*ரவா தோசை செய் யும் போது அத்துடன் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன்கள் கடலைமாவு சேர்த்து செய்தால் தோசை மொறுமொறுவென்று இருக்கும்.
*தேங்காய் சட்னி செய்யும் போது புளிக்கு பதிலாக சிறிது மாங்காய் சேர்த்து அரைத்தால் வித் தியாசமான சுவையுடன் இருக்கும். அதே போல் தேங்காய் சட் னிக்கு பச்சை மிளகாயை எண் ணெயில் வதக்கிய பின் அரைத்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
* இட்லிக்கான அரிசியுடன் சிறிது அவல் சேர்த்து ஊறவைத்து அரைத்தால், இட்லி பஞ்சு போன்று இருக்கும்.
*கிழங்குகளை வேக வைக்கும் முன், உப்பு கலந்த நீரில் ஊறவைத்த பின் வேக வைத்தால் விரைவில் வெந்து விடும்.
* வடைக்கு அரைத்த மாவை சிறிது எடுத்து தண்ணீரில் போட்டதும், அது தண்ணீரில் மிதந்தால் மாவு பதமாக இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம்.
* பாகற்காயை சிறிது நேரம் உப்பு நீரில் ஊறவைத்த பின் சமைத்தால், கசப்பு சுவை குறைவாக இருக்கும். அல்லது பாகற் காயை வேக வைத்து தண்ணீரை வடித்த பின் வதக்கினாலும் கசப்பு சுவை குறைவாக இருக் கும்.
* சுண்டல் செய்வதற்காக, பட்டாணி வேக வைக்கும் போது குழைந்துவிட்டால், அதில் ஐஸ்வாட்டர் ஊற்றி சிறிது நேரம் வைத்திருந்து பின் சுண்டல் செய்தால் நன்றாக இருக் கும்.
*கொழுக் கட்டைக் கான மாவுடன் சிறிது பால் சேர்த்து பிசைந்து செய்தால் கொழுக் கட்டை விரியாமல் இருக்கும்.
*ஆம்லெட் செய்ய முட்டை கலக் கும் போது, சிறிது வெண் ணெய் அல் லது சில துளி பால் சேர்த்து கலந்து செய் தால் சுவை கூடுதலாக இருக்கும்.
*மோர் குழம்பில் சிறிது கடுகை அரைத்து விட் டால் சுவையும் மணமும் நன் றாக இருக் கும்.
அடைக்கு அரைக் கும் போது சிறிதளவு ஜவ்வரிசி சேர்த்து அரைத்தால் அடை மொறுமொறுப்பாக இருக் கும். அதேபோல், துவரம்பருப்பு, கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, உளுந் தம்பருப்பு ஆகியவற்றை சமஅளவிலும் அரிசி கொஞ்சமாகவும் போட்டு செய்தாலும் அடை மொறுமொறுப்பாக இருக்கும்.
*உருளைக்கிழங்கு வறுக்கும் போது அத்துடன் சிறிது அரிசி மாவு தூவினால் பொரியல் மொறுமொறுப்பாக இருக் கும்.
*சேப் பங்கிழங் கை தோல் உரித்து பிரிட்ஜில் வைத்து சிறிதுநேரம் கழித்து சமைத்தால் கொழகொழப்பு தன்மை இல்லாமல் இருக்கும்.
*கூட்டு செய்யும் போது அதில் வேர்க்கடலையை ஒன்றிரண்டாக அரைத்து போட்டால் சுவை கூடுதலாக இருக் கும்.
*குழம்பில் உள்ள உப்பை எடுக்க தக்காளிப் பழத்தை நறுக்கி போட்டு கொதிக்க வைத்தால் உப்பு குறைந்துவிடும்.
*குருமா, கூட்டு போன்றவை செய்யும் போது தண்ணீர் அதிகமாகி விட்டதா, கவலை வேண்டாம்? அத்துடன் சிறிது பொட்டுக்கடலை யை நைசாக அரைத்து சேர்த்தால் கெட்டியாகி விடும்.
*தயிர் பச்சடி நீர்த் துப் போய் விட் டால், அத் துடன் சிறிது வேர்க்கடலைப் பருப்பை வறுத்துப் நைசாக அரைத்து போட்டால் கெட்டியாகி விடும்.
*கடலைப் பருப்பை வறுத்து, பின் போளி செய்தால், போளி ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
*கோதுமை அல்வா செய்யும் போது, பதம் தவறி தண்ணீர் அதிகமாகிவிட்டால், அதில் சிறிதளவு சோளமாவைச் சேர்க்க அல்வா கெட்டியாகும். சுவையும் நன்றாக இருக்கும்.
*வெங்காயத் தயிர் பச்சடி செய்யும் போது, கெட்டியான தேங்காய் பால் சிறிது சேர்க்க பச் சடி மிகவும் சுவையாக இருக்கும்.
*ஜவ்வரிசி வடகம் செய்யும் போது, தேவையான அளவு எலுமிச்சம்பழச் சாறு, ஓமம் சேர்த்து செய்ய மிகவும் சுவையாக இருக்கும்.
நன்றி தினமலர்!