கூந்தல் உதிர்வதை தடுக்க…

http://www.thedailygreen.com/cm/thedailygreen/images/use-ketchup-lush-hair-lg.jpg

சராசரியாக ஒவ்வொருவரின் தலையிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முடிகள் காணப்படும். முடி உதிர்வது என்பது பெண்கள், ஆண்கள் என இருபாலருக்கும் உள்ள பொதுவான பிரச்னை.

இந்த முடி உதிரும் பிரச்னை ஏற்படும் போது, நாம் அனைவருமே மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்வதில் தான் அதிக அக்கறை காட்டுகிறோம். இயற்கையில் கிடைக்கும் சில பொருட்களைக் கொண்டும் கூந்தல் உதிர்வதைத் தடுக்க முடியும். இதோ சில டிப்ஸ்…

வெந்தயம்:
கூந்தல் உதிரும் பிரச்னை உடைய பெண்கள், சிறிதளவு வெந்தயத்தை 3 முதல் 4 மணி நேரம் ஊற வைத்து அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம். வாரத்திற்கு இரு முறை இவ்வாறு செய்ய, கூந்தல் உதிர்வது மட்டுப்படும்.

எள்ளுச்செடி:
எள்ளுச் செடியின் இலைகள் சிலவற்றை தண்ணீரில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் ஆறவைக்கவும். இந்த தண்ணீரை தலையில் மசாஜ் செய்வதற்கும், தலையில் தேய்த்து குளிப்பதற்கும் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதால் கூந்தல் உதிர்வு மற்றும் கூந்தலில் விரைவிலேயே நரை ஏற்படுவது போன்றவை தடுக்கப்படும்.

ஆலிவ் ஆயில்:
ஆலிவ் ஆயில் பயன்படுத்தி முறையாக மசாஜ் செய்தால், அது கூந்தலை வலுப்படுத்துவதுடன், கூந்தல் உதிர்வு மற்றும் முடி நரைத்தல் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.

இது பொடுகை நீக்கும் இயற்கையான தீர்வாகவும் அமைகிறது. ஆலிவ் ஆயிலுடன் சம அளவு பாதாம் எண்ணெய் அல்லது ரோஸ்மேரி ஆயில் போன்றவற்றை கலந்தும் பயன்படுத்தலாம். இதுவும் கூந்தல் பராமரிப்பிற்கு சிறந்ததாக கருதப்படுகிறது.

பசும்பால்:
புதிதாக காய்ச்சப் பட்ட பசும்பாலால் தலையில் மசாஜ் செய்து சிறிது நேரம் ஊறவிட வேண்டும். பின் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர, நாளடைவில் கூந்தல் உதிர்தல் குறைந்து விடும். இதேபோல் பிரஷ் கிரீம் அல்லது வெண்ணெய் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.

பூண்டு:

கூந்தல் உதிர்தல் பிரச்னைக்கு பூண்டு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. பூண்டு ஆயில் மற்றும் பூண்டு சாறு ஆகியவற்றால் தலையில் நன்கு மசாஜ் செய்து வந்தால் கூந்தலின் அடர்த்தி அதிகரிக்கும். உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வது கூந்தல் வளர்ச்சிக்கு துணை புரியும்.


சீரகம்:

சீரகத்தை நன்கு கறுப்பாகும் வரை வறுத்து பொடி செய்து பின் அதை ஆலிவ் ஆயிலுடன் கலந்து வைக்கவும். இந்த எண்ணெயை, தலையில் தேய்க்கும் முன் நன்கு கலக்கி விட்டு தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

பின்னர் சிறிது நேரம் நன்றாக ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முடி உதிர்வது நாளடைவில் குறையும்.

தேங்காய் பால்:

தேங்காய்ப் பாலை தலையில் தேய்த்துவந்தால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். தேங்காய் துருவலை அரைத்து பால் எடுத்து அதை தண்ணீரில் கலந்து, மிதமாக சூடுபடுத்தி தலையில் தேய்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்த பின், குளிக்க வேண்டும். இவ்வாறு, தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் நல்ல பலன் கிடைக்கும்.

நன்றி தினமலர்! rolleyes.gif

16 மறுமொழிகள்

  1. vellingiri சொன்னது,

    செப்டம்பர் 7, 2009 இல் 7:12 மு.பகல்

    தங்கள் போஸ்டிங் அற்புதமாக உள்ளது. இன்னும் நிறைய போஸ்ட் பண்ணுங்க.

  2. தேவி சொன்னது,

    செப்டம்பர் 13, 2009 இல் 5:18 பிற்பகல்

    நன்றி vellingiri!

  3. hasana சொன்னது,

    செப்டம்பர் 27, 2009 இல் 8:56 மு.பகல்

    very good searching

  4. தேவி சொன்னது,

    செப்டம்பர் 30, 2009 இல் 6:20 பிற்பகல்

    நானும் பயன்பெற்றேன்!
    பிறரும் பயன்பெறட்டும் என்று பதிந்தேன்!
    தங்களுக்கும் நன்றி hasana :)

  5. jahir சொன்னது,

    April 21, 2010 இல் 6:39 மு.பகல்

    it is very simple and powerful solution

  6. jai சொன்னது,

    மே 27, 2010 இல் 3:10 மு.பகல்

    nallairukku

  7. SURESH KUMAR சொன்னது,

    ஜூன் 18, 2010 இல் 9:24 மு.பகல்

    super idea frm suresh singapore 81845411

  8. manjula சொன்னது,

    ஜூலை 28, 2010 இல் 12:23 பிற்பகல்

    hw can we avoid split end hairs?

  9. தேவி சொன்னது,

    ஆகஸ்ட் 2, 2010 இல் 3:57 பிற்பகல்

    மாதத்திற்கு ஒருமுறையாவது முடியை நுனியில் 1″ அளவு கத்தரிக்க வேண்டும்
    தினமும் எண்ணெய் தேய்க்க வேண்டும்.
    வாரத்தில் இரண்டு தடவையாவது 1/2மணிநேரம் நல்லெண்ணையை தலையில் தேய்த்து ஊறவைத்து தலைக்கு குளிக்கவும்…
    ஷாம்பு போட்டால் கட்டாயம் கன்டிஷனர் போட வேண்டும்..

    எனக்கு தெரிந்த டிப்ஸ் மஞ்சுளா…

  10. TAMILARASAN சொன்னது,

    செப்டம்பர் 7, 2010 இல் 6:56 மு.பகல்

    this side is very useful.please send me useful messages.

  11. bakyaraj சொன்னது,

    செப்டம்பர் 11, 2010 இல் 7:06 பிற்பகல்

    tell me some more tips sir/madam.i’m 25 years old..Not married..i’m losing my hair everyday one by one.. i don’t know any solution to prevent the hair fall..My freiends and relatives kidding me..is there any solution to avoid falling of my remaining hair…please guys..give me some more ideas..

  12. தேவி சொன்னது,

    செப்டம்பர் 23, 2010 இல் 3:49 பிற்பகல்

    நல்ல டாக்டரிடம் செல்லுங்கள்… அப்போது நிரந்திர தீர்வு கிடைக்கும்!

  13. sathya சொன்னது,

    மார்ச் 4, 2011 இல் 7:35 மு.பகல்

    I had lost my hair in head.Daily so many hair in lost. Pls give any suggestion for long&strong hair.

  14. தேவி சொன்னது,

    மார்ச் 5, 2011 இல் 3:47 மு.பகல்

    தினமும் முடி கொட்டுவது இயல்பு…
    அதிகமாக இருந்தால் தான் டாக்டர் அல்லது இயற்கை வைத்தியமுறையை பின்பற்றலாம் தோழி!

  15. sandhiya சொன்னது,

    April 25, 2011 இல் 6:31 பிற்பகல்

    Very useful tips….. thanks for ur tips…

  16. mano சொன்னது,

    நவம்பர் 24, 2011 இல் 11:09 மு.பகல்

    hi madam, how to prepare shikakai? plz tell me


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers