கேரட் கீர்!

  • கேரட்டை தோல் சீவி நல்லா கழுவிக்குங்க.
  • கால் கிலோ கேரட்டுக்கு, மூணு பெரிய சில்லு தேங்காய் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணி விட்டு மிக்சில மையா அரைச்சுக்குங்க.
  • அதை காய்கறி வடிகட்டில போட்டு ஜூசை மட்டும் எடுத்து, தேவையான அளவு வெல்லம் (இரும்பு சத்து கிடைக்கும்), ரெண்டு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து குடிக்கக் கொடுங்க.
  • வெயில் நேரத்துல சாப்பிட பிடிக்காம குழந்தைங்க அடம்பிடிச்சாக்கூட, இந்த மாதிரி ஹெல்தி பானம், தேவையான சத்து கொடுத்து ஈடுகட்டிடும்.

நன்றி தினமலர்! smile.gif

பொட்டுக்கடலை கஞ்சி

தேவையானவை:

  • பொட்டுக் கடலை – 1 கப்
  • பால் – 1 கப்
  • சர்க்கரை – தேவையான அளவு.


செய்முறை:

  • பொட்டுக்கடலையை மிக்சியில் அரைத்து கொள்ளவும் அல்லது மிஷினில் அரைத்து கொள்ளவும்.
  • இந்த வேலைக்குப்பின் சலித்துக் கொள்ளவும்.
  • இந்த மாவில் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து, நன்கு கொதிக்கும் நீரை கொஞ்சம் ஊற்றி கரைத்து கொள்ளவும்.
  • இத்துடன், பால், சர்க்கரை சேர்த்து அருந்தலாம்.
  • கைக்குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்போது, பொட்டுக்கடலையை கஞ்சியில், பால் சேர்க்காமல் கொஞ்சம் தண்ணீராக காய்ச்சி கொடுக்கலாம்.
  • புரோட்டீன் சத்து நிறைந்தது இந்த கஞ்சி.

நன்றி தினமலர்! smile.gif

« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers