என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன் – பானா காத்தாடி

படம்: பானா காத்தாடி
பாடல்: என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: சாதனா சர்கம்
வரிகள்: நா. முத்துக்குமார்

என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
காதலென உயிரும் சொன்னதன்பே
காதலென உயிரும் சொன்னதன்பே

என் பேரில் ஒரு பேர் சேர்ந்ததந்த
பேர் என்னவென கேட்டேன்
என் தீவில் ஒரு கால் வந்ததந்த
ஆள் எங்கு என கேட்டேன்
கண்டுபிடி உள்ளம் சொன்னது
உன் இடத்தில் உருகி நின்றது
காதலென உயிரும் சொன்னதன்பே
காதலென உயிரும் சொன்னதன்பே

சில நேரத்தில் நம் பார்வைகள்
தவறாகவே எடை போடுமே
மழை நேரத்தில் விழி ஓரத்தில்
இருளாகவே உள்தோன்றுமே
எதையும் எடை போடவே
இதயம் தடையா இல்லை
புரிந்ததும் மறந்ததேன் உன்னிடம்
என்னை நீயும் மாற்றினாய்
எங்கும் நிறம் கூட்டினாய்
என் மனம் இல்லையே என்னிடம்

என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
காதலென உயிரும் சொன்னதன்பே
காதலென உயிரும் சொன்னதன்பே

உன்னை பார்த்ததும் அந்நாளிலே
காதல் நெஞ்சில் வரவே இல்லை
எதிர்க்காற்றிலே குடை போலவே
சாய்ந்தேன் இன்று எழவே இல்லை
இரவில் உறக்கம் இல்லை
பகலில் வெளிச்சம் இல்லை
காதலில் கரைவதும் ஒரு சுகம்
எதற்கு பார்த்தேன் என்றோ
இன்று புரிந்ததேனடா
என்னை ஏற்றுக்கொள் முழுவதும்

என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
காதலென உயிரும் சொன்னதன்பே
காதலென உயிரும் சொன்னதன்பே

ஒரு முறை இருமுறை பலமுறை கேட்டபின் – களவானி

படம்: களவானி
பாடல்: ஒரு முறை இருமுறை பலமுறை கேட்டபின்


ஆண்:
ஒரு முறை இருமுறை பலமுறை கேட்டபின்
இதயத்தின் கிளையினில் கூத்தாட
அடிமுதல் நுனிவரை இவளது நினைவுகள்
ஆஹா அழகாய்த் தொலைந்தேனே

குழு:
டொம்ம டொம்மா டெம்ம டொம்ம டொம்மா
டொம்ம டொம்மா டொம்மடா டொம்மா
டொம்ம டொம்மா டெம்ம டொம்ம டொம்மா
டொம்ம டொம்மா டொம்மடா டொம்மா

பெண்:
சி சின்னச் சின்னத்தூரல் வந்து நெஞ்சிக்குள்ளே
முத்தமிடும் மாயம் என்ன என்ன
சொல்லிக் கொடுடா
கத்தியின்றி இரத்தம்மின்றி
காதல் வந்து யுத்தமிடும்
காயம் காயம் இன்பமென்று சொல்லிக் கொடுடா

ஆண்:
மேகம் போலே நான் மேலே பறப்பேன்
வானம் கீழே நான் உள்ளே நுழைந்தேன்
காதல் தீண்டி நான் உன்னைப் பார்த்தேன்
நாளும் தாண்டி உன் கண்ணைப் பார்த்தேன்

குழு:
டொம்ம டொம்மா டெம்ம டொம்ம டொம்மா
டொம்ம டொம்மா டொம்மடா டொம்மா
டொம்ம டொம்மா டெம்ம டொம்ம டொம்மா
டொம்ம டொம்மா டொம்மடா டொம்மா

ஆண்:
கொலுசுக்குள் வந்துவிடவா
நடக்கையில் சத்தமிடவா
உன் பாதம் தீண்டிக்கிடப்பேனே உயிரே…
கம்மலினில் தொங்கிவிடவா
அங்கேயேத் தங்கிவிடவா
உன் கண்ணம் தீண்டிக்கிடப்பேனே கிளியே…

பெண்:
குறும்பாலே ஜெயித்தானே
களவாடிக் கவிழ்த்தானே
கனவாலே என்னைக் கொள்கின்றான்…
கண்ணாலே இழுத்தானே
குறும்பாட்டைப் பிடித்தானே
அய்யய்யோ என்னைக் கொள்கின்றான்…

குழு:
டொம்ம டொம்மா டெம்ம டொம்ம டொம்மா
டொம்ம டொம்மா டொம்மடா டொம்மா
டொம்ம டொம்மா டெம்ம டொம்ம டொம்மா
டொம்ம டொம்மா டொம்மடா டொம்மா

« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers