்டு தயார்.

பாசிப்பருப்பு சாம்பார்

சாம்பார் என்றால் துவரம் பருப்பில் தான் வைப்பார்கள். துவரம்பருப்பை உணவில் அதிகம் சேர்க்கக்கூடாது. பாசிப்பருப்பை சேர்த்து சாம்பார் வைக்கலாம். இதனால் உடலிற்கு குளிர்ச்சியை தரும். நன்கு ஜீரணமும் ஆகும். இதனை செய்வது எளிது தான். நீங்களும் செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

  • பாசிப்பருப்பு – 2கப்
  • சின்னவெங்காய் – 1/2கப்
  • நாட்டுத்தக்காளி – 2
  • பச்சைமிளகாய் – 2 (இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்)
  • சோம்பு – சிறிதளவு
  • சீரகம் – சிறிதளவு
  • கடுகு, உளூந்தம் பருப்பு – சிறிதளவு
  • காய்ந்த மிளகாய் – சிறிதளவு
  • பெருங்காயத் தூள் – சிறிதளவு
  • புளித்தண்ணீர் – 1/4கப்
  • தண்ணீர் – தேவையான அளவு
  • கொத்தமல்லி இலை – சிறிதளவு
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • சாம்பார் பொடி – 1ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • நல்லெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

  • குக்கரில் பாசிப்பருப்பை போட்டு 1 கொதிவந்தவுடன் சின்னவெங்காயம், தக்காளி( கையில் பிசைந்து போடவும்), பச்சைமிளகாய், கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்து 3விசில் வந்தவுடன் இறக்கிக் கொள்ளவும்.
  • பின்பு குக்கரில் இருந்து இறக்கி அதனுடன் புளித்தண்ணீர், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து நன்கு கொத்திக்கவிடவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகை போடவும்.
  • கடுகு வெடித்தவுடன் சோம்பு, சீரகம், உளுந்தம்பருப்பு, காய்ந்தமிளகாய் ஆகியவற்றை சேர்த்து பொன்நிறமாக வந்தவுடன் பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொதித்த சாம்பாரில் கொட்டவும்.
  • கொட்டியவுடன் மூடி வைத்துக் கொள்ளவும். சிறிது நேரம் கழித்து மூடியை திறந்து மேலாக கொத்தமல்லி தழையை தூவி பரிமாறவும்.
  • சுவையான பாசிப்பருப்பு சாம்பார் தயார்.



குறிப்பு:
இதில் காய்கறிகளும் சேர்க்கலாம். உதாரணமாக காரட், முருங்கைக்காய், பூசணிக்காய், வதக்கிய முள்ளங்கி, வதக்கிய வெண்டைக்காய், அவரைக்காய் ஆகியவற்றையும் சேர்க்கலாம். இதனை பருப்பு வேகவைக்கும் போதே சேர்த்து போட்டு வேகவைத்து பின்பு புளித்தண்ணீர் விட்டு சாம்பார் பொடி, தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவைத்து தாளித்து கொட்டவும்.

« பழைய வரவுகள்