அழகான முகத்திலுள்ள சுருக்கமா?

வயதாக வயதாக முகச்சுருக்கம் ஏற்படுவது இயல்பு தான். ஆனால், நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில செயல்களை மேற்கொள்ளும் போது முகச் சுருக்கம் ஏற்படுவதை தாமதப்படுத்தலாம். அதே போல், சில செயல்கள் மூலம் முகத்தில் ஏற்படும் சுருக்கத்தை தவிர்க்கலாம். உங்கள் முகச்சுருக்கத்தை நீக்க எளிமையான டிப்ஸ் இதோ…

* சந்தனப்பொடியுடன், பன்னீர், கிளிசரின் ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் போல் குழைத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்துவர முகச் சுருக்கம் நீங்கும்.
* சிறிதளவு கடலை மாவுடன், கேரட் ஜூசை கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவவும். இப்படி செய்தால், நாளடைவில் முகச்சுருக்கம் நீங்கும். வறண்ட சருமம் உடையவர்கள், வெறும் கேரட்டை மட்டும் முகத்தில் தேய்த்து வர, முகச்சுருக்கம் உண்டாவது தாமதமாகும். அதே போல் கேரட் சாறுடன் தேன் கலந்து தடவி, சிறிது நேரம் கழித்து மென்மையான ஈரத் துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால், மெல்லிய சுருக்கங்கள் நீங்கும் வாய்ப்பு உள்ளது.
*வெங்காயத்தை அரைத்து அத்துடன் தேன் கலந்து முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்தாலும் முகச்சுருக்கம் மறையும். பப்பாளிப் பழத்தை நன்றாக அரைத்து அத்துடன் சில துளிகள் பால் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசலாம்.

*முட்டையின் வெள்ளைக்கருவுடன் தேனை கலந்து, பூச முகச்சுருக்கம் குறையும். அப்படி செய்யும் போது, கண்களை சுற்றியுள்ள பகுதிகளை தவிர்ப்பது நல்லது. இதே போல், வெள்ளரிச்சாறுடன், தேன் கலந்தும் முகத்தில் பூசலாம்.

*பாதாம் பருப்பை பவுடராக்கி, அத்துடன் சிறிதளவு சோயாமாவு மற்றும் பன்னீர் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இதனால் சுருக்கம் நீங்கும்.
*அடிக்கடி தக்காளி சாறு அல்லது பாதாம் எண்ணெய் அல்லது நன்றாக பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றை முகத்தில் தடவி வந்தால், விரைவில் சுருக்கம் உண்டாவது தாமதமாகும்.
* பாலேட்டுடன் பன்னீர் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். பதினைந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ சருமம் இறுக்கமாகி மென்மையாகி விடும். இவ்வாறு வாரத்திற்கு மூன்று தடவை செய்வது நல்ல பலன் தரும்.
* “ஓட்’மாவுடன் சந்தனப் பொடி மற்றும் பால் கலந்தோ அல்லது வெள்ளரி விதையை நன் றாக அரைத்து அத் துடன் பன்னீர் கலந்தோ முகத் தில் பூச சுருக்கம் மறையும்.
* அடிக்கடி நெற்றியை சுருக்கும் பழக்கம் உடையவர்கள், அந்த பழக்கத்தை தவிர்ப்பது நல்லது. இதனால், நெற்றியில் சுருக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

*அதிகமாக கோபப்படுபவர்களுக்கு விரைவிலேயே சுருக்கம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக, சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே கோபப்படுவதை குறைத் துக் கொள்ளுங்கள்.

முகம் பொலிவு பெற என்ன வழி?

* கடலை மாவுடன், பன்னீர் கலந்து முகத்தில் தடவி சில நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் மென்மையாக பொலிவுடன் காணப்படும்.

* ஆரஞ்சு பழச்சாறு, முல்தானி மட்டி, தக்காளிசாறு, பன்னீர் ஆகியவற்றுடன்,சந்தனப் பொடி மற்றும் கடலைமாவு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகம் பொலிவு பெறும்.

நன்றி தினமலர்! smile.gif

முகத்தில் எண்ணெய் வழிகிறதா?

எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? அக்னி வெயில் உங்கள் எண்ணெய் பசையை மேலும் அதிகரிக்கச் செய்து உங்கள் முக அழகை கெடுக்கிறதா? எண்ணெய் பசை நீங்கி அழகாக காட்சியளிக்க இதோ சில டிப்ஸ்…

* வெள்ளரிக்காயை, தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம். வெள்ளரிச் சாற்றுடன், பால் பவுடர் கலந்து தடவினாலும், எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும்.

* தக்காளி பழச்சாறை முகத்தில் தடவி காய்ந்த பின், கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். தக்காளியுடன், வெள்ளரிப்பழம் அல்லது ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்தும் கழுவலாம்.

* பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன், காரட் துருவலை கலந்து முகத்தில் தடவினால், அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.

* எண்ணெய் பசை சருமத்தினர், அடிக்கடி முகம் கழுவ வேண்டும். முகத்தை அலம்ப சோப்பிற்கு பதில் கடலைமாவை பயன்படுத்தலாம். இதனால், எண்ணெய் வழிவது குறைவதோடு, முகமும் பளபளப்பாக காட்சியளிக்கும்.

* எண்ணெய் பசை சருமம் உள்ள வர்கள், மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், எண்ணெய் வழிவது குறையும்.

* வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, சந்தன தூள், பாதாம் பவுடர், தயிர், உருளைகிழங்கு சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அவற்றை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு நாட்கள் வீதம் செய்து வந்தால், எண்ணெய் வழிவது குறையும்.

* சோளமாவுடன், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தின் எண்ணெய்ப்பசை நீங்கும்.

* எண்ணெய்ப் பசை சருமத்தினர், வெயிலில் சென்று விட்டு வீட்டிற்கு வந்ததும், சிறிது தயிர், கடலைமாவு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும்.

* எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சை சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு அவற்றை நன்றாக கலக்கி, முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும்.

* பப்பாளி கூழ், முல்தானி மட்டி, வேப்பிலை பொடி ஆகியவற்றை நன்றாக பசை போல் குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண் ணெய் தன்மை குறையும்.

முகத்தில் காணப்படும் ரோமங்கள் நீங்க…

* குப்பைமேனி இலை, வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து தேவையற்ற ரோமங்கள் உள்ள இடங்களில் தேய்க்க வேண்டும். அதே போல், வேப்பங்கொழுந்தை அரைத்தும் பூசலாம். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் தேவையற்ற ரோமங்கள் அகன்று விடும்.

* பச்சை பயிறை நன்றாக அரைத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், சிலருக்கு முகத்தில் காணப்படும் தேவையற்ற ரோமங்கள் உதிர்ந்து விடும். தினசரி மஞ்சள் தேய்த்து குளித்து வருவதாலும்,முகத்தில் ரோமங்கள் வளராது.

நன்றி தினமலர்! smile.gif

« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers