மாங்கனீசு சத்து

முளைவிட்ட தானியங்கள், அவரை, பருப்புகள்,தேயிலை, ஆட்டிறைச்சி, முட்டை, மீன் மற்றும் பால் உணவுகளில் மாங்கனீசு சத்து ஏராளமாக உள்ளது. நமக்கு அன்றாடம் இரண்டு முதல் எட்டு மில்லிகிராம் வரை மாங்கனீசு தேவைப்படுகிறது. ஆனால் நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் இரண்டு மில்லிகிராம் மாங்கனீசு மட்டுமே உள்ளது. மாங்கனீசு சத்து குறைப்பாட்டால் இதயநோய், புற்றுநோய், எலும்புமுறிவு ஏற்படுவதாகவும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குழந்தைகளும், சர்க்கரை நோயாளிகளும் மாங்கனீசு சத்து குறைபாட்டால் பாதிப்படைகின்றனர். நாம் அன்றாடம் உட்கொள்ளும் தேயிலையில் சற்று அதிகமாகவே மாங்கனீசு காணப்படுகிறது. ஆகையால்தான் சமீபத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தேநீர் அதிகம் உட்கொள்பவர்களுக்கு புற்றுநோயின் தாக்கம் குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.

நன்றி தினமலர்! smile.gif

வைட்டமின் ஏ

வைட்டமின் ஏ சத்து மீனில் மட்டுமே இருப்பதாக எல்லோரும் எண்ணுகின்றனர். சைவ உணவிலும் வைட்டமின் ஏ அதிகமாக காணப்படுகிறது. சிவப்பு நிற காய்கள் மற்றும் கீரைகளிலுள்ள கரோட்டின் என்னும் பொருள் செரிமான ஊக்குவிப்பு நீர்களுடன் சேர்ந்து வைட்டமின் ஏ ஆக குடலில் மாற்றமடைகிறது. உதாரணமாக முட்டைக்கோஸ், லச்சக்கட்டை கீரை, தண்டுக்கீரை, பசலைக்கீரை, முருங்கைக்கீரை, கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியில் கரோட்டின்கள் அதிகம் காணப்படுகின்றன. இவை தவிர வேப்பம்பழம், மாம்பழம், பப்பாளி, ஆரஞ்சு, பழுத்த தக்காளி மற்றும் காரட்களிலும் பீட்டா வகை கரோட்டின்கள் உள்ளன. மேலும் பசும்பால், எருமைப்பால் மற்றும் ஆட்டுப்பாலிலும் வைட்டமின் ஏ அதிகம் காணப்படுகிறது.

நன்றி தினமலர்! smile.gif

« பழைய வரவுகள்