- சாப் பாட்டு பொட்டலம் கட்டப் போகிறீர்களா? சாப்பாட்டைப் பொட்டலமாக கட்டும்போது வாழை இலையை பின்புறமாகத் திருப்பி தணலில் லேசாகக் காட்டியபின்னர் கட்டினால் இலை கிழியாமல் இருக்கும்.
- முருங் கைக் கீரை சுண்டல் செய்வதற்கு முதல் நாளே முருங்கைக் கீரை இலைகளை ஆய்ந்து வைக்கவேண்டாம், கீரையை ஒரு துணியில் சுற்றிவைத்தால் மறுநாள் இலைகள் தனியாக உதிர்ந்துவிடும். காம்புகளை மட்டும் எடுத்துவிட்டு சுண்டல் செய்து விடலாம்.
- வெங்காயத் தின் மீது லேசாக எண்ணெய் தடவி சற்று நேரம் வெயிலில் காயவைத்துப் பின் முறத்தில் போட்டுப் புடைத்தால் எளிதாக மேல் தோல் அகன்றுவிடும்.
தினமணி
