
படத்தைப் பற்றி சில தகவல்கள்:
இந்த படம் மலையாளம் ‘வடக்கி நோக்கி யந்திரம்’ படத்தின் remix ஆகும்.
இதில் ஹீரோவாக கருணாஸ், ஹீரோயினியாக கார்த்திகா, அம்மாவாக சரண்யா.
புதிய இயக்குநர் சிவசண்முகன்! நன்றாக கதைக்கு ஏற்றாற்போல் நடிகன் நடிகைகளை தேர்ந்தெடுத்துள்ளார்!
இந்த படத்தின் பாடல்களில் சில பாடல்கள் பிரமாதம்!
கதை சுருக்கம்:
கருப்பான ஆணுக்கு சிவப்பான பெண்ணை கல்யாணம் பண்ணி வைத்தால் என்ன என்ன பிரச்சனை வரும் என்பதை நகைச்சுவையுடன் யதார்த்தமாக கூறியுள்ளார் இயக்குனர்! இந்த கதாபாத்திரம் கருணாஸ்க்கும் கார்த்திகாவும் ரொம்பவே பொறுந்தியுள்ளது.
மிகவும் கருப்பான இளைஞனான கருணாஸுக்கு பொன்னு பார்க்கிறார்கள். இவர் கருப்பாக இருப்பதால் யாரும் மணக்க முன் வரவில்லை. கருப்பான பெண்கள் கூட கட்டிக்கொள்ள முன்வரவில்லை. கடைசியாக நம் ஹீரோயினியை பெண் கேட்டு போகிறார்கள் அம்மாவும் மகனும். அவள் ரொம்ப சிவப்பாக இருக்கிறாள்! என்னை கட்டிக்கொள்ள மாட்டாள்! வாம்மா போகலாம் என்று சொல்லும் போது அவள் எனக்கு சம்மதம் என்று சொல்ல கருணாஸ் சந்தோஷத்தில் துள்ளுகிறார். இருவருக்கும் திருமணமும் முடிந்தது. நன்றாக வாழ்க்கை நடந்து கொண்டிருக்கும் போது மனைவி மேல் சந்தேகம் வர அதனால் நிறைய பிரச்சனைகள் வருகிறது. இதனை எப்படி கார்த்திகா எதிர்கொள்கிறார்? கருணாஸ் மாறுவாரா! என்பது தான் கதையே!

